இப்போதைய டிஜிட்டல் யுகத்தில் ஆன்லைனில் பணப் பரிவர்த்தனை செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. அதிலும் புதிதாக கணக்கை தொடங்க மட்டுமே பலர் வங்கிக்குச் செல்லும் நிலை வந்து விட்டது. இதற்கு ஒரு முக்கியக் காரணம் ஆன்லைன் பரிவர்த்தனைகளின் எளிமையான செயல்முறைகள் தான். ஆனால் அதன் மூலம் மோசடிகளும் அதிகரித்து கொண்டே தான் போகின்றன. அவற்றில் இருந்து தப்பிக்க நாம் செய்யவே கூடாத பத்து விஷயங்களைக் கீழே பார்ப்போம்.

- உங்கள் வங்கிக் கணக்கு தொடர்பான தகவல்களை செல்போனிலோ அல்லது மெயில் மூலமாகவோ யாரிடமும் பகிராதீர்கள்.
- உங்கள் கிரெடிட்/டெபிட் கார்டு மற்றும் ஆன்லைன் வங்கி விவரங்களை மெயில், கூகுள் டிரைவ், லேப்டாப், செல்போன் என எதிலும் (Save) சேமிக்காதீர்கள்.
- உங்கள் இன்டர்நெட் செட்டிங்ஸை கவனிப்பது மிக முக்கியம். அதில் Auto Fill Data – வை ஆன் (Enable) செய்யாதீர்கள். ஏனெனில் இதன் மூலம் கூட உங்கள் பாஸ்வேர்டை எளிதில் பெற முடியும்.
- நீங்கள் பயன்படுத்தும் இணையதளம் “https” என்று தொடங்கியுள்ளதா என்று கவனியுங்கள். அவ்வாறு இல்லையெனில் அதனைப் பயன்படுத்தாதீர்கள். அது வேறு தளங்களுக்கும் செல்ல வாய்ப்பு உள்ளது .
- ஆன்லைன் பரிவர்த்தனையில் விவரங்களை டைப் செய்ய உங்கள் கீபோர்டை பயன்படுத்தாதீர்கள். வங்கிகளின் இணையதளத்தில் உள்ள மெய்நிகர் விசைப்பலகையை (Virtual Keyboard) பயன்படுத்துவது நல்லது.
- உங்கள் வங்கியின் இணையதளத்தை உங்களுக்கு மெயில் அல்லது SMS ல் வரும் லிங்க் மூலம் திறக்காதீர்கள். எப்போதும் நேரடியாக லிங்க்கை டைப் செய்யுங்கள்.
- ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகளை உங்கள் லேப்டாப் அல்லது செல்போனில் மட்டும் செய்யுங்கள். மற்றவர்களுடையதிலோ முக்கியமாக அலுவலகங்கள் அல்லது ப்ரௌசிங் சென்டரில் உள்ளது போன்ற பொதுக் கணினிகளில் செய்யாதீர்கள். ஏனெனில் அதிலிருந்து விவரங்களை எளிதாக எடுத்துவிட முடியும்.
- வங்கிகளுக்கான செயலிகளை (Apps) டவுன்லோட் செய்யும் போது அதிகாரப்பூர்வ தளங்களை உபயோகிக்கவும். ஏனெனில் இப்போதெல்லாம் பல போலி செயலிகள் உள்ளன.
- தேவையில்லாமல் பன்னாட்டு கார்டுகளை வாங்கி வைக்காதீர்கள். அதே போல் பன்னாட்டு பரிவர்த்தனைகளை ஆப் (Disable) செய்து வைக்கவும். RBI 2014 முதல் 2-Factor Authentication ஐ கட்டாயமாக்கியது. அதனால் தான் முதலில் பாஸ்வேர்டு அல்லது PIN மூலமாகவும் அதன் பிறகு நமக்கு OTP மூலமாகவும் நமது பரிவர்த்தனைகள் இரண்டு முறை உறுதிப்படுத்தப்படுகிறது. ஆனால் சில வெளி நாடுகளில் 2-Factor Authentication என்பது தேவையில்லை. இது பாதுகாப்பானதல்ல.
- தேவையற்ற செயலிகளை டவுன்லோட் செய்யாதீர்கள். இதனால் கூட உங்கள் விவரங்களை திருடப்படலாம்.

Bonus Tip : உங்கள் கார்டின் பின் பக்கத்தில் உள்ள CVV நம்பரை ஞாபகம் வைத்துக் கொள்ள முடிந்தால் அந்த நம்பரை அழித்துவிடலாம். இதனால் கார்டு மோசடி ஓரளவு தடுக்கப்படும்.