Tuesday, November 12, 2019
No menu items!

மூடுவிழா காண இருக்கும் கூகுள் ப்ளஸ்

Must Read

பறவைகளுக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்த ‘நிஜ பக்‌ஷி ராஜன்’, ‘Birdman’ சலீம் அலி கதை!

ஐந்தறிவு ஜீவன்களான பறவைகளை பற்றி ஆராய்ச்சிகள் செய்து , அவற்றின் பாதுகாப்பிற்காக முழு முயற்சி செய்தவர் சலீம் அலி - இவர் தான் இந்த வார ஆளுமை (நவம்பர் 12, 2019)

வீட்டு வேலை பார்த்து பின்னால் இரண்டு நோபல் பரிசு வென்ற மேரி கியூரி கதை!

புற்றுநோய் சிகிச்சையில் முக்கிய பங்கு வகிக்கும் ரேடியத்தை கண்டுபிடித்து அதனை பிரித்தெடுத்தவர் - மேரி கியூரி

உங்களுடைய பைக் மைலேஜை அதிகரிக்க நீங்கள் செய்ய வேண்டிய 10 விஷயங்கள்!

உங்களுடைய பைக்கின் மைலேஜை அதிகரிக்கச் செய்ய இதைப்படியுங்கள்!!

2011 – ஆம் ஆண்டு, ஜூன் மாதம் கூகுள் ப்ளஸ் எனும் சமூக வலைதளச்  சேவையை கூகுள் தொடங்கியது. பயனாளர்கள் தரும் அழைப்பின் பேரில் வாடிக்கையாளர்களுக்கு இந்த சேவை வழங்கப்பட்டது. கூகுளின் சேவைகளான ஜிமெயில், யூ ட்யூப் மற்றும் கூகுள் டாக்ஸ் ஆகியவற்றை ஒருங்கிணைத்து இயக்கும் வகையில் கூகுள் ப்ளஸ் தொடங்கப்பட்டது.

கடும் போட்டி

ஆரம்பத்தில் அதிகம் ஆர்வம் காட்டாத பயனாளர்கள், பின்னர் கூகுள் ப்ளஸைப்  பயன்படுத்தத் தொடங்கினர். ஆனால், சமூக வலைதளங்களின் ராஜாவாக இருக்கும் பேஸ்புக், ட்விட்டர் ஆகியவைகளின் நேரடிப் போட்டிக்கு கூகுள் ப்ளசால் ஈடு கொடுக்க முடியவில்லை.

கூகுள் இது குறித்துக் குறிப்பிட்ட போது, கூகுள் ப்ளஸ் மிகவும் குறைவான நபர்களால் பயன்படுத்தப் படுவதாகவும், பயன்பாடு எதிர்பார்த்த அளவுக்கு இல்லாமல் இருப்பதாகவும் கூறியுள்ளது. கூகுள் ப்ளஸ் சேவையைப் பயன்படுத்துபவர்களில் 90 சதவீதம் பேர், ஐந்து நொடிகளுக்கும் குறைவாகவே அதனைப்  பயன்படுத்துகின்றார்களாம். இருப்பினும், வர்த்தகப் பயனர்களின் பயன்பாட்டுக்காகத்  தொடர்ந்து கூகுள் பிளஸ் செயல்பாட்டை வைத்திருக்கவும், நிறுவனத்துக்குள்ளான உரையாடலுக்கு மட்டும் இந்தப் பயன்பாட்டைத் தொடர்ந்து கொடுக்கலாமா என்று யோசித்து வருவதாகவும் கூகுள் தெரிவித்துள்ளது.

தகவல் திருட்டுக் குற்றச்சாட்டு

இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த ஊடகம் ஒன்றில் கூகுள் ப்ளஸ் மூலம் அதன் பயனாளர்களின் தகவல்கள் திருடப்படுவதாக செய்தி வெளியானது. இந்தச் செய்தி இணைய உலகில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி அடங்குவதற்குள்ளேயே  கூகுள் பிளஸ் என்ற சமூக வலையமைப்புத் தளத்தை நிறுத்தப் போவதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சுமார் 5 லட்சம் பேரின் தனிப்பட்ட தகவல்கள் கூகுள் ப்ளஸ் வலை தளத்தில் இருந்து திருடப்பட்டது தெரிய வந்ததை அடுத்துத் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த மார்ச் மாதத்திலேயே இந்தச் சிக்கல் தெரிய வந்தாலும் அப்போது கூகுள் நிறுவனம் இது குறித்து வெளிப்படையாக எதுவும் தெரிவிக்கவில்லை.

Credit : Techaeris

சுமார் 438 வேறு செயலிகள், கூகுள் ப்ளஸில் இருந்து பயனாளர்களின் பெயர், மின்னஞ்சல் முகவரி, முகவரி, பாலினம், பணி செய்யுமிடம் போன்ற தகவல்களைத் திருடியுள்ளது தெரியவந்ததை அடுத்து கூகுள் இந்த முடிவை எடுத்துள்ளது.

அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் கூகுள் பிளஸ் ஒட்டுமொத்தமாக நிறுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. 10 மாதங்களுக்குள் பயனாளர்கள் தங்களின் தகவல்களைப்  பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Latest News

பறவைகளுக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்த ‘நிஜ பக்‌ஷி ராஜன்’, ‘Birdman’ சலீம் அலி கதை!

ஐந்தறிவு ஜீவன்களான பறவைகளை பற்றி ஆராய்ச்சிகள் செய்து , அவற்றின் பாதுகாப்பிற்காக முழு முயற்சி செய்தவர் சலீம் அலி - இவர் தான் இந்த வார ஆளுமை (நவம்பர் 12, 2019)

வீட்டு வேலை பார்த்து பின்னால் இரண்டு நோபல் பரிசு வென்ற மேரி கியூரி கதை!

புற்றுநோய் சிகிச்சையில் முக்கிய பங்கு வகிக்கும் ரேடியத்தை கண்டுபிடித்து அதனை பிரித்தெடுத்தவர் - மேரி கியூரி

உங்களுடைய பைக் மைலேஜை அதிகரிக்க நீங்கள் செய்ய வேண்டிய 10 விஷயங்கள்!

உங்களுடைய பைக்கின் மைலேஜை அதிகரிக்கச் செய்ய இதைப்படியுங்கள்!!

இந்திய அணுசக்தி ஆராய்ச்சியின் தந்தை டாக்டர் ஹோமி ஜஹாங்கிர் பாபா – கதை

ஹோமி ஜஹாங்கிர் பாபா அவர்கள் ஒரு இயற்பியல் விஞ்ஞானி. இந்தியாவின் அணுசக்தி துறைக்கு வித்திட்டவர். இந்திய அணுசக்தி ஆராய்ச்சியின் தந்தை. அணு வெடிப்பு, ஐசோடோப்புகளின் உற்பத்தி, யுரேனியத்தை சுத்திகரித்தல் ஆகியவை குறித்து முதன்...

குருப்பெயர்ச்சி 2019: உங்களுடைய ராசிக்கு எப்படி இருக்கப்போகிறது?

நிகழ இருக்கும் குருப்பெயர்ச்சி உங்களுடைய ராசிக்கு எப்படி இருக்கப்போகிறது? என்பதனைத் தெரிந்துகொள்ளுங்கள்!

More Articles Like This