நம்மில் பலரும் ஃபேஸ்புக்கில் ‘ஸ்க்ரோல்’ செய்தே நேரமெல்லாம் வீணாகிவிட்டதே என்று வருந்தி இருப்போம். சில நேரங்களில், நம் நேரத்தை வீணாக்கும் மார்க் -ஐ திட்டியும் வரும் கலாய்ப்படங்களையும் கண்டு கடந்திருப்போம்.
நம் நேரம் வீணாவதை மார்க்-கும் உணர்ந்து தான் இருக்கிறார். நம் பொழுது ‘ஸ்க்ரோல்’ செய்தே வீணாகாமல் இருக்க அவரது நிறுவனமே சில புதிய அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறது இன்று.
ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் -இல் பயனாளிகள் தங்கள் நேரத்தை நிர்வகிக்க உதவும் புதிய செயல்பாடுகளை அறிவித்திருக்கிறது. Activity Dashboard, தினசரி நினைவூட்டி(Reminder) மற்றும் அறிவிப்புகளை (Notifications) குறைப்பதற்கு ஒரு புதிய வழி.
மேற்கண்ட இந்த செயல்பாடுகள், முன்னணி மனநல வல்லுநர்கள் மற்றும் நிறுவனங்கள், கல்வியாளர்கள், ஃபேஸ்புக் நிறுவனத்தின் சொந்த விரிவான ஆராய்ச்சி மற்றும் ஃபேஸ்புக் சமூகத்தில் இருந்து வந்த கருத்துக்கள் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இது பற்றி ஃபேஸ்புக் மேலும் தெரிவிப்பது என்னவெனில்,
ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் -ல் செலவிடும் நேரமானது பயனுள்ள வகையிலும், நேர்மறையானதாகவும், மனதிற்கு ஊக்கமளிப்பதாகவும் இருக்க வேண்டும். – ஃபேஸ்புக் நிறுவனம்
ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் இரண்டு பயன்பாடுகளிடும் உள்ள ‘Settings’ மெனுவை அழுத்தி, இப்புதிய செயல்பாடுகளை அணுகலாம். பயன்பாட்டிலுள்ள அமைப்புகளின் பக்கத்திற்குச் செல்லவும். பிறகு கீழே உள்ள படங்களில் உள்ளது போன்று செலவிடப்பட வேண்டிய நேரத்தை உங்களுக்கு ஏற்ற வகையில் அமைத்துக் கொள்ளவும்.
நாங்கள் எழுத்தாணியில் உங்களுக்கு பயனுள்ள தகவல்களை மட்டுமே எழுதி வருகிறோம் என்பது குறிப்பிடத்தக்கது. படிப்போருக்கு தன்னம்பிக்கையை ஊட்டும் வண்ணம் இருக்கும் பதிவுகளையே பதிவிடுகிறோம் என்பதையும் இந்நேரத்தில் தெரியப்படுத்த விரும்புகிறோம்.
உங்களது ஃபேஸ்புக்கில் நீங்கள் எதை அதிகம் காண விரும்புகிறீர்கள் என்பதையும் நீங்களே முடிவு செய்யலாம். இதைப் பற்றி எழுத்தாணி குழுவில் இருந்து காணொளி ஒன்று விரைவில் வெளிவரும்.