உலகின் முதல் மடிக்கக் கூடிய டேப்லெட் சாதனம்

0
45
foldable smartphone

மடிக்காமல் டேப்லட்டாகவும், இரண்டாக மடித்து அலைபேசியாகவும் பயன்படுத்தும் வகையிலான உலகின் முதல் அலைபேசி விற்பனைக்கு வந்துள்ளது.

இரண்டாக மடித்துப் பயன்படுத்திக் கொள்ளும் வகையிலான அலைபேசியை உருவாக்கும் பணியில் ஆப்பிள், சாம்சங் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் தீவிரம் காட்டி வருகின்றன. ஆனால், சற்றும் எதிர்பார்க்காத வகையில், அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் தலைமையிடத்தைக் கொண்டுள்ள ‘ரொயோலே‘ (Royole) என்ற புதிய நிறுவனம் உலகின் முதல் மடிக்கக் கூடிய அலைபேசியை ‘பிளெக்ஸ்பை‘ (FlexPai) என்ற பெயரில் வெளியிட்டுள்ளது.

foldable smartphoneஉலகம் முழுவதும் ஒரே நேரத்தில் விற்பனைக்கு வந்துள்ள இந்த திறன்பேசிக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி விட்ட நிலையில், வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் இந்தத் திறன்பேசியை முன்பதிவு செய்தவர்களுக்கு விநியோகிக்கவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிறப்பம்சங்கள்

  • 7.8 இன்ச் மடிக்கக்கூடிய திரை,
  • 8 சீரிஸ் சிப்,
  • முறையே 20, 16 எம்பி திறனுடைய ரியர் மற்றும் முன்புற கேமரா,
  • 6000 mAH திறனுடைய பேட்டரி
  • 8 ஜிபி ரேம்
  • 128 ஜிபி சேமிப்பகம்

இத்தகைய சிறப்பம்சங்களைக் கொண்ட ‘பிளெக்ஸ்பை’ , சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் கோலாகலமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

விலை

“மற்ற டேப்லட்களுடன் ஒப்பிகையில் தங்களது தயாரிப்பு பயன்பாட்டாளர்களுக்குத்  தொழில்நுட்பத்தில் புரட்சிகரமான, வேறுபட்ட அனுபவத்தை அளிக்கும்” என்று இந்நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை செயலதிகாரியுமான பில் லியூ கூறியுள்ளார்.

foldable smartphone தயக்கமே இன்றி குறைந்தது 20,000 முறை இதனை மடித்துப் பயன்படுத்தலாம்  என்று ரொயோலே நிறுவனம் தெரிவிக்கிறது. 128ஜிபி மற்றும் 256ஜிபி என இரு பதிப்புகளில் வெளியிடப்பட்டுள்ள இதன் தொடக்க விலை சுமார் ஒரு லட்சத்து 14 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.