28.5 C
Chennai
Tuesday, September 29, 2020
Home தொழில்நுட்பம் செல்போன் டிக்டாக், ஹலோ உள்பட 59 சீன மொபைல் செயலிகளுக்கு தடை! - மத்திய அரசு நடவடிக்கை!

டிக்டாக், ஹலோ உள்பட 59 சீன மொபைல் செயலிகளுக்கு தடை! – மத்திய அரசு நடவடிக்கை!

NeoTamil.com - ல் எழுதப்படும் கட்டுரைகள் DMCA Copyright பெற்றவை. பதிவுகளை நகலெடுத்தல், தழுவுதல் ஆகிய செயல்களைக் கட்டுப்படுத்தக்கூடியது. பதிவுகளை பிற தளங்களில் அல்லது வடிவங்களில் (Audio, Video) பயன்படுத்த NeoTamil.com -ன் அனுமதி பெறுவது அவசியம்.

NeoTamil on Google News

இந்தியாவில் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தப்படும் Tiktok, Helo, ShareIt உள்பட 59 ஆப்களுக்கு அதிரடியாக மத்திய அரசு  தடை விதித்துள்ளது. இந்தியாவுக்கும், சீனாவுக்கும் கடந்த ஜூன் 15 ம் தேதி அன்று எல்லையில் சண்டை நடந்தது. தொடர்ந்து போர் பதட்டம் நிலவியது. இந்நிலையில் எல்லையில் இப்போதும் கூட பதட்டம் தொடர்கிறது. இதற்கு பொருளாதாரஅடிப்படையில் தக்க பதிலடி கொடுக்கும் வகையில் மத்திய அரசு இந்த அதிரடி நடவடிக்கையைஎடுத்துள்ளதாக தெரிகிறது. 

இந்திய சைபர் க்ரைம் ஒத்துழைப்பு மையம் மற்றும் உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையை தொடர்ந்து 59 செயலிகள் தடை செய்யப்படுவதாக தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னரே, இந்த செயலிகள் மீது பயனர்களின் தனிநபர் அந்தரங்க தகவல்கள் திருட்டு, விதிகளுக்கு மாறாக நடப்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் எழுந்தது குறிப்பிடத்தக்கது. இந்த செயலிகள் பலவும் சீனாவை மையமாக கொண்டு இயங்கிவருவன.

இந்த 59 ஆப்களின் பாதுகாப்பு அம்சங்கள், பயனர்களின் அந்ததரங்க தகவல்கள் பாதுகாப்பு உள்ளிட்டவை தொடர்பான கருத்துக்களை M.P-க்களிடம் இருந்து பெற்று, தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஆய்வு செய்தது.

சீனா தொடர்புடைய ஆப்கள் இந்திய இறையாண்மை மற்றும் இந்திய குடிமக்களின் அந்தரங்க தகவல்களை பாதிக்கும் வகையில் இருக்கின்றன என்று எம்பிக்கள் குற்றம் சாட்டியதால் இந்த நடிவடிக்கை என மத்திய அரசு செய்திக்குறிப்பில் சொல்லப்பட்டுள்ளது. இந்தியாவில் செல்போன் பயன்படுத்தும் கோடிக்கணக்கான பயனாளர்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது எனவும் அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டிருந்தது.

மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் தடை செய்துள்ள சீனா தொடர்பான 59 செயலிகள் இவை தான்…

1. TikTok
2. Shareit
3. Kwai
4. UC Browser
5. Baidu map
6. Shein
7. Clash of Kings
8. DU battery saver
9. Helo
10. Likee
11. YouCam makeup
12. Mi Community
13. CM Browsers
14. Virus Cleaner
15. APUS Browser
16. ROMWE
17. Club Factory
18. Newsdog
19. Beauty Plus
20. WeChat
21. UC News
22. QQ Mail
23. Weibo
24. Xender
25. QQ Music
26. QQ Newsfeed
27. Bigo Live
28. SelfieCity
29. Mail Master
30. Parallel Space
31. Mi Video Call — Xiaomi
32. WeSync
33. ES File Explorer
34. Viva Video — QU Video Inc
35. Meitu
36. Vigo Video
37. New Video Status
38. DU Recorder
39. Vault- Hide
40. Cache Cleaner DU App studio
41. DU Cleaner
42. DU Browser
43. Hago Play With New Friends
44. Cam Scanner
45. Clean Master – Cheetah Mobile
46. Wonder Camera
47. Photo Wonder
48. QQ Player
49. We Meet
50. Sweet Selfie
51. Baidu Translate
52. Vmate
53. QQ International
54. QQ Security Center
55. QQ Launcher
56. U Video
57. V fly Status Video
58. Mobile Legends
59. DU Privacy

NeoTamil on Google News

அறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள். உங்கள் நண்பர்களுக்கும் தவறாமல் ஷேர் செய்யுங்கள்.

Get your daily dose of positivity by following NeoTamil’s Facebook page and Twitter.

Subscribe to our newsletter

To be updated with all the latest news, offers and special announcements.

- Advertisment -

Subscribe to our newsletter

To be updated with all the latest news, offers and special announcements.

Must Read

- Advertisment -