உலக அளவில் கொடிகட்டிப் பறக்கும் செல்போன் விற்பனைக்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல. சொல்லப்போனால் செல்போன் தயாரிப்பு நிறுவனங்களின் முதல் இலக்கு இந்தியாவாகத்தான் இருக்கிறது. இதற்கு சந்தேகமே இல்லாமல் மக்கள்தொகை தான் காரணம் என்று சொல்லிவிடலாம். மேலும், புதிய புதிய வசதிகளுடன் வெளிவரும் செல்போன்களை வாங்க யாருக்குத்தான் ஆசை இருக்காது? சரி, இதுவரை நீங்கள் எத்தனை செல்போன் பயன்படுத்தியிருக்கிறீர்கள்?

கதிரியக்கம்
வசதிககளின் அடிப்படியில் மட்டுமே நாம் இதுவரை செல்போனைத் தேர்வு செய்திருக்கிறோம். ஆனால் மருத்துவர்கள் மிகமுக்கிய எச்சரிக்கை ஒன்றினை முன்வைக்கிறார்கள். போனில் இருந்து வெளிவரும் கதிரியக்க (Radiation) ஆற்றல் தான் அது. இதனால் நம் உடல் கடுமையான சிக்கல்களை சந்திக்கும். ஒவ்வொரு போனில் இருந்தும் வெவ்வேறு அளவுகளில் இந்த ரேடியேஷன் வெளிப்படுகிறது. தகவல்தொடர்பு இயக்கம் (The Department of Telecommunication) அளித்துள்ள வழிகாட்டியின்படி இந்த ரேடியேஷனின் அளவு (SAR – Radiation Level’s Specific Absorption Rate) அதிகபட்சமாக 1.6 W/kg இருக்கலாம் என்கிறது. சரி இந்தியாவில் SAR மதிப்பு அதிகமுள்ள பிரபல போன்கள் என்னென? என்று கீழே காண்போம்.
- Xiaomi MI A1 – 1.75 W/kg
- Xiaomi Redmi Note 5 – 1.29 W/kg
- OnePlus 5T – 68 W/kg.
- Xiaomi Mi Max 3 – 1.58 W/kg
- OnePlus 6T – 1.55 W/kg
- HTC U12 Life – 1.48 W/kg
- Google Pixel 3 XL – 1.39 W/kg
- OnePlus 5 – 1.39 W/kg
- iPhone 7 – 1.38 W / kg
- Sony Xperia XZ1 Compact – 1.36 W/kg
- HTC Desire 12 + /12 – 1.34 W/kg
- ZTE AXON 7 mini – 1.29 W/kg
- Google Pixel 3 – 1.33 W/kg
- OnePlus 6 – 1.33 W/kg
- iPhone 8 – 1.32 W/kg
மேற்கண்ட பட்டியலில் உங்களுடைய போனும் இருக்கிறதா? இருந்தால் உடனே போனை மாற்றிவிடவும். சரி, இவற்றிலிருந்து தப்பிக்கவே முடியாதா? வழி இருக்கிறது. மூளை புற்றுநோய் வரை உருவாக்கும் இந்த கதிரியக்கத்திலிருந்து உங்களை பாதுகாப்பது எப்படி எனத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.