வாட்சாப் இல்லாமல் மொபைல்போன் இல்லை என்ற காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். தனிப்பட்ட செய்தித்தொடர்பில் பேஸ்புக்கைக் காட்டிலும் வாட்சாப் தான் பெரும்பாலானோரின் விருப்பமாக இருக்கிறது. அதன் தரத்தை மேம்படுத்தும் மற்றும் புதிய அம்சங்களை மக்களுக்கு அளிக்க அப்டேட்டுகளை அந்த நிறுவனம் அளிப்பது வழக்கம். அப்படி வாட்சாப்பில் விரைவில் வரப்போகும் சில புதிய வசதிகள் என்னவென்று பார்ப்போம்.
Finger Print Censor
ஸ்மார்ட்போன்களில் கொடுக்கப்படும் ஃபிங்கர் பிரின்ட் சென்சார் அமைப்பு பயனாளர்களுக்கு சிறப்பான பாதுகாப்பை வழங்குகின்றன. இதனாலேயே வாட்சாப்பும் இதனை மக்களுக்கு அளிக்க இருக்கிறது. இதற்கு முன்னாள் ஐபோன் இயங்குதளத்தில் இயங்கும் வாட்சாப்புகளுக்கு மட்டும் இந்த அப்டேட் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Ranking of Contacts
வாட்ஸ் அப்பில் பின் செய்யப்பட்ட குழுக்களை தவிர அண்மையில் சாட் செய்தவர்களின் காண்டாக்ட் மேலே இருக்கும். ஆனால் தற்போது கொண்டுவரப்பட உள்ள வசதியின் மூலம், எந்த நபரிடம் அதிகம் சேட் செய்திருக்கிறோமோ அவர்களது சாட் மேலே முதலாவதாக வரும்.
புரளிக்கு செக்
இந்தியாவைப் பொறுத்தவரையில் வாட்ஸ்அப்புக்கு பெரும் தலைவலி கொடுப்பது ஃபார்வர்டு மெசேஜ்கள்தாம். குட்மார்னிங் சொல்வதற்காகவே பலர் வாட்சாப்பை உபயோகித்து வருகின்றனர். போலி செய்திகளைப் பரப்புவதில் இத்தகைய ஃபார்வர்டு மெசேஜ்களுக்குப் பெரிய பங்குண்டு. ஒரு வழியாக அதைப் பல கட்டுப்பாடுகள் மூலமாகக் குறைத்திருக்கிறது வாட்ஸ்அப். இப்போது அதில் மேலும் ஒரு அப்டேட்டை செய்யவுள்ளது. அதன்படி நான்கு தடவைக்கு மேல் ஒரு மெசேஜை அனுப்பும்போது அது அடிக்கடி ஃபார்வர்டு செய்யப்படுகிறது என்பதை மற்றவர்களுக்குத் தெரிவிக்கும் வகையில் ‘frequently forwarded’ என்ற வார்த்தை அதில் சேர்க்கப்படும். இதனால் அந்த மெசேஜைப் பெறுபவர் அதை மற்றவர்களுக்கு அனுப்புவது குறையும்.

Hide Muted Status
வாட்சாப்பில் புகழ்பெற்ற மற்றொரு அம்சம் ஸ்டேட்டஸ் தான். இதில் ரயில் விடும் ஆட்கள் எல்லாம் இங்கே இருக்கிறார்கள்.பார்க்க விரும்பாத நபர்களின் மியூட் செய்தால் அவை வரிசையின் கடைசியில் இருக்கும். அதிலும் சென்று ஸ்டேட்டஸை காணும் வசதி இருந்து வருகிறது. இதனை மாற்றும் வகையில் மியூட் செய்த ஸ்டேடஸை முழுவதுமாக மறைக்கவும் செய்யும் வகையில் புது அப்டேட் கொடுக்கப்பட்டுள்ளது. இது Beta வெர்ஷனில் மட்டும் தற்போது சோதனை செய்யப்பட்டு வருகிறது.
ஸ்டேட்டஸை இனி பகிரலாம்
வாட்சப்பில் வைக்கப்படும் ஸ்டேட்டஸை இனி ஜிமெயில் மற்றும் பேஸ்புக் ஆகியவற்றிற்கு இனி எளிதில் ஷேர் செய்யலாம். ஏற்கனவே பேஸ்புக் நிறுவனம் இன்ஸ்டாகிராம், வாட்சாப் ஆகிய சமூக வலைத்தளங்களை ஒருங்கிணைக்கும் முயற்சிகளை எடுத்து வருவது நினைவிருக்கலாம்.
டார்க் மோடு
டிவிட்டரைத் தொடர்ந்து தற்போது வாட்சாப்பும் டார்க் மோடிற்கு மாற இருக்கிறது. இதனால் டிஸ்பிளேவை நம்மால் கருப்பாக மாற்றிக்கொள்ள முடியும். இரவில் இந்த வசதி உபயோகமானதாக இருக்கும். தற்போது பல முன்னணி ஆப்கள் இந்த டார்க் மோடிற்கு மாறிவருவது குறிப்பிடத்தக்கது.

QR கோடு
வாட்ஸ்அப்பின் உள்ளே தனியாக QR code ஸ்கேன் செய்வதற்கான வசதி கொடுக்கப்படவுள்ளது. இதன் மூலமாக ஒருவருடைய தொடர்பு எண்ணை ஸ்கேன் செய்வதன் மூலமாக வாட்ஸ்அப்பில் சேர்த்துக்கொள்ள முடியும். ஒருவருடைய எண்ணை பரிமாறிக்கொள்வதற்கும் இது உதவும். இப்படி பல அப்டேட்டுகளை வாட்சாப் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு தர இருக்கிறது.