Home தொழில்நுட்பம் இணையம் குடிமக்களின் இணையதள நடவடிக்கைகளை கண்காணிக்க சமூக ஊடக மையம் - மத்திய அரசிடம் விளக்கம் கேட்கும்...

குடிமக்களின் இணையதள நடவடிக்கைகளை கண்காணிக்க சமூக ஊடக மையம் – மத்திய அரசிடம் விளக்கம் கேட்கும் உச்சநீதி மன்றம்

குடிமக்களின் இணையதள நடவடிக்கைகளை கண்காணிக்க சமூக ஊடக மையம் (Social Media Hub) ஒன்றை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக இரு வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் விளக்கம் தெரிவிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த சமூக ஊடக மையம் என்பது குடிமக்களின் வலைதளப் பதிவுகள், சமூக ஊடக செயல்பாடுகள் ஆகிய விவரங்களை சேகரித்து தேவைப்பட்டால் ஆய்வுக்கு உட்படுத்தும். பகிரி (WhatsApp) மூலம் பகிரப்படும் செய்திகளையும் கண்காணிக்க அரசு விரும்புவதாகவும் , இதன் மூலம் நாட்டை முழுமையான கண்காணிப்பின் கீழ் இயக்க அரசு விரும்புவதாக தெரிகிறது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சமீபத்தில்,இந்திய அமைச்சரகத்தின் கீழ் இயங்கும் பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் (BECIL), என்ற பொதுத்துறை நிறுவனம் இந்த மையத்தை உருவாக்கும் திட்டத்திற்கு மென்பொருளை வழங்குவதற்கான ஒப்பந்தம் ஒன்றை உருவாக்கியுள்ளது

இந்த திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஊடக நபர்கள் நியமிக்கப்பட்டு, அவர்கள் அரசாங்கத்தின் “கண்கள் மற்றும் காதுகளாக” பணியாற்ற வேண்டும்.மேலும் அவர்கள் தங்கள் இருப்பிடத்திலிருந்து உடனடி தகவல்களை வழங்க வேண்டும். டிஜிட்டல் அலைவரிசைகளில், தானியங்கு அறிக்கைகள் (automated reports), தந்திரமான நுண்ணறிவுகள் (tactical insights ) மற்றும் விரிவான பணி-பாய்வுகளை (comprehensive work-flows) வழங்குவதற்கான தளமாக இது எதிர்பார்க்கப்படுகிறது என்று அந்த ஒப்பந்த ஆவணம் குறிப்பிடுகிறது.

இது குறித்து அனைத்து இந்திய திரிணமூல் காங்கிரஸ் (ஏ.ஐ.டி.சி.) சட்டமன்ற உறுப்பினர் மஹூவா மோத்ரா உச்சநீதி மன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதை விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பாக இரண்டு வாரத்தில் பதில் அளிக்க மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது.

அரசு சமூக ஊடக மையம் ஒன்றை உருவாக்க ஒப்பந்தங்களை கோரி இருப்பதாகவும் அந்த மையம் ஆகஸ்ட் 20ம் தேதி முதல் செயல்பட தொடங்க இருப்பதாக மோத்ரவின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இந்த சமூக ஊடக மையத்தின் உதவியுடன் குடிமக்களின் சமூக ஊடக மற்றும் இணையதள பயன்பாட்டை அரசு கண்காணிக்க விரும்புவதாகவும் அவர் கூறினார், இது கீச்சு (twitter), முகநூல் (Facebook) மற்றும் படவரி (Instagram) மற்றும் அவர்களின் மின்னஞ்சல்களில் அவர்களின் சமூக ஊடக கணக்குகளை கண்காணிப்பதன் மூலம் செய்யப்படும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், வருகிற ஆகஸ்ட் 3ம் தேதி, இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் என்றும் இந்த சமூக ஊடக மையம் செயல்பட தொடங்குவதற்கு முன்பாக அரசின் ஏதேனுமொரு சட்ட அதிகாரி இது குறித்து நீதிமன்றத்தில் விளக்கமளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

இத்தகைய விசாரணையை நீதிமன்றம் சந்திப்பது இது முதல்முறை அல்ல.இதற்கு முன்னரே கடந்த ஜூன் 18ம் தேதி இது போனற விவகாரங்களுக்கு அவசர விசாரணை தேவை என்று உச்சநீதிமன்றம் அறிவித்திருந்தது .

அறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள். உங்கள் நண்பர்களுக்கும் தவறாமல் ஷேர் செய்யுங்கள்.

Get your daily dose of positivity by following NeoTamil’s Facebook page and Twitter.

Subscribe to our newsletter

To be updated with all the latest news, offers and special announcements.

- Advertisment -

Subscribe to our newsletter

To be updated with all the latest news, offers and special announcements.

Must Read

பூமியை நெருங்கும் NEOWISE வால்நட்சத்திரம்: எங்கே, எப்படி பார்ப்பது?

2020 ஆம் ஆண்டில் முதல் முறையாக விண்வெளி ஆர்வலர்கள் பலரும், ஒரு வால்மீன் / வால்நட்சத்திரம் வானில் தெரிவதால் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர். இந்த வால்நட்சத்திரம் பல மேற்கத்திய நாடுகளில்...
- Advertisment -