தமிழில் புதிய கலைச்சொற்களை உருவாக்க விரும்பி #தழைக்கும்_தமிழ் பகுதியியை தொடங்கி இருக்கிறோம்.
Drone – என்பது தொலைவிலிருந்து கட்டுப்படுத்தப்படக் கூடிய மிகச் சிறிய அளவிலான விமானம் போன்றதாகும். இவ்வார்த்தை தேனீயையும் குறிக்கும்.
அண்மைக் காலமாக Drone பயன்பாடு அதிகரித்து வருவதால் மொழிபெயர்ப்பு/சொல்லுருவாக்கம் தேவைப்படுகிறது.
ஆங்கிலம்/ENGLISH | தமிழ்/TAMIL | விளக்கம்/EXPLANATION |
Drone | மின்னீ | மின் + தேனீ வழியாக உருவானது மின்னீ என்ற இந்த சொல். மிகவும் எளிமையாகவும் இருப்பதால் இதையே பயன்படுத்தலாம் |
Drone | சுரும்பு | சுரும்பு என்ற தமிழ் சொல்லுக்கு வண்டு என்று பொருள். இந்த சொல் தற்போது அதிக அளவில் பயன்பாட்டில் இல்லையாதலால் இதையும் பயன்படுத்தலாம் |
Drone | பறகலம் | பறக்கும் திறனுள்ள கலன் ஆதலால், பறகலன் எனலாம். விண்கலம் என்ற சொல்லால் உந்தப்பட்டு பறகலம் என்று தமிழில் கூறலாம். |