இந்த முறையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வெல்லுமா?

Date:

இந்த வருடத்திற்கான ஐபில் போட்டிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. ரசிகர்களுக்கு ஹார்ட் அட்டாக் வரும்படி இறுதி ஓவரின் கடைசிப்பந்தில் பவுண்டரி அடித்து வெற்றிபெறும் சென்னை அணி முதல் ஆளாக ப்ளே ஆப் சுற்றுக்குள் சென்றதை தொடர்ந்து டெல்லி, மும்பை, ஹைதராபாத் அணிகள் ப்ளே ஆப் வாய்ப்புகளை தக்கவைத்துக்கொண்டன. முதல் குவாலிபயர் போட்டியில் சென்னையும் மும்பையும் மோத இருக்கின்றன.

chennai_resources1


இம்முறையும் சென்னை அணி கோப்பையை கைப்பற்றுமா? என ரசிகர்கள் ஆர்வத்தில் இருக்கிறார்கள். ஆனால் சென்னை அணியின் இந்த பலவீனங்களை மேம்படுத்தினால் தான் கோப்பையை நெருங்க முடியும்.

ப்ளே ஆப் சுற்றில் மும்பையை எதிர்கொள்கிறது, சென்னை. இந்த தொடரில் இரண்டு முறையும் மும்பையிடம் சென்னை மண்ணைக் கவ்வியிருக்கிறது. அதே சமயம் ஹைதராபாத் மற்றும் டெல்லி அணிகளுக்கு எதிரான இரண்டு போட்டிகளிலும் சென்னை வெற்றிபெற்றிருக்கிறது. ஆகவே மும்பையை எதிர்கொள்ளும் அளவிற்கு புதிய யுக்திகளை கையாண்டே ஆகவேண்டும்.

முதலாவதாக அணியின் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப். ராயுடு – வாட்சன் இணை மட்டமான துவக்கத்தை கொடுத்ததால் டுபிளேசிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுவருகிறது. தனக்கு கிடைத்த வாய்ப்பை அருமையாக பயன்படுத்தி ரன்களை குவிக்கிறார் டுபிளேசி. ஆனால் வாட்சன் வழக்கம்போல் சொதப்புகிறார். ஹைதராபாத் அணிக்கு எதிராக 96 அடித்ததோடு சரி. பட்டா பாக்கியம் இல்லனா பெவிலியன் என்று ஆடும் வாட்சன் இந்த தொடரில் மட்டும் 11 முறை பவர்ப்ளே முடியும் முன்னே தனது ஆட்டத்தை முடித்துக்கொண்டிருக்கிறார்.

மும்பை மாதிரி நல்ல பேட்டிங் செய்யும் வீரர்கள் இருக்கும் அணிக்கு எதிராக வெற்றிபெற நல்ல ஓப்பனிங் தேவை. அதற்கு வாட்சன் எந்த அளவிற்கு ஒத்துழைப்பார் எனத் தெரியவில்லை. அடுத்ததாக ராயுடு. அணிக்கு 11 வீரர்கள் வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக ராயுடுவை வைத்திருக்கிறார்கள். ஓப்பனிங் தான் வரல. மிடில் ஆர்டராவது வருதா என்றால் அதுவும் இல்லை. கையும் வரல காலும் வரல இந்த லட்சணத்தில் அன்னாருக்கு உலககோப்பையில் எடுக்கவில்லையென்ற கோபம் மட்டும் வருகிறது.

ms-dhoni-ambati-rayudu-and-shane-watson

சென்னை அணியைப் பொறுத்தவரை ராயுடு தேவையில்லாத ஆணி. இவருக்குப் பதிலாக முரளி விஜய்க்கு வாய்ப்பு கொடுத்துப்பார்க்கலாம். ஒரு போட்டியில் மட்டுமே விஜய்க்கு வாய்ப்பு கொடுக்கபபட்டிருக்கிறது. அதிலும் விஜய் நன்றாகவே ஆடியிருந்தார். எந்த அளவிற்கு சென்னை அணி பேட்டிங் ஆர்டரை வலுப்படுத்துகிறதோ அந்தளவிற்கு நல்லது. கொல்கத்தாவுடனான போட்டியில் 232 ரன்களை சேஸ் செய்ய மும்பை அணி காட்டிய தீவிரத்தையும் பாண்டியாவின் பலத்தையும் வீரர்கள் தேர்வுக்கு முன்பு எண்ணிப்பார்ப்பது நல்லது. ஆனால் ப்ளே ஆப் சுற்றுக்குள் நுழைந்த பின்னர் அணியில் மாற்றம் கொண்டுவர தோனி நிச்சயம் ஒப்புக்கொள்ளமாட்டார்.

நானும் ராயுடுவிற்கு சளைத்தவனல்ல என்று மார்தட்டுகிறார் ஜாதவ். தற்போது அவருக்கு காயம் ஏற்பட்டிருப்பதால் அடுத்த போட்டியில் விளையாடுவாரா என்பது சந்தேகம் தான். ஒருவேளை இல்லை என்றால் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனை இறக்கவேண்டும். அதனால் அடுத்த போட்டியில் முரளி விஜய் அணிக்குள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகமிருக்கின்றன.


பஞ்சாப் அணிக்கு எதிரான கடைசி போட்டிதவிர இந்த தொடரில் சென்னை அணியின் பந்துவீச்சாளர்கள் நன்றாகவே செயல்பட்டிருக்கின்றனர். ஒரே ஒரு ஆளைத்தவிர. ஷார்துல் தாக்கூர். இங்கிடியும் இல்லை, கூகலினும் சரியில்லை வெறும் இந்திய பவுலர்களும் கைகொடுக்கவில்லை என்ற காரணங்களினால் தாகூரை அணியில் வைத்திருந்தது சென்னை அணி. ஆனால் வள்ளல் பரம்பரையில் உதித்த தாக்கூரை சமீப போட்டிகளில் டக்கவுட்டில் உட்கார வைத்திருக்கிறார் தோனி. அவர் உள்ளே வராமல் இருப்பதே சென்னைக்கு நல்லது.

dhoni-captaincy-csk-ipl-2019-imran-tahir-wicket

மும்பையின் அதிரடி வீரர்களை அவுட் ஆக்குவதற்கு சென்னை அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் உதவுவார்கள் ஏனெனில் போட்டி சென்னையில் நடைபெற இருக்கிறது. அதே சமயம் மும்பை அணியிலும் ஸ்பின்னர்கள் இருக்கிறார்கள். அதே நேரத்தில் பும்ரா மலிங்கா ஆகியோரின் பங்களிப்பும் பிரம்மாதமாக இருக்கிறது.

சேப்பாக்கத்தில் ரன் அடிப்பது சிரமம். சேசிங்கிலும் பொறுமையாக ரன்கள் எடுக்க வேண்டும். அதிரடி காட்டினால் முடிந்தது கதை. சென்ற போட்டியில் 156 ரன்களை சேஸிங் செய்ய முடியாமல் சென்னை தோற்றதற்கு காரணம் அடிச்சா சிக்ஸர் தான் அடிப்பேன் என சென்னை வீரர்கள் பேட்டிங் செய்ததுதான். நாளைய போட்டியில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறப்போவது யார்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!