உங்களுடைய இசைத்திறமைக்கு வாய்ப்பளிக்கும் கூகுள்!!

0
262
bach_doodle_google_ai

இன்றைய கூகுள் டூடுலை கவனித்தீர்களா? பொதுவாக பல்துறை அறிஞர்களின் பிறந்தநாள், நினைவுநாள், முக்கிய தினங்கள், விண்வெளி வரலாற்று நிகழ்வுகளை மையமாக வைத்து கூகுள் நிறுவனம் டூடுல் ஒன்றினை வெளியிடும். நமது எழுத்தாணியில் கூகுள் டூடுல் பற்றி தொடர்ந்து எழுதி வருகிறோம்.

இன்றைய டூடுலின் சிறப்பு என்ன? இரண்டு விஷயங்கள் இருக்கிறது. முதலாவது இன்று மிகச்சிறந்த இசைக் கலைஞரான ஜோஹன் செபாஸ்தியன் பேச் (Johann Sebastian Bach) அவர்களின் பிறந்தநாள். இசை உலகிற்கு அவருடைய பங்களிப்பை நினைவுகூரும் விதமாக கூகுள் இந்த டூடுலை வடிவமைத்துள்ளது.

bach_doodle_google_aiஇரண்டாவது, இந்த டூடுலை உருவாக்கியது முழுவதும் செயற்கை நுண்ணறிவுடன் கூடிய ரோபோக்கள் ஆகும். ஆமாம். கூகுளின் இந்த மைல்கல் முயற்சியில் கூகுள் மெஜெண்டா (Google Magenta) மற்றும் கூகுள் பேர் (Google PAIR) ஆகிய குழுக்கள் இணைந்து பணியாற்றியுள்ளன.

கீ போர்ட்

நீங்கள் டூடுலை கிளிக் செய்தவுடன் செபாஸ்தியன் பற்றிய செய்திக்குறிப்புகள் வரும். கீழிருக்கும் ப்ளே பொத்தானை கிளிக் செய்தால் உங்களது திரையில் கீபோர்டு தோன்றும். எப்படி அதை உபயோகிப்பது என்ற பயிற்சி குறிப்புகளும் வழங்கப்படுகின்றன. அதன்பின் உங்களுடைய சுட்டியை திரையில் உள்ள கோட்டை தொடுவதன் மூலம் இசையினை உருவாக்கலாம்.

அதனை இசைக்கச் செய்யும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல நீங்கள் உருவாகியிருக்கும் இசைக்கோர்வையை உங்களுடைய நபர்களுக்கு பகிரும் வசதியும் உள்ளது. இத்தனையும் செய்தது ரோபோட். நம்ப முடிகிறதா?

கடின உழைப்பு

Artificial intelligence எதிர்காலத்தை விரல்நுனியில் அடைக்கும் மிகப்பிரம்மாண்டமான கண்டுபிடிப்பு. ரோபோக்கள் தானாக இயங்கும் வசதிகளைப் பெரும் தொழில்நுட்பமே Artificial intelligence எனப்படுகிறது. எளிதாக சொல்லவேண்டுமென்றால் ரோபோவிடம் நீங்கள் ஒவ்வொரு முறையும் கட்டளைகளை அளித்துக்கொண்டே இருக்கவேண்டும். ஆனால் Artificial intelligence ல் தகவல்கள் மற்றும் கட்டளைகளை ஒருமுறை அளித்துவிட்டால் அதுவே தொடர்ந்து இயங்க ஆரம்பிக்கும். தொழில்நுட்ப வேலையில் சிக்கலானது என்றாலும்கூட எதிர்காலம் அதனை மையமாக வைத்தே இயங்கப்போகிறது என்பது மட்டும் உண்மை.

கூகுள் எப்படி இதனை உருவாக்கியது என்பதனைக்கான இந்த வீடியோவை கிளிக் செய்யவும்.

இன்று மறக்காமல் கூகுள் டூடுலில் கீபோர்டு வாசித்து மகிழுங்கள். அப்படியே செபாஸ்தியனுக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லிவிடுங்கள்.