Home தொழில்நுட்பம் செல்போன் ஐந்து கேமராவுடன் அசத்த வரும் LG ஸ்மார்ட்போன்

ஐந்து கேமராவுடன் அசத்த வரும் LG ஸ்மார்ட்போன்

LG நிறுவனத்தின் V 40 தின் க்யூ என்ற புதிய மாடல் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தப் புதிய LG ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஃபுல் விஷன் OLED டிஸ்ப்ளே இடம் பெற்றுள்ளது., இந்தக் கைபேசி முந்தைய மாடல்களை விட மெல்லிய வடிவில் வழங்கப்பட்டுள்ளது.

புதிய LG ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக இதில் ஐந்து கேமராக்கள் இடம் பெற்றுள்ளன.

மூன்று பிரைமரி கேமராக்கள்:

16 MP 107-டிகிரி சூப்பர் வைடு ஆங்கிள்,

12 எம்.பி. ஸ்டான்டர்டு ஆங்கிள் மற்றும்

12 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ் 2X சூம் வசதியுடன் வழங்கப்பட்டுள்ளது.

இந்த மூன்று கேமராக்களில் உள்ள டிரிபில் ஷாட் அம்சம் புகைப்படங்களை ஒன்றாக அடுக்கி, சிறிய வீடியோ போன்று உருவாக்கும். இதனைப் பயனர்கள் தங்களது சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொள்ள முடியும்.

முன்பக்கம் செல்ஃபிக்களை எடுக்க 5 MP வைடு-ஆங்கிள் லென்ஸ் மற்றும் 8 MP  ஸ்டான்டர்டு கேமரா வழங்கப்பட்டுள்ளது. கேமரா செயலியைத் திறக்கும் போது ஸ்கிரீனில் காணப்படும் ஸ்லைடர் கொண்டு எஃபெக்ட் மாற்றிக் கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

இத்துடன் டூயல் PDAF (Priority Development Assistance Fund) அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் 50% வேகமான மற்றும் மேம்படுத்தப்பட்ட HDR (high dynamic range ) புகைப்பட அனுபவம் பயனர்களுக்குக் கிடைக்கும்.

LG V40 ThinQ சிறப்பம்சங்கள்

– 6.4 இன்ச் 3120×1440 பிக்சல்  ஃபுல் விஷன் OLED டிஸ்ப்ளே
– ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட்
– அட்ரினோ 630 GPU
– 6 ஜி.பி. ரேம்
– 64 ஜி.பி. / 128 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
– 12 எம்.பி. கேமரா, f/1.5, 1.4µm பிக்சல், 78° லென்ஸ்
– 16 எம்.பி. சூப்பர் வைடு கேமரா, f/1.9, 1.0µm பிக்சல், 107° லென்ஸ்
– 12 எம்.பி. டெலிபோட்டோ கேமரா, f/2.4, 1.0µm பிக்சல், 45° லென்ஸ், டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ்
– 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/1.9, 1.12μm பிக்சல், 80° லென்ஸ்


– 5 எம்.பி. இரண்டாவது செல்ஃபி கேமரா, f/2.2, 1.12μm பிக்சல், 90° வைடு ஆங்கில் லென்ஸ்
– கைரேகை சென்சார்
– வாட்டர், டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68), MIL-STD 810G
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், 32-பிட் மேம்படுத்தப்பட்ட ஹை-பை குவாட் DAC
– DTS: X 3D சரவுன்டு சவுன்ட், பூம்பாக்ஸ் ஸ்பீக்கர்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
– 3,300 mAh பேட்டரி
– குவால்காம் குவிக் சார்ஜ் 3.0, வயர்லெஸ் சார்ஜிங்

LG V40 தின்க்யூயூ ஸ்மார்ட்போன் புதிய அரோரா பிளாக், புதிய பிளாட்டினம் கிரே, மொராக்கன் புளு மற்றும் கார்மைன் ரெட் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.

அறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகள், போன்ற செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள். உங்கள் நண்பர்களுக்கும் தவறாமல் ஷேர் செய்யுங்கள்.

Subscribe to our newsletter

To be updated with all the latest news, offers and special announcements.

- Advertisment -

Subscribe to our newsletter

To be updated with all the latest news, offers and special announcements.

Must Read

- Advertisment -