28.5 C
Chennai
Sunday, November 27, 2022
Homeதொழில்நுட்பம்இணையம்உலகத் தொடர்பிலிருந்து வெளியேறும் ரஷியா!!

உலகத் தொடர்பிலிருந்து வெளியேறும் ரஷியா!!

NeoTamil on Google News

கம்யூனிச நாடுகளில் வசிக்கும் மக்களுக்கு மக்களாட்சியின் கீழ் இருக்கும் மனிதர்களைப் போல் உரிமைகள் கிடைப்பதில்லை. பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம் எல்லாம் பெயரளவில் மட்டும்தான். கவுன்சிலர் முதல் பிரதமர் வரை இணையத்தில் துவம்சம் செய்யும் நமக்கு அவர்களின் வாழ்வியல் புரியாது. சீனா, ரஷியா நாடுகளில் அரசாங்கத்திற்கு எதிராக இணையத்தில் ஒரு கருத்தை பதிவிட முடியாது. அப்படி முடிந்தால் முடிந்தது கதை. இப்படியான கட்டுப்பாடுகள் காலந்தோறும் இருந்து வருபவை. அதன் தொடர்ச்சியாக ரஷியா மேலும் ஒரு திட்டத்தை கொண்டுவர இருக்கிறது. உலக வரலாற்றில் இதுவரை எந்த நாடும் செயல்படுத்தாத, வேறு எந்த நாட்டாலும் செயல்படுத்த முடியாத பிரம்மாண்ட திட்டம். பெயர் என்ன தெரியுமா? ஆப்பரேஷன் டிஸ்கனெக்ட் (Operation disconnect).

Cyber-security-pic-900x540
Credit: Asia Times

Operation Disconnect

ரஷியாவின் இணையத்தினை உலக இணையத்திலிருந்து பிரிப்பதுதான் இந்த ஆப்பரேஷன் டிஸ்கனெட். புரியவில்லையா? இங்குதான் ரஷியா தனது கம்யூனிச மூளையை உபயோகிக்கிறது. இணையம் எப்படி இயங்குகிறது? உலகம் முழுவதும் உள்ள கணிப்பொறிகள் ஒன்றினோடு ஒன்று இணைக்கப்படுவதால் தானே? அங்கே தான் செக் வைக்கிறது ரஷியா. உலகத்தோடு ரஷியாவின் எந்த கணிப்பொறியும் இணையாமல் பார்த்துக்கொள்வதுதான் இந்த திட்டம். அதே நேரத்தில் ரஷியாவிற்குள் இருக்கும் அனைத்து கணினிகளும் இணையத்தினால் இணைந்தே இருக்கும். இதற்கென ரஷியாவின் நாடாளுமன்ற அவையில் சிறப்பு சட்டம் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது.

திட்டத்தைத் தொடங்கவே 38 மில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவை என அந்நாட்டு நிதியமைச்சகம் தெரிவித்துள்ள நிலையில், இத்திட்டத்தினை செயல்படுத்த மொத்தம் 308 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும் என கணக்கிடப்பட்டுள்ளது.

putin
Credit: International Policy Digest

இதுபற்றி கருத்து தெரிவித்த சர்வதேச இணைய அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி ஆண்ட்ரூ சல்லிவன் (Andrew Sullivan) ரஷியாவின் இந்த திட்டம் எப்படியான விளைவுகளைத் தரப்போகிறது எனத் தெரியவில்லை என்றார்.

இதுபற்றிய தகவல்கள் வெளிவந்துமே சுமார் 15,000 மக்கள் ரஷியத் தலைநகர் மாஸ்கோவில் திரண்டு இந்தத் திட்டத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். ஆனாலும் இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதில் புதின் தலைமையிலான அரசு முழு ஈடுபாடு காட்டிவருக்கிறது.

எப்படி இது சாத்தியம்?

இந்தத் திட்டத்தைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன் இணையம் எப்படி இயங்குகிறது என்று தெரிந்துகொள்ளலாம். அப்போதுதான் ரஷியாவின் விபரீத விளையாட்டு பற்றி தெரியும்.
உங்களுடய கணினியில் கூகுள் எனத் தேடுகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். முதலில் உங்களுடைய உலவி (Browser) நீங்கள் கொடுத்த வார்த்தையை இணையத்திற்குப் புரியும்படி மொழிபெயர்க்கும். இதுவே DNS (global domain name system) எனப்படுகிறது. அதாவது உங்களுடைய உள்ளீடை இணைய முகவரியாக மாற்றுவது.

அதன்பின்னர் இணையத்தில் இருக்கும் பல லட்சக்கணக்கான இணையதள சேவை வழங்கிகளில் (internet service providers) நீங்கள் அளித்த உள்ளீட்டிற்குப் பொருத்தமான சேவை வழங்கி உங்களுக்கான தகவல்களைத் தரும். ISP என்பது பல கணினிகளை கேபிள்கள் மூலம் ஒன்றாக இணைத்து வைத்திருக்கும் அமைப்பாகும். இந்த ISP க்களை கண்காணிக்க internet exchange providers (IXPs) என்னும் அமைப்பு செயல்படுகிறது. இரண்டு internet exchange providers சந்திக்கும் இணைப்பு exchange point எனப்படுகிறது.

cyber
Credit: The Independent

ரஷியாவின் மிகப்பெரிய IXPs மாஸ்கோவில் இருக்கிறது. இது மாஸ்கோவையும் கிழக்கு மாகாணங்களையும் இணைக்கிறது. இதன் கீழ் சுமார் 500 ISP க்கள் இயங்குகின்றன. சராசரியாக 140 ஜிகா பைட் அளவுள்ள தகவல்கள் இந்த இணைப்பின் மூலம் நாள்தோறும் பகிரப்படுகின்றன.

