நடுவரின் தவறான முடிவு – முதல் வெற்றியை ருசித்த மும்பை

Date:

ஐபிஎல் டி20 லீக்கின் 7 -வது போட்டி நேற்று (28.03.2019) பெங்களூரில் உள்ள சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரு அணிகள் மோதின. டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

rcb mumbaiமும்பை பேட்டிங்

இதனை அடுத்து பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணியின் துவக்க ஆட்டக்காரர்களான மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா (48) – டீகாக் கூட்டணி சிறப்பாக விளையாடியது. பவர் ப்ளே முடிவில் மும்பை அணி 52 ரன்கள் சேர்த்தது. விக்கெட் ஒருபுறம் விழுந்தாலும் அடுத்தடுத்து களத்திற்கு வந்த சூரிய குமார் யாதவ், யுவராஜ் சிங் (23) ஆகியோர் தங்களது பங்கிற்கு அடித்து விளையாடி ஸ்கோரை உயர்த்தினார்கள். சஹால் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸ் அடித்து யுவராஜ் சிங் ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். கடைசி நேரத்தில் வான வேடிக்கைகள் நடத்திய ஹர்திக் பாண்டியா 14 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார். 20 ஓவர் முடிவில் மும்பை அணி 187 ரன்களை எடுத்தது.

சேஸிங்

188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் சேஸிங் செய்ய வந்த பெங்களூரு அணியின் பார்த்திவ் படேல் மற்றும் மொயின் அலி (13) இணை ஆரம்பத்திலேயே விக்கெட்டைப் பறிகொடுத்தது. அடுத்து வந்த கோலி அடுத்தடுத்த பவுண்டரி அடித்து மும்பைக்கு நெருக்கடி கொடுத்தார். படேலும் தன் பங்கிற்கு சிக்ஸரும் பவுண்டரியுமாக வெளுத்தார்.

divilliersமார்கண்டே வீசிய 7-வது ஓவரில் ஒரு பவுண்டரி அடித்த பர்தீவ் கடைசி பந்தில் போல்டாகி 31 ரன்களில்  ஆட்டமிழந்தார். அடுத்து பேட்டிங் செய்யவந்த டிவில்லியர்ஸ் முதல் பந்திலேயே யுவராஜ் சிங்கிடம் தனது விக்கெட்டைப் பறிகொடுக்க இருந்தார். ஆனால் யுவராஜின் மோசமான பீல்டிங்கால் தப்பித்தார் டிவில்லியர்ஸ்.

சிறப்பாக விளையாடிய கோலி 46 ரன்கள் சேர்த்த நிலையில் மிட்விக்கெட் திசையில் ஹர்திக்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஹெட்மயர் வந்த உடனே பெவிலியன் திரும்ப கிரான்ட் ஹோம் பேட்டிங்கிற்கு வந்தார். இக்கட்டான நிலையில் மூன்று பந்துகளை அடிக்க முடியாமல் ரசிகர்களின் பி.பி யை வெகுவாக ஏற்றிவிட்டார். ஆனால் மறுபுறம் டிவில்லியர்ஸ் தனியாளாக நின்று மும்பை அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தார்.

கடைசி ஓவர்

17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கடைசி ஓவரை வீச வந்தார் மலிங்கா. முதல் பந்தை எதிர்கொண்ட துபே சிக்ஸர் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். 2-வது பந்து முதல் 5-வது பந்துவரை சிங்கிள் ரன்கள் எடுக்க 10 ரன்கள் கிடைத்தது. மல்லிங்கா தனது அனுபவமான பந்துவீ்ச்சில் ஷாட்களை அடிக்கவிடாமல் ஸ்விங்குகளையும், யார்கர்களைும் வீசி திணறடித்தார்.

malingaகடைசி ஒரு பந்தில் சிக்ஸர் அடித்தால் டிரா என்ற நிலையில் சிங்கிள் மட்டுமே கிடைத்தது. ஆனால் மலிங்காவின் அந்த பந்து நோ பால் என்று தெரிந்த பின்னும் நடுவர் மூன்றாவது நடுவரிடம் முறையிடவில்லை. இதனால் பெங்களூரு அணி பரிதாபமாக தோல்வியடைந்தது.

இதனால் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கோலி, இது கிளப் மேட்ச் இல்லை என தெரிவித்திருக்கிறார். எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என ரோஹித் ஷர்மா ஒதுங்கிக்கொண்டார். டிவில்லியர்ஸ் 70 ரன்கள் எடுத்தும் அந்த அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!