Home தொழில்நுட்பம் கண்ணாடியற்ற கேமரா மாடல்களை வெளியிட்டது நிக்கான் நிறுவனம்

கண்ணாடியற்ற கேமரா மாடல்களை வெளியிட்டது நிக்கான் நிறுவனம்

கேமரா சந்தையில் தனது போட்டியாளரான சோனி (Sony) நிறுவனத்திற்கு சவால் விடும் வகையில் புதிய கண்ணாடியற்ற கேமராக்களை  நிக்கான் (Nikon) நிறுவனம் களமிறக்கியுள்ளது.

பல தொழிற்துறை நிபுணர்கள், ஒரு ஜப்பானிய நிறுவனத்தின் எதிர்காலத்திற்கு இந்த நகர்வு முக்கியம் என்று கருதுகின்றனர். ஒரே  நேரத்தில் ஒரு கேமரா, லென்ஸ்  டிஜிட்டல் கேமராக்களுக்கான மற்றும்  ஸ்மார்ட்போன்களுக்கான தேவையைக் குறைக்கின்றது.

கண்ணாடி அடிப்படையிலான டி.எஸ்.எல்.ஆர் (Digital Single Lens Reflex) கேமராக்களின் விற்பனை சமீபமாக பலவீனமடைந்துள்ளது.

“கண்ணாடியற்ற கேமராக்களின் வர்த்தகத்தில் போட்டியானது, அதிக நுகர்வோர் விழிப்புணர்வு காரணமாக  அதிகரித்துள்ளது. இது வாடிக்கையாளர்கள் மற்றும் தொழில் நுட்பப் பயனர்களுக்குப்  பயனளிக்கும்.” என ஆய்வாளர் அருண் கில் தெரிவித்துள்ளார்.

டிஜிட்டல் காட்சிகள்

வ்யூஃபைண்டருக்குள் (View Finder) ஒளிரச் செய்யும் பொருட்டு உயர்தரக் கேமராக்கள் பாரம்பரியமாக ஒரு கண்ணாடியைக் கொண்டுள்ளன. ஒரு புகைப்படத்தை எடுக்கும் போது, ​​பயனாளர் லென்ஸ் மூலம் பார்க்க இது அனுமதிக்கிறது.

மாறாக, கண்ணாடியற்ற கேமராக்கள் டிஜிட்டல் வ்யூஃபைண்டரை பயன்படுத்துகின்றன. இது கேமரா உட்புறத்தில் அதிக இட வசதியை அளிக்கிறது.  இது மிகவும் கச்சிதமாக சென்சார்- நிலையான தொழில்நுட்பத்திற்கும், பிற மின்னணுச் சாதனங்களுக்கும் மேலதிக இடத்தை வழங்க அனுமதிக்கிறது.

கண்ணாடியற்ற கேமராக்கள் மூலம் , DSLR களுடன் ஒப்பிடுகையில் பேட்டரி மாற்றம் தேவைப்படுவதற்கு முன்னர் குறைவான புகைப்படங்களையே எடுக்க முடியும்.

நிகான் இதற்கு முன்னரே  2011-இல் கண்ணாடியற்ற தொழில்நுட்பத்தைப் பரிசோதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கண்ணாடியற்ற தொழில்நுட்பத்தின் பிற நன்மைகள்

  • ஒரு கேமரா, ஒரு புகைப்படம் எடுக்கும் போது கண்ணாடியைச்  சரி செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்பது இதன் முதன்மையான நன்மையாகப் பார்க்கப்படுகிறது. உதாரணமாக, திருமணங்கள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் படங்களை எடுக்கும் போது இது பயனுள்ளதாக இருக்கும்
  • புகைப்படம் எடுப்பவர்கள் எளிதாக பர்ஸ்ட் மோடை (burst modes) உபயோகிக்க முடியும். இதனால் குறைவான நேரத்தில் நிறைய புகைப்படங்களை எடுக்கலாம்.
  •  கேமராவின் எடை குறைகிறது.

மவுண்ட் மற்றும் சென்சார் இடையே ஒரு சிறிய இடைவெளி இருப்பதால், தற்போதுள்ள டிஎஸ்எல்ஆர் லென்ஸ்களை  ஒரு அடாப்டர் இல்லாமல் கேமராவுடன்  இணைக்க முடியாது. தற்போதுள்ள F-mount லென்ஸுடன் வேலை செய்வதற்கு, நிகான் ஒரு அடாப்டரை விற்கப் போகிறது.

