உலகின் எந்த மூலையில் இருக்கும் சிறு நகரத்தையும் இன்று நம்மால் எளிதில் தொடர்புகொள்ள முடிகிறதென்றால் அதற்கு ஒரே காரணம் உலகளாவிய இணையம் (World Wide Web). விண்வெளிக்கு ராக்கெட் ஏவுதல் முதல், ரசத்திற்கு எத்த்தனை மிளகு போடவேண்டும் என்பது வரை இணையத்தில் தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. நம்முடைய விரல்நுனியில் இந்த பிரபஞ்ச ரகசியத்தை நாம் கொண்டுள்ளோம். இதற்கு காரணமான உலகளாவிய இணையம் கண்டுபிடிக்கப்பட்டு இன்றோடு 30 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்கின்றன. பிரபல தேடுபொறி நிறுவனமான கூகுள் இதனைக் கொண்டாடும் வகையில் டூடுல் ஒன்றினை வெளியிட்டிருக்கிறது.
முதன் முதலாக…
ஐரோப்பிய அணுஆயுத ஆராய்ச்சி நிறுவனத்தில் (CERN) தலைமை ஆராய்ச்சியாளராக இருந்த டிம் பெர்னர்ஸ் லீ (Tim Berners Lee) என்பவர் தான் முதன்முறை இந்த இணையத்தைக் கண்டுபிடித்தார். ஆராய்ச்சி முடிவுகளை சேமித்து வைக்கவும், தேவைப்படும் நபர் அதை உபயோகிக்கவும் டிம் இதனை உருவாக்கினார். பின்னர் அதன் பயன்களை அறிந்து அந்த திட்டம் விரிவடையத் தொடங்கியது.
டிம் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்கும்போதே இந்த திட்டத்தைப் பற்றி நண்பர்களுடன் விவாதித்துள்ளார். செய்திகளை அதற்குரிய கணினியின் நினைவகத்தில் பதிவு செய்து குறிப்பிட்ட வார்த்தைகளை (பாஸ்வேர்டு போல) உபயோகிப்பதன் மூலம் அந்தே செய்தியை மறுபடி பார்க்கும் வகையில் இது அமைக்கப்பட்டிருந்தது. டிம்மின் இந்த திட்டத்தை பலர் கிண்டலடித்துக்கொண்டிருந்த போது அடுத்தகட்ட வேலையில் இறங்கினார் அந்த கடமை சிகாமணி.
ஆரம்பத்தில் அதாவது செயற்கைக்கோள்கள் அதிகமில்லாத, ஒளியிழை கண்டுபிடிக்கப்படாத காலத்தில் இணையவேகம் எப்படி இருந்திருக்கும்? நினைத்துப்பார்க்கவே கடுப்பாக இருக்கிறதல்லவா? ஆனால் இன்றைய அதிநவீன (?) சேவைகள் எல்லாம் அங்கிருந்துதான் துவங்கியிருக்கின்றன.

மேலே இருக்கும் வழிமுறைகளின்படி தான் இணையத்தை உருவாக்க இருப்பதாக டிம் அறிவித்தார்.
கூகுள் தனது ஆரம்ப கால முகப்புத்திரையில் இருந்த லோகோவை கொஞ்சம் டிங்கரிங் எல்லாம் செய்து இந்த டூடுலை வடிவமைத்திருக்கிருக்கிறது. 30 ஆண்டுகளுக்கு முன் எதிர்காலத்தை உருவாக்கிய மேதைக்கு அளிக்கப்படவேண்டிய மரியாதைதான் இது.