28.5 C
Chennai
Tuesday, July 5, 2022
Homeதொழில்நுட்பம்இணையம்ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய "பிரபல" பூனை

ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய “பிரபல” பூனை

NeoTamil on Google News

வீடுகளில் செல்லப்பிராணிகள் வளர்ப்பது ஒருவித குஷிதான். ஆமை முதல் அனகோண்டா வரை பலவித பிராணிகள் உலகமெங்கிலும் வீடுகளில் வளர்க்கப்பட்டாலும் ஆல் டைம் ஃபேவரைட் பூனையும், நாயும் தான். நாய் வளர்ப்பவர்களிடம் நாய் என்று சொன்னால் முடிந்தது. அதற்கென்று ஒரு பெயர் இருக்கும். ரேஷன் கார்டில் பெயர் மட்டும் தான் இருக்காது மற்றபடி வீட்டில் யார் யாரை வளர்க்கிறார்கள் என்ற நிலையில் தான் அவைகள் நடந்துகொள்ளும். இவையனைத்துமே பூனைகளுக்கும் பொருந்தும். ஆனால் அவை நம்மைவிட்டு நீங்கும் நேரம் வந்துவிட்டால் அதைவிட கொடுமையான நாள் வேறெதுவுமாக இருந்துவிட முடியாது.

GataGrumpyCat4
Credit: capetownetc.com

அப்படி பலரை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது கோபக்கார பூனை ஒன்று. கடந்த 2012 ஆம் ஆண்டு ரெடிட் இணையதளத்தில் வெளியானது இந்த பூனையின் புகைப்படம். அப்போது அதன் வயது ஐந்து மாதங்கள் தான். கண்களை இரண்டையும் சுருக்கி ” ஹல்லோ மிஸ்டர் எஜமான் எப்போ சாப்பாடு வரும்? என்பதைப்போல இருந்த இந்த பூனையை பார்த்தவுடன் அதிகமானோருக்கு பிடித்துப்போய்விட்டது. இதனை பலர் Grumpy Cat என செல்லமாக அழைக்க அதுவே இணையத்தில் பிரபல்யமாகிப்போனது. ஆனால்  Grumpy Cat இன் நிஜப்பெயர்  டார்டர் சாஸ் (Tardar Sauce) ஆகும்.

grumpy_cat.jpg.
Credit: Mother Nature Network

இந்த Grumpy Cat ஐ வைத்து ஒரு படமே எடுக்கப்பட்டிருக்கிறது. Grumpy Cat’s Worst Christmas Ever என்னும் படத்தில் இந்தப்பூனை தான் பிரதான நாயகன். செல்லப்பிராணிகள் வளர்ப்பு மையத்தில் தன்னந்தனியாக இருக்கும் தன்னை யாரவது வாங்க விரும்புவார்களா? என்ற ஆவலுடன் காத்திருக்கும் பூனையாக இந்த Grumpy Cat நடித்திருக்கும். தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென பல யுக்திகளை கையாளும். இறுதியாக 12 வயது சிறுமியான கிறிஸ்டல் இந்த பூனையை வாங்கிச் செல்வாள்.கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின்போது காணமல் போன கிறிஸ்டலை நம் Grumpy Cat காப்பாற்றும் கதைதான் இந்தப்படம்.

grumby cat
Credit: Hürriyet Daily News

பிறக்கும்போதே ஒருவித மரபணு குறைபாடுடன் பிறந்த சாஸ் கடந்த சில மாதங்களாகவே சிறுநீரக தொற்றால் அவதியடைந்து வந்தது. பல முயற்சிகள் செய்தும் சாஸை காப்பாற்ற முடியவில்லை. சாஸின் மரணத்திற்கு அதன் ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் வருத்தம் தெரிவித்து வருகிறார்கள். முழுவதும் இயந்திரமயமான வாழ்க்கையாக மாறிப்போன சமுதாயத்தை, ஒரு பூனை தன்னுடைய பிரிவின் மூலம் கலங்கடித்துப் பார்த்திருக்கிறது. வெகு ஆழத்திற்கு சென்றுவிட்ட மனிதர்களின் கருணையையும், காதலையும் வெளியே எடுத்து வந்திருக்கும் சாஸ் என்றும் அதன் ரசிகர்களின் நினைவில் வாழும்.


NeoTamil.com - ல் எழுதப்படும் கட்டுரைகள் DMCA Copyright பெற்றவை. பதிவுகளை நகலெடுத்தல், தழுவுதல் ஆகிய செயல்களைக் கட்டுப்படுத்தக்கூடியது. பதிவுகளை பிற தளங்களில் அல்லது வடிவங்களில் (Audio, Video) பயன்படுத்த NeoTamil.com -ன் அனுமதி பெறுவது அவசியம்.

NeoTamil on Google News

அறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள். 

Get your daily dose of positivity by following NeoTamil’s Facebook page and Twitter.

Subscribe to our newsletter

To be updated with all the latest news, offers and special announcements.

- Advertisment -

Subscribe to our newsletter

To be updated with all the latest news, offers and special announcements.

Must Read

- Advertisment -
error: Content is DMCA copyright protected!