உலகின் மிகவும் ஆபத்தான லேப்டாப் 8.35 கோடிக்கு ஏலம்!

0
161
laptop-malware-4

இணைய உலகில் பெரும் ஆபத்துகளை விளைவிக்க கூடிய மோசமான 6 வைரஸ்களை கொண்டுள்ள லேப்டாப் ஏலத்திற்கு வந்திருக்கிறது. இதன் விலை 8.35 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த லேப்டாப்பின் பெயர் என்ன தெரியுமா? The Persistence of Chaos !!

laptop-malware-2

சாம்சங் நிறுவனத்தால் கடந்த 2008 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட NC10-14GB 10.2-Inch Blue Netbook இந்த மாடலில் தான் வைரஸ்கள் தற்போது குடிகொண்டுள்ளன. விண்டோஸ் XP தளத்தில் இயங்கும் இந்த லேப்டாப்பில் வைரஸ்களை செலுத்தியவர் சீனாவைச் சேர்ந்த  க்யோ ஓ டாங் என்பவராவார்.

ஐ லவ் யூ( ILOVEYOU ), மை டூம்( MyDoom), சோ பிக்( SoBig ), வான்ன கிரை( WannaCry), டார்க் டக்கீலா( Dark Tequila), பிளாக் எனர்ஜி (BlackEnergy) இவை தான் அந்த ஆறு வைரஸ்கள். படிக்க ஒரு மாதிரியாக இருந்தாலும் மிகவும் மோசமான விளைவுகளை இவை ஏற்படுத்திவிடும்.

laptop-malware-4

இதில் வான்ன கிரை( WannaCry) வைரஸ் கடந்த 2017 ஆம் ஆண்டு பல ஆயிரம் கணினிகளை காலி செய்தது ஞாபகம் இருக்கலாம். 2004 ஆம் ஆண்டு வெளிவந்த மை டூம் (MyDoom) வைரஸ் உலக வரலாற்றில் அதிவேகமாக பரவிய வைரஸ் என்ற இடத்தில் இருக்கிறது. சோ பிக் (SoBig) வைரஸ் அதன் பெயரைப்போன்றே அது ஏற்படுத்திய சேதமும் அதிகம். 2003 ஆம் ஆண்டு வெளிவந்த இது 37 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வேட்டு வைத்தது. மற்ற மூன்றும் எதற்கும் சளைத்ததல்ல.

ஆய்வுகளுக்கு மட்டும் இந்த கணினியை பயன்படுத்தவது நல்லது என இந்த வைரஸ்களை ஏற்றிய புண்ணியாத்மா டாங் தெரிவித்துள்ளார். தற்போது இணையத்திலிருந்து விலக்கப்பட்டு இருக்கும் இந்த லேப்டாப்பை இணைக்கும் ஒவ்வொரு கணினியும் நொடிப்பொழுதில் கண்ணை மூடிவிடும்.

laptop-malware-5

இத்தனை ஆபத்தான வைரஸ்களை கொண்டுள்ள லேப்டாப்பை இணையத்தில் நேரிடையாக ஏலத்திற்கு விடும் அளவிற்கு தொழில்நுட்ப வசதிகள் ஹேக்கர்களின் கையில் இருக்கிறது என்பது மட்டும் அதிர்ச்சியளிக்கும் உண்மை.