ஆனால், சில சந்தர்ப்பங்களில், ஆட்டோஃபோகஸ் மற்றும் ஆட்டோ-எக்ஸ்போஷரை மூன்றாம் தரப்பு அலகுகளுடன் ( third-party units) பயன்படுத்துவதற்கான உரிமையை உரிமையாளர்கள் இழக்க நேரிடும்

நிக்கான் Vs சோனி

கண்ணாடியற்ற Z 7 மாடல் கேமராக்களின் விலை இந்திய மதிப்பில் 3 லட்சத்து 21 ஆயிரமாக இருக்கிறது. இது வழங்கும் வசதிகள்,

  • 45.7 மெகாபிக்சல்கள்
  • 493 போகஸ் பாயிண்ட்ஸ்
  • பர்ஸ்ட் மோடில் நொடிக்கு 9 பிரேம்கள் (fps) வரை எடுக்கும் வசதி

Z6 மாடல் கேமராக்களின் விலை  1 லட்சத்து 92 ஆயிரம் ரூபாயாக இருக்கிறது. இந்த கேமராக்களில்,

  • 24.5 மெகாபிக்சல்கள்
  • 273 போகஸ் பாயிண்ட்ஸ்
  • பர்ஸ்ட் மோடில் நொடிக்கு 12 பிரேம்கள் (fps) வரை எடுக்கும் வசதி

இரு கேமராக்களும் 4K வீடியோவை 30fps வரை படமெடுக்கின்றன மற்றும் தொடுதிரை (Touch Screen) அம்சத்தைத் தருகின்றன, ஆனால் அவை மடங்கும் படி அவை வடிவமைக்கப் படவில்லை. அதாவது,  படம் அல்லது வீடியோ எடுப்பவர்களுக்கு தேவைப்படும் தனி மானிட்டர் இதில் இல்லை.

அவை சேமிப்புக்காக XQD மெமரி கார்டு வடிவமைப்பைப் பயன்படுத்துகின்றன.

அவற்றின் நெருங்கிய போட்டியாளர்கள் சோனி நிறுவனத்தின்  A7RIII மற்றும் A7III மாடல் கேமராக்கள் ஆகும்.


Z7,  A7RIII ஐ விட அதிக தெளிவுத்திறன் கொண்டது. மேலும், அதிகபோகஸ் பாய்ண்ட்ஸ்களையும், சற்றுப் பெரிய தொடுதிரைகளையும் கொண்டுள்ளது. ஆனால் Z 7 மாடல் , A7RIII மாடல் கேமராவை விட 46000 ரூபாய் விலை அதிகம், எடையும் அதிகம்.

Z6, A7III விட பர்ஸ்ட் மோடில் இன்னும் தொடர்ச்சியான புகைப்படங்களை எடுக்கும்.  மிக ஹை ரெசல்யூசன் வ்யூஃபைண்டர் (High Resolution Viewfinder) உள்ளது. ஆனால் நிகோனின் போகஸ் பாயிண்ட் சோனியின் கேமராவின் பாதி அளவு தான். இது கனமானதாகவும், மேலும் சோனியை விட 9000 ரூபாய் அதிகமாகவும் இருக்கிறது.

கூடுதலாக, சோனி கேமராக்களில் இரண்டு SD கார்டு இடங்கள் உள்ளன. அதாவது, அவை மிகவும் மலிவான சேமிப்பகத்தை அளிக்கின்றன.

 

அறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள். உங்கள் நண்பர்களுக்கும் தவறாமல் ஷேர் செய்யுங்கள்.

Get your daily dose of positivity by following NeoTamil’s Facebook page and Twitter.

Subscribe to our newsletter

To be updated with all the latest news, offers and special announcements.

- Advertisment -

Subscribe to our newsletter

To be updated with all the latest news, offers and special announcements.

Must Read

பூமியை நெருங்கும் NEOWISE வால்நட்சத்திரம்: எங்கே, எப்படி பார்ப்பது?

2020 ஆம் ஆண்டில் முதல் முறையாக விண்வெளி ஆர்வலர்கள் பலரும், ஒரு வால்மீன் / வால்நட்சத்திரம் வானில் தெரிவதால் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர். இந்த வால்நட்சத்திரம் பல மேற்கத்திய நாடுகளில்...
- Advertisment -