ருத்ரதாண்டவம் ஆடிய பொல்லார்ட் – மும்பை த்ரில் வெற்றி!!

Date:

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 24-வது லீக் போட்டி மும்பை வாங்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் பலப்ரீட்சை நடத்தின. டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. பயிற்சியின்போது ஏற்பட்ட காயத்தினால் ரோஹித் ஷர்மாவிற்கு ஓய்வு அளிக்கப்பட, கிரன் பொல்லார்ட் மும்பை அணியின் கேப்டனாக களமிறங்கினார்.

kl-rahul-chris-gayle-batting-இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கே.எல்.ராகுல், கிறிஸ் கெய்ல் ஆகியோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கிறிஸ் கெய்ல் 36 பந்துகளில் 7 சிக்சர், 3 பவுண்டர்களில் 63 ரன்களை குவித்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார். இதற்கு பின்னர் களமிறங்கிய டேவிட் மில்லர், கருண் நாயர், சாம் சுரன் சொற்ப ரன்களுக்கு வெளியேறினர். ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மற்றொரு முனையில் இருந்த ராகுல் அதிரடியாக விளையாடினார். அவர், 64 பந்துகளில் 100 ரன்களை விளாசி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இருபது ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 197 ரன்களை குவித்தது.

இமாலய இலக்கு

198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியின் பேட்ஸ்மேன்கள் வரிசையாக சொதப்பினர். டீ காக், லாத், சூரியகுமார் யாதவ் ஆகியோர் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளைப் பறிகொடுக்க களத்திற்கு வந்தார் பொல்லார்ட். அடின்னா அப்படி ஒரு அடி. பஞ்சாபின் பவுலர்களை நோகடித்தார் என்றே சொல்லவேண்டும். ஆனால் அந்தப்புரம் விக்கெட்டுகள் சரிந்துகொண்டே இருந்தன. போன மேட்சில் மிரட்டலான பந்துவீச்சை வெளிப்படுத்திய அல்ஜோரி ஜோசப் போல்லாடிற்கு இணையாக வந்தார். எந்தக்கரனத்தைக் கொண்டும் பொல்லார்ட் தனது அதிரடியை குறைக்கவில்லை.

ipl-t20-2019-mi-vs-kxipகடைசி ஓவர்

இறுதி ஓவரில் 15 ரன்கள் தேவை என்ற நிலையில், கடைசி ஒவரின் முதல் பந்தில் பொல்லார்ட் சிக்சர் விளாசினார். அதற்கு அடுத்த பந்தில் பவுண்டரி விளாசிய நிலையில் 3வது பந்தில் பொல்லார்ட் ஆட்டமிழந்தார். இதனால் கடைசி நேரத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

கடைசி பந்தில் 2 ரன்கள் தேவை என்ற நிலையில், அல்ஜாரி ஜோசப் இரண்டு ரன்களை விளாசி மும்பை அணியை வெற்றி பெற செய்தார். மும்பை அணி தரப்பில் அதிகட்சமாக பொல்லார்ட் 31 பந்துகளில் 10 சிக்சர், 3 பவுண்டரிகளுடன் 83 ரன்களை விளாசினார். இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி 8 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. பொல்லார்ட் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!