கிரெடிட் கார்டு என்பது நிதி நிறுவனங்களால் வழங்கப்படும் ஒரு பிளாஸ்டிக் கார்டு ஆகும். இதனை பயன்படுத்தி நீங்கள் எந்த ஒரு பொருளோ அல்லது சேவையோ விலைக்கு வாங்க இயலும்.
பொதுவாக ஆப்பிள் கிரெடிட் கார்டு பெரும்பாலானோர் மனதையும் கவரக்கூடிய விதத்தில் உருவாக்கப்பட்டிருக்கும். இதற்கு முக்கிய காரணம், ஆப்பிள் லோகோவுடன் கூடிய பெயர் மற்றும் டைட்டானியத்தின் உலோக தாள்.
இந்த சூழலில், உங்கள் அனைவரையும் எளிதில் கவரக்கூடிய வகையில், மூன்று வகையான புதிய கிரெடிட் கார்டு சேவை சந்தையில் நுழைந்துள்ளது.
சிங்கப்பூரில் உள்ள ரேஸர் (Razer) நிறுவனமானது, இந்த புதிய ப்ரீபெய்டு கிரெடிட் கார்டு சேவையின் விற்பனையை தொடங்கியுள்ளது.
ஒளிரும் வித்தியாசமான கிரெடிட் கார்டு!
முதல் வகையானது, இந்தியாவின் பேடிஎம் சாதனங்களை போன்று ஒரு இ-வாலட் சேவையாகும். இது பாதுகாப்பிற்கு சிறந்த முறையில் ரேஸர் பே சேவையுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் வகையான கிரெடிட் கார்டு, ரேஸர் (Razer) லோகோவுடன் கருப்பு நிறமாக இருக்கும். ஆனால், இது ஒளிராது.

ரேஸர் நிறுவனம் தயாரித்த, மூன்றாம் வகையான கிரெடிட் கார்டானது கருப்பு உலோகத்தால் ஆன, பச்சை வண்ண லோகோவுடன் சற்று வித்தியாசமான முறையில், பணப் பரிவர்த்தனைக்கு பிறகு ஒளிரும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது.
ரேஸர் நிறுவனம், தனது புதிய கிரெடிட் கார்டினை ரேஸரின் வலைத்தளங்கள் மூலம் பெறுவோருக்கு 10 சதவீத பணம் திருப்பி தரப்படும் என்று அறிவித்திருந்தது.
இருப்பினும், இது தற்பொழுது முதற்கட்டமாக சிங்கப்பூர் மக்களுக்கு மட்டுமே விற்பனைக்கு உள்ளது. இந்த கிரெடிட் கார்டின் பீட்டா வெர்சன் (beta version) 1,337 சிங்கப்பூர் குடிமக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Also Read: செல்போன் அதிகம் பயன்படுத்துபவரா நீங்கள்…? WhatsAppitis பிரச்சினை உங்களுக்கு இருக்கக்கூடும்…