ப்ளே ஆப் சுற்றுக்குள் மும்பை மற்றும் ஹைதராபாத் அணிகளில் முதலில் நுழையப்போகும் அணி என்பதை தீர்மானிக்கும் போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

சேஸிங் செய்ய வந்தது ஹைதராபாத் அணி. வார்னர் – பேர்ஸ்டோ இல்லாத நிலையில், அந்த அணிக்கு விரிதிமான் சாஹா – மார்டின் குப்டில் துவக்கம் அளித்தனர். சாஹா 25, குப்டில் 15 ரன்கள் சேர்த்து வெளியேறினர். அடுத்துவந்த மனிஷ் பாண்டே கடைசி வரை தனியாக போராடி வந்தார். வில்லியம்சன் 3, விஜய் ஷங்கர் 12, அபிஷேக் சர்மா, 2 ரன்களில் வெளியேறி ஏமாற்றினர். கடைசியில் நபி, மனிஷுடன் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டார்.
37 பந்துகளில் தனது அரைசதத்தை பதிவு செய்தார் மணிஷ் பாண்டே. கடைசி இரண்டு ஓவர்களில் 29 ரன்கள் தேவை என்ற நிலைக்கு தள்ளப்பட்டது ஹைதராபாத். கடைசி பந்தில் 7 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் மணிஷ் பாண்டே சிக்ஸர் அடித்ததால் ஸ்கோர் 162 என சமநிலையை எட்டியது.
மணிஷ் பாண்டே 2 சிக்ஸர், 8 பவுண்டரியுடன் 47 பந்துகளில் 71 ரன்களை விளாசி அவுட்டாகாமல் இருந்தார். மும்பை தரப்பில் பும்ரா, க்ருணால் பாண்டியா மற்றும் ஹார்திக் பாண்டியா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
சூப்பர் ஓவர்
இரு அணிகளின் ஸ்கோரும் சமநிலையை எட்டியதால் சூப்பர் ஓவர் அறிமுகம் செய்யப்பட்டது. மும்பை அணியின் சார்பில் சூப்பர் ஓவரை பும்ரா வீசினார். முதல் பந்தில் மனிஷ் ரன் அவுட் ஆனார். அடுத்து சிக்ஸ் அடித்த நபி கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். சூப்பர் ஓவரில் 8 ரன்கள் மட்டுமே எடுத்தது ஹைதராபாத்.
