உலகின் அதிவேக இன்டர்நெட் கொண்ட நாடுகளின் பட்டியல் – இந்தியாவிற்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

0
157
increase-internet-speed-03-blog
Credit: NordVPN

இணையம் இல்லையேல் இல்லை இவ்வுலகம் என்ற நிலைமைக்கு நாம் வந்து பல வருடங்கள் கடந்துவிட்டன. உலகளாவிய இணைப்பு இணையம் மூலம்தான் சாத்தியமாகியிருக்கிறது. கடந்த இருபது ஆண்டுகளில் தொழில்நுட்பத்துறையில் அனைத்து மாற்றங்களுக்குமே இன்டர்நெட் தான் காரணம் என சொல்லிவிடலாம். ஒரு நாட்டின் வளர்ச்சியை நிர்ணயிக்கும் காரணியான இணையத்தின் வேகம் உலகம் முழுவதும் எப்படி இருக்கிறது? என்பதை Worldwide broadband speed league என்னும் அமைப்பு ஆராய்ந்திருக்கிறது.

increase-internet-speed-03-blog
Credit: NordVPN

200 நாடுகளில் இணையத்தின் வேகம், பாதுகாப்பு குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு முடிவினை வெளியிட்டிருக்கிறது. அதன்படி அதிவேக இன்டர்நெட் கொண்ட பட்டியல் ஒன்றினை இந்த நிறுவனம் தயாரித்திருக்கிறது. அதில் முதலிடம் பிடித்திருப்பது நமக்கு மிகவும் பரிட்சையமான சிங்கப்பூர் தான்.

எதன் அடிப்படையில் தேர்வு நடந்தது?

5 ஜி.பி அளவுள்ள படத்தினை டவுன்லோட் செய்ய ஆகும் நேரத்தினைப்பொறுத்து பட்டியல் வரையறுக்கப்பட்டிருக்கிறது. சிங்கப்பூரில் இருக்கும் புண்ணியவான்கள் 11 நிமிடம் 18 விநாடியில் 5GB அளவுள்ள ஒரு திரைப்படத்தை டவுன்லோடு செய்துவிடுகின்றனர். அதாவது நொடிக்கு 60.39 mbps வேகம்!! பாதுகாப்பான இணையத்தை உபயோகிப்பதிலும் சிங்கப்பூர் முதலிடத்தில் இருக்கிறது.

internet
Credit: Statista

அதிவேக இன்டர்நெட்டைப் பயன்படுத்துவதில் இரண்டாவது இடத்தில் ஸ்வீடனும் (46.00 mbps), மூன்றாவது இடத்தில் டென்மார்க்கும் (43.99 mbps) உள்ளன. அடுத்தடுத்த இடத்தில் நார்வே (40.12 mbps), ரோமானியா (8.60 mbps), பெல்ஜியம் (36.71 mbps), நெதர்லாந்து (35.95 mbps) ஆகிய நாடுகள் உள்ளன.

வல்லரசு நாடுகளான அமெரிக்கா 25.86 mbps வேகத்துடன் 20 வது இடத்திலும் பிரிட்டன் 18.57 mbps வேகத்துடன் 25 வது இடத்திலும் உள்ளது. டெக்னாலஜி எல்லாம் எனக்கு அல்வா சாப்பிடுகிற மாதிரி என்று பேசும் சீனாவை 141 இடத்தில் அமைதியா உக்காருங்க தம்பி என்று சொல்லியிருக்கிறது அந்த நிறுவனம். சீனாவின் இணைய வேகம் 2.38 mbps தானாம். அதுக்கு இந்தியா பரவால்ல என்கிறார்கள் நெட்டிசன்கள். ஆமாம் இந்தியா 88 வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் இணையவேகம் 5.19 mbps ஆக இருக்கிறது.

india internet
Credit: Business Standard

நம் ஊரில் 5 ஜி.பி அளவுள்ள படத்தை டவுன்லோட் செய்ய 2 மணி நேரம் 11 நிமிடம் 33 விநாடி நேரம் ஆகிறது. சரி பட்டியலில் கடைசியாக இருக்கும் நாடு எது என்று பார்த்தால் அது ஏமன் தான். இங்கு 0.31 mbps என்ற வேகத்தில் இணையம் பயன்படுத்தப்படுகிறது. 5 ஜி.பி படத்தை அவர்கள் டவுன்லோட் செய்ய 36 மணி நேரம் 52 நிமிடம் 20 விநாடி ஆகிறதாம்.