ஒட்டுமொத்த ரஷியா முழுவதிலும் ஆறு IXPs க்கள் இருக்கின்றன. இவற்றில் சில வெளிநாட்டு ISPக்களுடன் இணைந்துள்ளன. ஆகவே இந்த ISP யை ரஷியா மட்டுமல்லாமல் வேறொரு நாடும் பகிர்ந்துகொள்ளும். இப்படித்தான் இணையம் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. இங்குதான் ரஷியா முறுக்கிக்கொண்டு நிற்கிறது.

வெளியேறும் ரஷியா

ரஷிய மக்களின் இணையதள பயன்பாட்டை கண்காணிக்கவும், தேவையில்லாததை நீக்கவும் ரஷியா இந்த இணையதள செயல்பாட்டில் புதிய மாற்றத்தினைக் கொண்டுவர உள்ளது. ரஷியாவுக்கென்று தனியாக ஒரு இணையத்தையே அந்நாடு உருவாக்கி வருகிறது. அதாவது ரஷியாவிலிருந்து கொடுக்கப்படும் எந்த இணைய உள்ளீட்டிற்கும் வெளிநாட்டு ISPயில் இருக்கும் தகவல்கள் தோன்றாது. அதற்குப் பதிலாக உள்ளீட்டிற்கு இணையான ரஷியாவில் இருக்கும் ISPயில் இருக்கும் தகவல்கள் காண்பிக்கப்படும்.

internet russia
Credit: The Moscow Times

உதாரணமாக நீங்கள் ரஷியாவில் இருக்கிறீர்கள். Facebook.com என டைப் செய்கிறீர்கள் என்போம். உங்களுக்கு பேஸ்புக் பக்கம் காண்பிக்கப்படாது. ரஷியாவின் சமூக வலைத்தளமான  vk.com உங்கள் திரையில் வந்து நிற்கும். இதற்காக ரஷியாவில் இருக்கும் ஒட்டுமொத்த DNS அமைப்பையும் மாற்ற இருக்கிறது அந்நாடு. அதாவது உங்களுடைய உள்ளீடுக்குறிய இணைய முகவரியை மாற்றி ரஷியாவில் இருக்கும் ISP யோடு இணைத்துவிடும் வேலை தான் இந்த ஆப்பரேசன் டிஸ்கனெக்ட்.

பிரம்மாண்ட சிக்கல்

இந்த திட்டத்தைப் பற்றி படிக்கவே இத்தனை கஷ்டமாய் இருக்கிறதே? இதை எப்படி செயல்படுத்தப்போகிறது ரஷியா? என்று உலக நாடுகளே ஆச்சர்யத்தில் நகங்கடித்துக் கொண்டிருக்கின்றன. சீனாவில் இம்மாதிரியான திட்டம் நடைமுறையில் இருந்தாலும் ரஷியாவிற்கு இது அவ்வளவாக பழக்கப்பட்ட சப்ஜெக்ட் இல்லை. எனவே ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்கிறது.

மிகப்பிரம்மண்டமான இந்த திட்டத்தில் ஏற்படும் ஒரு சிரிய தவறு கூட ரஷியாவை மீட்டெடுக்க முடியாத ஆழத்தில் தள்ளிவிடும் என இணைய வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர். ஆனால் ரஷியாவோ வழக்கம்போல் அதை தனது நமுட்டுச்சிரிப்பால் கடந்துபோகப் பார்க்கிறது.

NeoTamil.com - ல் எழுதப்படும் கட்டுரைகள் DMCA Copyright பெற்றவை. பதிவுகளை நகலெடுத்தல், தழுவுதல் ஆகிய செயல்களைக் கட்டுப்படுத்தக்கூடியது. பதிவுகளை பிற தளங்களில் அல்லது வடிவங்களில் (Audio, Video) பயன்படுத்த NeoTamil.com -ன் அனுமதி பெறுவது அவசியம்.

NeoTamil on Google News

அறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள். 

Get your daily dose of positivity by following NeoTamil’s Facebook page and Twitter.

Subscribe to our newsletter

To be updated with all the latest news, offers and special announcements.

- Advertisment -

Subscribe to our newsletter

To be updated with all the latest news, offers and special announcements.

Must Read

சந்திர கிரகணம் (lunar eclipse)

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள் நிலவுகளைக் கொண்டுள்ளன. பூமிக்கு ஒரு நிலவு மட்டுமே உள்ளது. சந்திரன் மற்றும் சந்திர கிரகணம் பற்றிய தகவல்கள்! சந்திர கிரகணம் என்றால்...
- Advertisment -
error: Content is DMCA copyright protected!