இந்தியாவில் தேர்தல் நேரத்தில் பாதிப்பை ஏற்படுத்தப்போகும் நிஜ ‘போலி’ வீடியோக்கள்!

Date:

இந்த 21 ஆம் நூற்றாண்டில் “போட்டோஷாப்” பல செய்திகளின் மீது ஏற்படுத்திவரும் தாக்கம் நாம் அறிந்ததே. போட்டோஷாப் மென்பொருளை மட்டுமே நம்பி அரசியல் செய்துவரும் கட்சிகள் பற்றியும் நீங்கள் அறிந்திருப்பீர்கள். இந்நிலையில், 2020-ம் ஆண்டு முதல் அச்சு அசலான நிஜ ‘போலி’ வீடியோக்களும் களத்தில் குதித்துள்ளன. செயற்கை நுண்ணறிவு மூலம் தயாரிக்கப்படும் போலி வீடியோக்களில், ‘வீடியோ போலியானது அல்ல’ என்று முழு நம்பிக்கை வரும் அளவு செய்து முடிக்க முடியும்.

இதற்கு சான்றாக பாரதிய ஜனதா கட்சியின் மனோஜ் திவாரி, கெஜ்ரிவால் முதலமைச்சராக இருக்கும் டெல்லி அரசை கடுமையாக விமர்சித்த வீடியோவை குறிப்பிடலாம். அரசியல் நோக்கத்திற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு ஆழமான போலி (Deepfake) வீடியோ இது. ஆனால், இந்த வீடியோ கடைசி வீடியோவாக மட்டும் இருக்காது.

பாஜக வாக்கு சேகரிப்பில், வெவ்வேறு மொழிகளில் தங்கள் பிரசாரம் சென்றடைய இதுபோன்ற வீடியோக்களைத் தயாரிக்கிறது.

இந்தியாவில் 22 முக்கிய மொழிகள் உள்ளன. அதில், 13 மொழிகள் வெவ்வேறு விதத்தில் எழுதப்பட்டு வருகிறது. மேலும், 720 கிளை மொழிகளும் இந்தியாவில் பயன்பாட்டில் உள்ளது.

மனோஜ் திவாரி உண்மையில் வெளியிட்ட வீடியோவில் “தற்போதைய டெல்லி தலைமை தங்கள் வாக்காளர்களுக்கு தவறான வாக்குறுதிகளை அளித்ததாக குற்றம் சாட்டினார்”.

இது உண்மையான வீடியோ!

ஆனால், போலியாக உருவாக்கப்பட்ட வீடியோக்கள் 58,000 வாட்ஸ்அப் குழுக்களில் பகிரப்பட்டு 15 மில்லியன் மக்களை சென்றடைந்துள்ளது. காரணம் அது டெல்லி பகுதியில் பேசப்படும் ஹரியான்வி மொழியில் பேசப்பட்டிருந்தது தான் காரணம். இதை பாஜக திட்டமிட்டு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

திவாரியின் புனையப்பட்ட வீடியோ டெல்லியில் உள்ள ஹரியான்வி மொழி பேசும் புலம்பெயர்ந்த தொழிலாளர் மக்களை போட்டி அரசியல் கட்சிக்கு வாக்களிப்பதைத் தடுக்க பரவலாகப் பயன்படுத்தப்பட்டது.

மேலே உள்ள உண்மையான வீடியோவுக்கும், கீழே உள்ள இரண்டு போலி வீடியோக்களுக்கும் உள்ள 6 வித்தியாசங்களை நீங்களே கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

ஹரியான்வி மொழியில் வெளியிடப்பட்ட ஆழப்போலி வீடியோ(Deepfake Video) இது

ஆங்கில மொழியில் வெளியிடப்பட்ட ஆழப்போலி வீடியோ(Deepfake Video) இது…

ஒபாமாவும் தப்பவில்லை

இதற்கு அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தற்போதைய அதிபர் டிரம்ப்பை “complete dipshit” என்று குறிப்பிட்டதாக வீடியோக்களில் வெளியானதை சுட்டிக் காட்டலாம். இது கூட தொழில்நுட்ப வளர்ச்சியின் பிரதிபலிப்புதான்.

தான் சொல்லாத, வார்த்தை வெளிப்படும் போது மனிதனின் அந்தரங்கம் எவ்வளவு பாதிக்கப்படும் என்று சிந்திக்க வேண்டும்.

Sensity நிறுவனத்தின் கூற்றுப் படி 2019 ஆம் ஆண்டு 15,000 போலி வீடியோக்கள் வைரலாகியுள்ளது. அதுவே அடுத்த ஒன்பது மாதங்களில் 96 சதவீதம் ஆபாசமான போலி வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதில், பல பிரபலங்களும் பாதிக்கப்பட்டனர்.

இந்த குறிப்பிட்ட விஷயத்தில் மனோஜ் திவாரியின் கட்சி ஒரு வகையான உயர் தொழில்நுட்ப டப்பிங் குழுவிற்கு டீப்ஃபேக்குகளுக்கும் ஒப்புதல் அளித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில், பேச்சாளரின் உதடு மற்றும் முகபாவங்கள் திவாரி பேசாத சொற்களை கூறும் நகல் ஆடியோவுடன் ஒத்திசைக்கப்படுகின்றன.

எதிர் காலத்திலும் இதுபோன்ற ஆபத்துகள் பத்திரிகைகள், ஊடகங்கள் மீதான மக்களின் நம்பிக்கையை முற்றிலும் குறைக்கலாம். வரும் நவம்பரில் அமெரிக்க அதிபர் தேர்தல் வருவதால், இது பல போலி வீடியோக்களை நாம் நிச்சயம் பார்க்கலாம். செயற்கை நுண்ணறிவு பல நாட்டு மக்களின் தலையெழுத்தை தீர்மானிக்கும் ஆயுதமாக மாறிவிட்டது.

இந்தியாவிலும் இன்னும் சில மாதங்களில் பல மாநிலங்களில் தேர்தல் வரப்போகிறது. தமிழ் நாட்டிலும் தான்! இது போன்ற போலி வீடியோக்கள் வெளியானால், இந்தியாவில் தேர்தல் நேரத்தில் பல கட்சிகளுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

அணுகுண்டு போல அனைத்து கட்சிகளிடமும் இது போன்ற போலி வீடியோக்கள் இருந்தால் எந்த கட்சிக்கும் பாதிப்பு இருக்காது. ஏனெனில், ஒரு கட்சி போலி வீடியோ வெளியிட்டு இன்னொரு கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தினால், பாதிக்கப்பட்ட கட்சியும் போலி வீடியோவை வெளியிட தயங்காது.

இனிமேல் போலி வீடியோக்கள் அதிகம் வரக்கூடும் என்பதால், பிரச்சினைக்குரிய விஷயத்தை நாம் ஆழமாக விசாரிக்காமல் பரப்புவதை தவிர்க்கலாம்.

அத்துடன் கண்ணால் காண்பதும் பொய்..! காதால் கேட்பதும் பொய்… தீர விசாரிப்பதே மெய்! என்பதை நாம் இதன் மூலம் உணர முடியும்.

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!