பள்ளிப் பருவத்தில் ஒரு ஜோடி ஷூ வாங்க இயலாமல் கஷ்டப்பட்ட இளைஞன், 19 வயதில் 2000 கோடிக்கு அதிபதி! அடுத்த ரொனால்டோவும், மெஸ்ஸியும் இவர் தான்!!

Date:

ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பிரான்ஸ் 4-2 என்ற கணக்கில் குரேஷியாவை வீழ்த்தி மிகப்பெரிய வெற்றி பெற்றது. கால்பந்து உலகக் கோப்பையை 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பெற்றது பிரான்ஸ். இறுதிப்போட்டியில் குரேஷியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 4-2 என்ற கோல் கணக்கில் வென்று 1998க்குப் பிறகு, 2018 ம் ஆண்டில் இரண்டாவது முறையாக பிரான்ஸ் கோப்பையை வென்றுள்ளது.

இந்த உலககோப்பைத் தொடரில் பிரான்ஸ் ரசிகர்கள் மட்டுமன்றி ஒட்டுமொத்த கால்பந்து ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து இருக்கிறார் 19 வயதேயான இளம் வீரர் கிலியன் எம்பாப்பே (Kylian Mbappé). மெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மர் வரிசையில் கால்பந்து உலகின் நட்சத்திரமாக ஜொலிக்கிறார் எம்பாப்பே.

images 3 1


2018 ம் ஆண்டின் இறுதிப் போட்டியில் கடைசி நேரத்தில் ஒரு கோல் அடித்து பிரான்சின் வெற்றியை உறுதி செய்தார். இவர் அடித்த அந்த கடைசி நான்காவது கோல், அத்தனை பிரமாதமான கோல் இல்லை என்றாலும், அவரின் அந்த கோலுக்கு பின், அந்த வெற்றி கொண்டாட்டத்திற்கு பின் பெரிய கதை இருக்கிறது.

தன்னம்பிக்கையுடன் சோதனைகளை எதிர்த்து வென்ற நாயகனின் கதை இது

பிரான்ஸ் நாட்டின் மிகவும் பின்தங்கிய கருப்பின கிராமத்தில் பிறந்த எம்பாப்பே பலமுறை நிறவெறியின் காரணமாக சக வெள்ளை வீரர்களால் ஒதுக்கப்பட்டிருக்கிறாராம். வறுமையின் பிடியிலும் பள்ளி அணியில் விளையாடியது, தேர்வில் ஷு இல்லாமல், ஷு வாங்க வழியில்லாமல் விளையாடியது, பின் கல்லூரி அணியில் சில நாட்கள் விளையாடியது, சிறு சிறு குட்டி கிளப்புகளில் விளையாடியது என்று இவரது வாழ்க்கையும், சாதனையாளர் பீலேவின் (Pelé) வாழ்க்கையும் கிட்டத்தட்ட ஒன்றுதான்.

images 2 1

ஆக்ரோஷமாக விளையாடும் பாணி, விட்டுக்கொடுக்காத மனோதிடம், உழைப்பு என்று சோர்ந்து விடாமல் போராடி கிளப்புக்களில் கொஞ்சம் கொஞ்சமாக புகழை அடைந்த பாப்பே, இன்று பெரும் நட்சத்திரமாக மாறியிருக்கிறார். களத்தில் பந்தை யாருக்கும் விட்டு கொடுக்க கூடாது, உன்னுடைய காலில் இருந்து பந்து வெளியேறினால் அது சக அணி வீரருக்கு செல்ல வேண்டும், இல்லை கோல் கம்பத்திற்குள் செல்ல வேண்டும் என்று நினைப்பாராம் எம்பாப்பே. ஆட்டத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை சிறிதும் சோர்வுறாமல் ஆக்ரோஷமாக ஆடும் திறன் பெற்றவர் எம்பாப்பே. இப்போது இவர் தான் உலகிலேயே இரண்டாவது காஸ்ட்லியான வீரர்.

களத்தில் பந்தை யாருக்கும் விட்டு கொடுக்க கூடாது. உன்னுடைய காலில் இருந்து பந்து வெளியேறினால் அது சக அணி வீரருக்கு செல்ல வேண்டும், இல்லை கோல் கம்பத்திற்குள் செல்ல வேண்டும்

– எம்பாப்பே

இந்த உலகக்கோப்பையில் பழைய நாயகர்களையெல்லாம் ஓரம் கட்டி புது நாயகனாக உலக ரசிகர்கள் உருவெடுத்திருக்கிறார் எம்பாப்பே.இந்தமுறை உலகக்கோப்பையில் இருந்து அர்ஜென்டினா வெளியேற முக்கிய காரணமாக இருந்த எம்பாப்பே ரொனால்டோவின் தீவிர ரசிகர்.இவர் தன் அறையில் ரொனால்டோவின் படங்களை மாட்டி வைத்திருப்பாராம்.

images 1 1

கிட்டத்தட்ட பீலே போலவே வாழ்க்கை வரலாற்றை கொண்டுள்ள இவர், பீலே போலவே ஒரு சாதனை செய்துள்ளார். 60 வருடத்திற்கு முன்பு 1958ஆம் ஆண்டு சுவீடனுக்கு எதிரான உலகக் கோப்பை இறுதி போட்டியில் 17 வயதான பீலே கோல் அடித்தார். அப்போது அவர் தான் இளம் வீரர். தற்போது அந்த சாதனையை 19 வயதே நிரம்பிய எம்பாப்பே செய்துள்ளார். அதேபோல் இந்த 2018 உலகக்கோப்பை கால்பந்து தொடரில் சிறந்த வீரர் என்று விருதையும் பெற்று இருக்கிறார்.

இது தான் தொடக்கம் , இன்னும் பல மைல்கள் கடக்கவிருக்கும் கிலியன் எம்பாப்பே சந்தேகத்திற்கு இடமின்றி வருங்கால கால்பந்து உலகின் மிகப்பெரும் ஆளுமையாக திகழ்வார்.

Also Read: உசைன் போல்ட் வாழ்க்கை வரலாறு: ஓட்டப்பந்தயத்தில் உலக சாதனை படைத்த வெற்றி வீரனின் கதை!

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!