எதிர்கால போர் விமானங்கள் எப்படி இருக்கும்?

Date:

அபிநந்தன். இன்றைக்கு உலக நாடுகள் முணுமுணுக்கும் ஆகாயப்பறவை. நாளைய இந்தியா – பாக் உறவை நிர்ணயிக்கும் ஒற்றைச்சொல் ஆயுதம். எல்லையில் ஊடுருவிய பாகிஸ்தான் விமானங்களை,  தாக்குவதற்கு புறப்பட்ட மிக்-21 விமானத்தில், விங் கமாண்டர் அபிநந்தன் இல்லாதிருந்தால் அல்லது எந்தவொரு விமானியும் இல்லாதிருந்தால் எப்படியிருக்கும் என்று?

mirage
Credit: gqindia

பொதுவாக பயணிகள் விமானங்களிலும், ராணுவ அல்லது சரக்கு விமானங்களிலும் மற்றும் உயர்ரக ஹெலிகாப்டர்களிலும் Auto Pilot எனும் தானியங்கி கட்டுப்பாட்டு சாதனம் பொருத்தப்பட்டிருக்கும். அவசர காலங்களிலோ அல்லது இயற்கை தடைகளின் போது விமானிகளுக்கு உதவுவதற்காக இவை வடிவமைக்கப்பட்டவை. ஆனாலும் நெருக்கடி சூழ்நிலைகளில்  இவைகளை மட்டுமே நம்பி விமானங்கள் இயங்குவதில்லை. ஆட்டோ பைலட் மோடானது ஒரு விமானத்தில் வடிவமைக்கப்பட்டிருந்தாலும் அவை இயங்கும்போது அதனை  விமானிகள் கட்டாயம் கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும். போர் விமாங்களில் வடிவமைக்கப்பட்டிருக்கும் ஆட்டோ பைலட் தனி ரகமானவை. அதிவேகத்தில் பயணிக்கும் போர் விமானங்கள்,  தன் பாதையிலிருந்து ஒரு இஞ்ச் விலகினால் கூட விமானத்தின் இலக்கு தவறிவிடும், அல்லது அதுவே எங்காவது சென்று மோதிவிடும். அவற்றின் சர்க்யூட் டில் ஏற்படும் சிறு காயம் கூட விலைமதிப்பற்ற விமானிக்கு வேட்டு வைத்துவிடும்.

BOEING

போயிங் என்பது அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு, பயணிகள் மற்றும் போர் விமானங்களைத் தயாரிக்கும் நிறுவனம் ஆகும்‌. தற்போது உலகெங்கும் பேசப்பட்டு வரும் ஐந்தாவது தலைமுறை போர் விமானங்களைக் தயாரிக்கும் பல நிறுவனங்களுள் இதுவும் ஒன்று. Lockheed Martin, Northrop Grumman, Raytheon, General Dynamic போன்றன போயிங்கின் இதர போட்டி நிறுவனங்களாகும்‌. இந்த அனைத்து நிறுவனங்களின் பொதுவான இலக்கு ஆளில்லாத ஸ்டீல்த் (stealth fighter aircraft) ரக போர் விமானங்களைத் தயாரிப்பதாகும்.

war jet
Credit: ainonline

ஐந்தாம் தலைமுறைப் போர் விமானம்

ஐந்தாம் தலைமுறை போர் விமானங்கள் என்பது அதிநவீன (ரகசியமான) மின்னணு சாதனங்கள் மற்றும் ஏவியேஷன் வடிவமைப்பு கொண்டவை. அதன்படி, எதிரி நாட்டு ரேடாரில் அகப்படாமல் லாவகமாக தப்பித்துச் செல்லக்கூடியவை. ரேடார் சிக்னல்களை தனது மெல்லிய வெளிப்புறத்தால் திசைதிருப்பவும் அல்லது வெளிப்புற உலோகம் மற்றும் அதன்மீது பூசப்படும் பெயிண்ட் மூலமும் ரேடார் சிக்னல்களை உறிஞ்சி வைத்து கொள்ளவும் முடியும். அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், சீனா, பிரான்ஸ் போன்ற நாடுகளின் இராணுவத்தில் இந்தத் தொழில்நுட்பம் கொண்ட விமானங்கள் உள்ளன. இதே நாடுகள் ஆறாம் தலைமுறை போர் விமானங்களைத் தயாரிக்கவும் ஆராய்ச்சி செய்து வருகின்றன. அதன் சிறப்பம்சங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படுகின்றன. எனினும் Lockheed Martin நிறுவனம் எதிர்கால போர் விமானங்களுக்காக லேசர் துப்பாக்கிகளை  வடிவமைத்து வருவதாக தெரிவித்துள்ளது.

