Online Interview – க்கு நம்மை தயார்படுத்துவது எப்படி? 6 முக்கியமான வழிமுறைகள்!

Date:

கொரோனா தொற்று உலகம் முழுவதும் பல்வேறு துறைகளை வீழ்ச்சியடைய செய்துள்ளது. உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கானோர் தங்கள் வேலைகளை இழந்து வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.

இதன் மூலம், பெரும்பாலான நிறுவனங்களுக்கும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, இனி வரும் காலங்களில் ‘Work from home’ என்று சொல்லப்படும் வீட்டில் இருந்து வேலை பார்ப்பது, ‘Freelancer Jobs’ என்ற முறையில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்ப்பது போன்றவற்றை அடைப்படையாக கொண்டு, பெரும்பாலான வேலை வாய்ப்புகள் உருவாகும். அதுமட்டுமின்றி, இன்றைய ஆன்லைன் கல்வி (Online Learning) முறை, போட்டி தேர்வுகளுக்கு (competitive Exams) தயாராவது மற்றும் பெரும்பாலான முக்கிய ஒப்பந்தங்கள் அனைத்துமே ஆன்லைன் மூலமே நடைபெறுகின்றது.

எனவே, இனிமேல் எந்த வேலையாக இருந்தாலும் அதை வீட்டிலிருந்தே செய்வதற்கு வழி வகை செய்யும் தொழில் நுட்பம் சார்ந்த பணிகளில் அதிக வாய்ப்புகள் இருக்கும். இதில் பல வசதிகள் இருப்பதால், ஒரு சில முன்னணி நிறுவனங்கள், கொரோனா முடிந்த பிறகும் தங்கள் வேலை ஆட்களை நிரந்தரமாக வீட்டில் இருந்து பணி அமர்த்தி, அதிக லாபம் ஈட்ட திட்டமிட்டுள்ளனர். மேலும், இந்த கொரோனா காலத்தில் “ஜூம்” (Zoom) நிறுவனம் பல மில்லியன் டாலரகளை் ஈட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற சூழலில், நம்மை Online ஜூம் (Zoom) இன்டெர்வியூக்கு தயார்படுத்தி கொள்வது எப்படி என்று தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

online interview004
Credit: GETTY

1. கண்களை நேராக பார்த்து பேச வேண்டுமா?

முதலில் உங்களிடம் இன்டர்வியூ நடத்துபவரை உயர்ந்தவராகவும், உங்களை ரொம்பத் தாழ்ந்தவராகவும் நினைக்க வேண்டாம். அவரை உங்கள் நண்பரைப் போலப் பாவித்துப் கண்களை நேராகப் பார்த்துப் பேச வேண்டும். அது இயல்பாகவும், தன்னம்பிக்கையாகவும் உங்களைப் பேச வைக்கும். அதிக மரியாதை குடுப்பதும், அதிக உரிமை எடுத்துப் பேசுவதும், தவறு என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.

2. எப்படி உடை அணிந்து கொள்வது?

நல்ல உடை அணிவது, கைவிரல் நகங்களை தூய்மையாய் வைத்திருப்பது, ஆண்களெனில் ஒழுங்காக ஷேவ் செய்திருப்பது போன்றவற்றையெல்லாம் ஆன்லைன் இன்டெர்வியூக்கு தயாராகும் போது, கவனத்தில் கொள்ளுங்கள். பொதுவாக, எல்லா விதமான இன்டெர்வியூக்கும் உடையின் கலர் மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஏனெனில், அவை தான் உங்களிடம் இன்டெர்வியூ எடுப்போருக்கு உங்கள் மீது நல்ல பிம்பத்தை உருவாக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

உதாரணாமாக, நீங்கள் நீல கலர், இளஞ்சிவப்பு, மஞ்சள் மற்றும் மென்மையான வெளிர் நிறங்களில் உடைகளைத் தேர்வு செய்வது பார்ப்பவருக்கு பிரகாசமாகத் தோன்றும். சில சமயங்களில், ஒரு உயர்-கழுத்து ஒரு வட்டக் கழுத்து அல்லது ஆடை குறைப்பு என்பது உங்களைச் சற்று தடுமாறச் செய்யலாம். அதற்குப் பதிலாக நீங்கள் வி-நெக் டீ-ஷர்ட் அல்லது டாப்பை எடுத்துக் கொள்ளுங்கள். காலர் சட்டையில் பட்டன் அவிழ்க்கப்படாது இருப்பது நல்லது.

3. சிகை அலங்காரம்:

ஒரு ஆன்லைன் இன்டெர்வியூக்கு அதீத மேக்கப் போடுவது ஆபத்தாகும். லிப்ஸ்டிக்கை அதிகமாய்ப் போடுவது, அதிக நகை அணிவது, ஐப்ரோவை அடிக்கும்படி வைப்பது போன்றவை உளவியல் ரீதியாக தன்னம்பிக்கைக் குறைபாட்டையே வெளிப்படுத்துகின்றன. திறமையாய் சாதிக்க முடியாததை வசீகரத்தால் வீழ்த்த முயலும் போது, பெரும்பாலும் தோல்வியே கிடைக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

4. தலைமுடியை பொருத்து உடை அணிய வேண்டும்:

உங்கள் தலைமுடி கருப்பாக இருந்தால், கருப்பு நிற உடையினை தேர்வு செய்ய வேண்டாம். ஏனெனில், சில சமயங்களில் இந்த வண்ண உடை (color combination) ஆன்லைன் இன்டெர்வியூக்கு சிறந்த தெளிவுத்திறனை வழங்காது.

மேலும், இந்த வண்ணஉடைகள், ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் இருக்கும் பட்சத்தில் உங்களை இன்டெர்வியூ செய்பவரைக் குழப்பவும் நேரிடும். எனவே, கறுப்புக்கு மாறாக மாறுபாட்ட வண்ண உடையினை நீங்கள் தேர்வு செய்வது சிறந்தது.

5. உடையினை சரிபார்த்துக் கொள்ளுங்கள்:

லேப்டாப் மூலம் ஆன்லைன் இன்டெர்வியூவில் பங்கெடுப்பவராக இருந்தால், ஆரம்பிக்கும் முன்பு போனை சுவிட்ச் ஆஃப் செய்து விடுங்கள். துணிகளைச் சுத்தம் செய்து கறை, தையல் கிழிந்த மற்றும் சுருக்கங்கள் இல்லை என்பதனை உறுதிப்படுத்தி கொள்வது நல்லது. குறிப்பாக, ஆடைகளின் கீழ் இருந்து உள்ளாடைகள் காணப்படக்கூடாது.

6. உற்சாகம் அவசியம்:

பொதுவாக எந்த இன்டர்வியூவாக இருந்தாலும் எக்காரணம் கொண்டும் உற்சாகம் இல்லாதவராய் இருக்கவே இருக்காதீர்கள். ஒரு இன்டர்வியூவிலயே உற்சாகமா இல்லாதவனை வேலைக்கு யாரும் எடுப்பதில்லை. எனவே, உற்சாகமாய் இருக்க கற்று கொள்ளுங்கள்.

முக்கியமாக, வேலை கிடைப்பதற்கு பெரிய பெரிய தேர்வுகள், கேள்விகள் எல்லாம் இருக்கும் என நாம் நினைப்போம். ஆனால், பல சமயங்களில் இது போன்ற சின்னச் சின்ன விஷயங்கள் தான் மிகப்பெரிய வாய்ப்புகளை வீணாக்கும் என்பதை உணர்ந்து செயல்படுவது அவசியம்.

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!