இந்தியாவின் தொலைதொடர்புத்துறை ஜாம்பவானான ஜியோ நிறுவனம், ஜியோ பிரவுசர் (Jio Browser) என்னும் தேடுபொறி ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் கோடிக்கணக்கில் வாடிக்கையாளர்களைக்கொண்ட நிறுவனத்தின் இந்தப் புதிய பிரவுசரை ஏராளமானோர் தரவிறக்கி வருகின்றனர். கூகுள் போலவே எல்லா வசதிகளையும் கொண்டிருப்பதால் கூகுளிற்குப் போட்டியாக இந்த பிரவுசர் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாக சந்தை வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். தற்போதுவரை இந்த பிரவுசரை பயன்படுத்திய வாடிக்கையாளர்கள் இதற்கு 4.4 ரேட்டிங் அளித்திருக்கிறார்கள். இதனால் இந்த பிரவுசர் ஜியோ நிறுவனத்திற்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித்தரும் என நம்பப்படுகிறது.

ஜியோ பிரவுசர்
4.8 Mb அளவுள்ள இந்த பிரவுசரை கூகுள் ப்ளே மூலம் பெற முடியும். குரோமில் இருப்பது போலவே செய்திகள் மற்றும் வீடியோக்களை நண்பர்களுக்கு பகிரும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ், ஆங்கிலம், கன்னடம், தெலுங்கு,பெங்காலி, மலையாளம், ஹிந்தி, குஜராத்தி, மற்றும் மராத்தி என மொத்தம் 8 மொழிகளில் இந்த பிரவுசர் இயங்க வல்லது. ஆங்கிலத்திலிருந்து நமக்கு விருப்பமுடைய மொழிக்கு செயலியை மாற்றிய பிறகு, அந்த பிரவுஸர் தானாகவே நமது விருப்பமுடைய மொழிகளுக்கு மற்ற எல்லா செயல்பாடுகளையும் மாற்றிவிடும். மாற்றத்திற்குப் பிறகு வரும் செய்திகளும் தானாகவே விருப்பப்பட்ட மொழிகளுக்கு மாறிவிடும். குகூள், ஃபேஸ்புக் என அனைத்து தளங்களையும் நமக்கு விருப்பமுடைய மொழிகளில் பார்க்கும் வசதியும் இதில் உண்டு.

செய்திகள், தேடல்கள்
யூசி பிரவுசரில் இருக்கும் யூசி நியுஸ் போலவே ஜியோ நியூஸ் இந்த பிரவுசரில் இடம்பெற்றுள்ளது. இதன்மூலம் பல உள்நாட்டு, வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் நாம் பெற முடியும். மேலும் ஆன்லைன் ஷாப்பிங் தளங்களான ப்ளிப்கார்ட், அமேசான் போன்றவைகளையும், புக் மை ஷோ மற்றும் என்.டி.டி.வி ஆகிய இணையதளங்களையும் முகப்புத்திரையிலேயே காணலாம். கூகுளில் உள்ளதைப்போல் “வாய்ஸ் செர்ச்” வசதியும் இதில் உள்ளது. ரிலையன்ஸ் ஜியோவைப் பொறுத்தவரை இந்த பிரவுசர் அதிவகத்தில் இயங்கவல்லது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.