குறைந்த விலைக்கு அசத்த வரும் பிளாக்பெரி கீ2 எல்இ கைபேசிகள் .!

0
45

பிளாக்பெரி நிறுவனம் (Black Berry) பல்வேறு புதிய மாடல் கைபேசிகளை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் போன்களுக்கு தனி வரவேற்பும் இருக்கின்றது. இந்தியாவில் இளைஞர்கள் பிளாக்பெரி கைபேசிகளை விரும்பி வாங்குகின்றனர்.

இந்த நிறுவனத்தின் மாடல் கைபேசிகள் பல்வேறு வசதிகளையும் உள்ளிடக்கியுள்ளது. மேலும், இதில் உள்ள தொழில் நுட்ப வசதிகள் மற்ற நிறுவனத்தை காட்டிலும் சிறப்பாகவும் தரமானதாகவும் இருக்கின்றது. இந்தியச் சந்தையில் போட்டி நிலவி வருதால் புதிய ஸ்மார்ட் போன்களை பிளாக்பெரி வெளியிட்டு வருகின்றது.

பிளாக் பெரி கீ2 எல்இ

பிளாக் பெரி ஸ்மார்ட் போன் நிறுவனம் தற்போது, தற்போது தனது புதிய அறிமுகமான பிளாக் பெரி கீ2 எல்இ (Blackberry Key 2 Le) போன் குறித்து டீசரை வெளியிட்டுள்ளது. மேலும், இந்த நிறுவனத்தின் கைபேசிகள் வரும் 30-ம் தேதி விற்பனைக்கு வரும் என்று தெளிவாகக் கூறியுள்ளது.

 

மாறுபட்ட தோற்றம்

பிளாக் பெரி கீ2 எல்இ தற்போது மாறுபட்ட தோற்றத்தில் வெளியாக இருக்கின்றது. கைபேசியின் முனைப்பகுதியில் கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் அலுமினியம் பூசப்பட்டு இருக்கின்றது.

 

திரை

பிளாக் பெரி கீ2 எல்இ-யின் திரை 4.5 இன்ச் அளவில் இருக்கின்றது. மேலும், ஹெச்டி டிஸ்பிளேவில் 1620 x 1080 என்ற விகிதாச்சார அடிப்படையில் பிக்சல் இருக்கின்றன. மேலும், கொரில்லா கிளாஸ் 3 என்ற பாதுகாப்பு கண்ணாடி இருக்கின்றது.

 

12 எம்பி கேமரா

பிளாக் பெரி கீ2 எல்இ-யை குவால்காம் ஸ்னாப்டிராகன் (Qualcomm Snapdragon) இயக்குகின்றது. 12 எம்பி கேமராவும் இருக்கின்றது. மெமரி 4 ஜிபி-யும்  உள்ளடக்க மெமரி  32 ஜிபி மற்றும் 64 ஜிபி-யாகவும் இருக்கின்றது. மற்ற போன் நிறுவனங்களைப் போலவே ப்ராசசர்களைக் கொண்டுள்ளது.

 

பேட்டரி மற்றும் விலை

இந்த போன் 3 ஆயிரம் எம்ஏஹெச் (mAh) பேட்டரியைக் கொண்டுள்ளது. ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோவில் இயங்குகின்றது. இதில் 4ஜி வோல்ட், வை-பை, புளூடூத், டுயல் சிம், 3.5 ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இருக்கின்றன. இந்த போனில் விலை ரூ.15 ஆயிரம், மேலும், இது  156 கிராம் எடை கொண்டுள்ளது.