ஆட்டோபைலட்

இவை விமானிகள் அறையில்  (Cockpit) உள்ள கணிணிகளில், சென்சார்களால் செலுத்தப்படும்  காற்றின் வேகம், வெளிப்புற மற்றும் உட்புற அழுத்தம், தொலைவு மற்றும் உயரம் போன்ற உள்ளீடுகளைத் தீர்மானித்து அவ்வப்போது உயரங்களை மாற்றியமைத்து விமானத்தைப் பறக்கவைக்கும். ஒரு சில விமானங்களில் இவை மூலம் தரையிறங்கவும் முடியும்.

A330_COCKPIT
Credit: Airbus

லாயல் விங்மேன்- சுயமாக சிந்திக்கும் போர் விமானம்

அமெரிக்காவுக்கு அப்பாலும் போயிங் நிறுவனத்திற்கு ஆராய்ச்சித் தளங்கள் உள்ளன. ஆஸ்திரேலியா விமானப்படைக்காக  (Royal Australian Air Force) ஆளில்லா செயற்கை நுண்ணறிவுடன்கூடிய போர் விமானங்களை போயிங் தயாரித்து வருகிறது. 2020 களில் முழு உற்பத்தி தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில் இதன் மாதிரி வடிவம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதனை மேம்படுத்த ஆஸ்திரேலியாவை தேர்வு செய்யக் காரணம் அந்த நாட்டின் வான்பரப்பில்தான் விமானங்களின் டிராபிக் குறைவு. இந்த ஆளில்லா விமானம் எதிரி மற்றும் நட்பு விமானங்களைத் தானாகவே கண்டறியவல்லது. சக விமானங்களுடன் பறக்கும்போது பாதுகாப்பாக  இடைவெளியை நிர்வகித்துக் கொள்ளும்.

3200 கிமீ தொலைவு வரை இதனை நம் கட்டுப்பாட்டில் வைத்து இயக்க முடியும். கண்காணிப்பு விமானமாகவும் செயல்படவைக்க முடியும். தனது பைலட் மற்றும் சக விமான பைலட்டுகளுடன் பேசவும், அவர்களுக்கு  போர் நிலைமைகளை கண்காணித்து, சுயமாக சிந்தித்து, களத்தில் தொழில்நுட்ப ஆலோசனை வழங்கக்கூடியது.

war jet plane
Credit: Defense News

தானாகவே சிந்தித்தாலும் இவை உணர்ச்சிவசமானவையல்ல. இந்த திட்டத்திற்கு Loyal wingman –  Advanced Development Program எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த நவீன தொழில்நுட்பம் ஸ்டீல்த் ரக விமானமாக வரவுள்ளது. அல்லது இந்த மென்பொருள் p-8 Poseidon மற்றும் E-7 Wedgetail airborne early warning and control aircraft என்ற விமானங்களின் மேம்படுத்தப்பட்ட மாடலாக வரலாம். இங்கே E7 என்பவை எதிரியின் தாக்குதலை முன்கூட்டியே கணிக்க வல்லது. Poseidon என்பவை நீர்மூழ்கிக் கப்பல்களை கண்டுபிடித்து அழிப்பவை. எதிர்காலத்தில் இவை உலகநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவும் மற்றும் அந்தந்த நாடுகளின் தேவைக்கேற்ப வடிவமைப்பில் மாற்றம் செய்யப்பட்டு, அங்கேயே தயாரிக்கப்படவும் உள்ளன.

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!