தேவையற்ற புகைப்படங்களால் கைபேசி நிரம்பி வழிகிறதா?

0
132

ஒரு சிறந்த புகைப்படத்தை எடுப்பதற்கு, சில தெளிவு இல்லாத படங்களை எடுக்க வேண்டியுள்ளது. இந்த வகையில், ஒரு சிறந்த செல்ஃபி படத்தை எடுக்க முயற்சிக்கும் போது பல தேவையில்லாத படங்களை எடுத்திருப்போம். மேலும், எண்ணற்ற மீம்ஸ்களைப் பதிவிறக்கம் செய்து, அது உங்கள் கேலரியில் பொங்கி வழியலாம். இந்த  நிலையை சரி செய்ய அவ்வப்போது தேவையில்லாத கோப்புகளையும், படங்களையும் நீக்க வேண்டியுள்ளது. ஆனால், இதற்கு நீண்டநேரம் செலவிட வேண்டியுள்ளது என்பதால், எப்போதும் இது சாத்தியப்படுவது இல்லை. சிலர் மறந்தும் போகலாம். இதனால் கேலரி நிரம்பி வழிந்து, பெரிய தொல்லையாக மாறும்.

இந்தப் பிரச்சனைக்குத் தீர்வாக அமையும் வகையில் ப்ளே ஸ்டோரில் எண்ணற்ற செயலிகள் (Apps) உள்ளன. அதில் சிறந்த 5 செயலிகள் இதோ,

கூகுள் பைல்ஸ் கோ (Google Files Go)

‘கூகுள் போட்டோஸ்’ அப்ளிகேஷனில் இருக்கும் ‘ப்ரீ அப் ஸ்பேஸ்’ செய்யும் அதே பணிகளைத்  தான், இந்த செயலி செய்கிறது. ஒரே ஒரு வித்தியாசம் என்னவென்றால்,இதன் மூலம் போட்டோக்களை நீக்குவதை விட சிறப்பான சேவையைப் பெற முடிகிறது.

உங்கள் கேலரிக்கு மட்டும் என்பதை விட, உங்கள் முழு ஸ்மார்ட்போனுக்கும் ஒட்டுமொத்தமாக உதவும் ஒரு அப்ளிகேஷனாக உள்ளது.

 

கேலரி டாக்டர் – போட்டோ கிளீனர் (Gallery Doctor – Photo Cleaner)

இந்த செயலி மூலம் நீக்குவதற்குத் தகுதியான ஒரு புகைப்பட கூட்டமே சேகரிக்கப்படுகிறது. இந்த புகைப்படங்கள் ஏறத்தாழ ஒன்றோடொன்று  ஒத்தவையாகவோ, மிகவும் தரம் குறைந்த நிலையில் இருப்பவையாகவோ இருக்கலாம்.

இந்த செயலி மூலம் நகல்கள், ஸ்கிரீன்சாட்கள் மற்றும் பொதுவாகத் தரம் குறைந்த படங்கள் ஆகியவற்றை நீக்கலாம்.

 

கிளீன் மாஸ்டர் (Clean Master)

உங்கள் ஆண்ட்ராய்டு கைபேசியில் இடவசதியை ஏற்படுத்துவதற்கான பொதுவான ஸ்டோர் நிர்வாகத் தீர்வாக, இந்த செயலி செயல்படுகிறது. இந்த செயலியில் அருமையான புகைப்படங்களை முறைப்படுத்துதல் மற்றும் நீக்கும் திறன்களும் காணப்படுகின்றன.

இது தவிர ஒத்தபுகைப்படங்கள், ஏறக்குறைய ஒரே மாதிரியான மற்றும் மங்கலான படங்கள் ஆகியவற்றை கண்டறியும் தேர்வையும் அளிக்கிறது. இந்த வாட்ஸ்அப் கிளீனிங் கருவியை பயன்படுத்தி, வாட்ஸ்அப் மீடியோ கோப்பில் உள்ள கும்பல் படங்களையும் கண்டறியலாம்.

 

மேக்ஸ் கிளீனர் (Max Cleaner)

கிளீனர் மாஸ்டரை போலவே,மேக்ஸ் கிளீனரும், புகைப்பட நிர்வாகத்தை அளிக்கக் கூடிய ஒரு அப்ளிகேஷன் அல்ல என்றாலும், அதை செய்யக் கூடிய திறன் இதற்கு இருக்கிறது. இதன் மூலம் செய்யப்படும் ஸ்கேன் முடிந்த பிறகு, வெவ்வேறு கோப்புகளில் இருக்கும் ஒத்த படங்கள், ஸ்கிரீன்ஷார்ட்கள், அதிக இடத்தை அடைத்து கொண்டிருக்கும் போட்டோக்கள், மங்கலான படங்கள் ஆகியவற்றைக் குறித்த ஒரு ஒட்டு மொத்தக் கண்ணோட்டத்தை அளிக்கிறது.

இதன் மூலம் குறிப்பிட்ட கோப்பில் நீங்கள் நீக்க விரும்பும் படங்களைத் தேர்ந்தெடுக்கலாம். இதில் உள்ள ஒரே ஒரு பிரச்சனை என்னவென்றால், ஸ்கேன் செய்து முடிக்க கொஞ்சம் நேரத்தை எடுத்து கொள்ளும். ஆனால், இதில் உள்ள சாதகமான காரியங்களால், பாதகமான காரியங்கள் மறைக்கப்பட்டு, இந்த செயலி பயன்படுத்தத் தகுதி உள்ளதாக மாறுகிறது.

 

ரேமோ டூப்ளிகேட் போட்டோஸ் ரிமூவர் (Remo Duplicate Photos Remover)

இந்தப் பட்டியலில் உள்ள மற்ற எல்லா செயலிகளையும் வைத்துப் பார்க்கும் போது, ஒத்த போட்டோக்கள் தொடர்பான பிரச்சனைக்கு மட்டுமே உதவும் இந்த செயலி  நிர்ணயிக்கப்பட்ட பணியை மட்டுமே செய்வது போலத் தெரிகிறது. ஆனால், அதன் வேகமான செயல்பாடு, பயன்படுத்துவதற்குத் தகுதி கொண்டதாக உள்ளது.

உங்கள் கைபேசியில் தனது ஸ்கேனை ரேமோ முடித்து விட்டால், மொத்தம் உள்ள எல்லா போட்டோக்களும் பிரித்தறியப்பட்டு, நகலானவை அல்லது ஒத்த படங்களைப் பட்டியலிட்டு, அவற்றை எளிதாக நீக்கி விடலாம். சமூக இணையதளங்கள், இணையதளங்கள் ஆகியவற்றில் நீங்கள் புகைப்படங்களைப் பதிவேற்றும் போது, அந்த படங்களின் நகல் உங்கள் கைபேசியில் நகலாக இருக்கும் என்பதால், இந்த செயலி மிகவும் பயனுள்ளதாக அமைகிறது