பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் நேற்றிலிருந்து பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. மேலும் அதன் துணை நிறுவனங்களான வாட்சாப், மெசஞ்சர், இன்ஸ்டாகிராம் போன்றவையும் இதே சிக்கலை சந்தித்தன. இதுகுறித்து கருத்து தெரிவித்த அந்நிறுவனம் இந்த இடையூறை உடனடியாக சரி செய்ய முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக அறிவித்திருந்தது.
இந்த இணையதள சிக்கலின் காரணமாக சுமார் 200 கோடி பேர் பாதிப்படைந்துள்ளதாகத் தெரிகிறது.

Error
பேஸ்புக்கில் போஸ்ட் போடாமலோ, இன்ஸ்டாகிராமில் படங்களை பார்க்காமலோ, வாட்சாப்பில் செய்திகளை பரிமாறாமலோ நம்முடைய நாள் முடிவிற்கு வருவதே இல்லை. கண்டிப்பாக இந்த செயலியில் அனைத்தையும் நம்மில் பலர் பயன்படுத்திக்கொண்டுதான் இருக்கிறோம். அனைத்தும் இல்லை என்றாலும் முழுவதுமாக இல்லை என்று யாராலும் சொல்லிவிட முடியாது.
நம்முடைய நாளில் பெரும்பான்மையான நேரத்தை இந்த செயலிகள் தான் ஆக்கிரமிக்கின்றன. நாம் காத்திருக்கும் நேரங்களில், இடைவேளையில், வாகன நெரிசலில் போன் இல்லையென்றால் முடிந்தது கதை. உலகம் முழுவதும் இதுதான் நிலைமை.
என்ன ஆச்சு?
சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க இணையத்தில் அதிக அளவிலான செயல்பாடுகள் ஒரே நேரத்தில் நடக்கும். இதனால் நம்முடைய கட்டளைக்கு உரிய சேவை நம் போனின் இணையம் மூலமாக தாமதமாகவே நமக்குக் கிடைக்கும். சுருக்கமாக சொல்லப்போனால் டிராபிக் ஜாம் மாதிரி.

இதுதான் பேஸ்புக்கிலும் பிரச்சினையைக் கிளப்பியிருக்கிறது. அதன் பிரபல வழி நிறுவனங்களான வாட்சாப், மெசஞ்சர், இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகளில் இதே மாதிரியான சிக்கல் ஏற்பட்டது தான் இந்த இடையூருக்கு காரணம்.
200 கோடி பேர்
இந்த இணையதள சிக்கலின் காரணமாக சுமார் 200 கோடி பேர் பாதிப்படைந்துள்ளதாகத் தெரிகிறது. டவுன்டிடெக்டர்.காம் இணையதள தரவுகளின் படி, வட அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் பேஸ்புக் பக்கம் முடங்கியதாக பயனாளர்கள் அதிக அளவில் தெரிவித்துள்ளனர். முன்னதாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சர்வர் பிரச்சினையால், பேஸ்புக் முடங்கியது. அதேபோல், செப்டம்பரிலும் நெட்வொர்க் பிரச்சினையால் பேஸ்புக்கில் பிரச்சினை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைத்தளங்களைப் பொறுத்தவரை distributed denial-of-service attack (DDos) என்பது மிகவும் ஆபத்தானது.
கிண்டலடிக்கும் ட்விட்டர்
பேஸ்புக் கதைக்கு ஆகாது என்றவுடன் இணையவாசிகள் அனைவரும் ட்விட்டர் பக்கமாக புலம்பெயர்ந்து பேஸ்புக் பற்றி வசைபாட ஆரம்பித்தார்கள். இவர்களின் புண்ணியத்தால் தான் #FacebookDown மற்றும் #InstagramDown ஆகியவை ட்ரென்டிங் ஆனது.

ஹேக்கர்கள் சதியா?
ஹேக்கர்கள் எனப்படும் திருட்டு ஆசாமிகளின் வேலையினால் இந்த தொந்தரவு ஏற்பட்டதா? என கேள்விகள் எழும்பியவண்ணம் இருக்கின்றன. ஆனால் பேஸ்புக், அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என சத்தியம் செய்திருக்கிறது.
சமூக வலைத்தளங்களைப் பொறுத்தவரை distributed denial-of-service attack (DDos) என்பது மிகவும் ஆபத்தானது. DDos என்பது நிறுவனத்தின் பாதுகாப்பு அம்சத்தில் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் பயனாளர்களுக்கு சரிவர அந்நிறுவனத்தால் சேவையை வழங்க முடியாது. இது குறித்து ட்வீட்டியுள்ள பேஸ்புக் DDos பிரச்சினையால் இந்த இடையூறு ஏற்படவில்லை என விளக்கம் அளித்திருகிறது.
எப்போ அக்கவுன்ட் சரியாகும்? எப்போ போஸ்ட் போடுறதுன்னு பல நெட்டிசன்கள் உள்ளக் குமுறல்களில் இருக்கின்றனர். பாவம்.