28.5 C
Chennai
Monday, March 4, 2024

பெங்களூருவை அதிரடியால் வீழ்த்திய மும்பை!!

Date:

இந்த ஐ.பி.எல் தொடரின் 31-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. மும்பை அணியில் காயம் அடைந்த அல்ஜாரி ஜோசப்க்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா சேர்க்கப்பட்டார். பெங்களூரு அணியில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.

mumbai-indians-royal-challangers-bangalore_பெங்களூரு பேட்டிங்

முதல் ஓவரில் பெரேன்டோர்ப் பந்து வீச்சில் பவுண்டரி அடித்து ரன் கணக்கை தொடங்கிய விராட்கோலி (8) 3-வது ஓவரில் முதல் பந்தில் டி காக்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். பின்னர் வந்த டிவில்லியர்ஸ், பார்த்தீவ் பட்டேலுடன் ஜோடி சேர்ந்தார். படேல் அதிரடி காட்ட, ஆரம்பத்தில் டிவிலியர்ஸ் தடுமாறினார். எல்லாமே “காற்று வெளியிடையாகவே” இருந்தது. பவர்பிளேயில் பெங்களூரு அணி ஒரு விக்கெட்டுக்கு 45 ரன்கள் எடுத்து இருந்தது.

அடித்து ஆடிக்கொண்டிருந்த படேல் பாண்டியாவின் பந்துவீச்சில் அவுட்டாகி வெளியேற மொயீன் அலி, டிவிலியர்சுடன் இணைந்தார். இந்தத் தொடரில் பேட்டிங்கில் சிறப்பாக ஆடாத மொயின் அலி ஆரம்பம் முதலே மும்பையை அலறவிட்டார். அலியின் வேகம் டிவிலியர்சுக்கும் தோற்றிக்கொள்ள ஆட்டம் சூடுபிடித்தது. டிவில்லியர்ஸ் 41 பந்துகளிலும், மொயீன் அலி 31 பந்துகளிலும் அரைசதத்தை பூர்த்தி செய்தார்கள்.

17 வது ஓவரை வீசவந்த மலிங்கா முதல் பந்தில் மொயின் அலியின் விக்கெட்டை எடுக்க, அடுத்த பந்தில் புதிதாக வந்த மார்கஸ் ஸ்டோனிஸின் விக்கெட்டை தட்டித்தூக்கினார். அடுத்துவந்த பெங்களூரு வீரர்கள் கிரீசில் வந்து புகைப்படம் எடுத்ததுடன் வெளியேற ஒருவழியாக அந்த அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது. வான்கடே மைதானத்தில் இந்த ஸ்கோர் பத்தாது. இருப்பினும் கோலி தனது பவுலர்களை நம்பினார்.

மும்பை அதிரடி

களத்திற்கு வந்த டீ காக் – ரோஹித் ஷர்மா இணை பெங்களூரு பவுலர்களை துவம்சம் செய்தது. “எந்தப்பக்கம் போட்டாலும் அடிக்கிறாண்டா” என்பதுபோல் வெளுத்துவாங்கினார் டீ காக். பவர்ப்ளே முடிவில் மும்பை அணி விக்கெட் இழப்பின்றி அந்த அணி 67 ரன்களை எடுத்தது. சிராஜ், சைனி, பவன் நெகி என பந்துபோட யார்வந்தாலும் அடி உறுதி என்ற நிலையில் மொயின் அலியை பந்துவீச அழைத்தார் கோலி. அவருடைய இந்தத் திட்டம் பலன் அளித்தது. ரோஹித் (28) மற்றும் குவிண்டன் டீ காக் (40) இருவரையும் அவுட் ஆக்கி ஆட்டத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தார்.

IPL-RCBvMIபேட்டிங்கிற்கு புதிதாக வந்த இஷான் கிஷன் – சூரியகுமார் யாதவ் ஆகியோரின் விக்கெட் எடுக்க பவுலர்களால் முடியவில்லை. மேலும் ரன்னையும் வள்ளலாக அளித்தார்கள். அதிர்ஷவசமாக சஹாலின் ஓவரில் கிஷன் (21) அவுட் ஆக பேட்டோடு வந்தார் அதிரடி மன்னன் பாண்டியா. சஹாலின் அடுத்த ஓவரில் சூரியகுமார் யாதவும் (29) வெளியேறினார்.

4 ஒவர் 41 ரன்கள் தேவை என்ற நிலையில் பாண்டியா பிரதர்ஸ் வித்தை காட்டத்தொடங்கினர். ஓவருக்கு இரண்டு பவுண்டரி என கணக்கு வைத்துக்கொண்டு ஆடினார்கள். 11 ரன்னில் அண்ணன் க்ருனால் வெளியேறினாலும் ஹர்திக் விடுவதாய் இல்லை.

rcb-mumbai
Credit: NDTV Sports

பாவப்பட்ட பவன் நெகி

கடைசி இரண்டு ஓவரில் 22 ரன்கள் எடுக்க வேண்டும் என்னும் நிலை. கோலி பந்தை தூக்கி நெகிக்கு கொடுத்தார். விளைவு 6,4,4,6. ஒரு ஓவர் மீதியிருக்கும் நிலையில் மும்பை வெற்றிபெற்றது. பாண்டியா 37 ரன்கள் எடுத்தார். அபாரமாக பந்துவீசி நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றிய மலிங்கா ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

சென்ற போட்டியில் வெற்றி பெற்ற பெங்களுரு அணி இம்முறை வழக்கம்போல் தோல்வியைத் தழுவியிருக்கிறது.

Share post:

Popular

More like this
Related

கங்காரு (Kangaroo) பற்றி பலரும் அறிந்திடாத 10 சுவாரசியமான தகவல்கள்!

கங்காரு கங்காருக்கள் சக்திவாய்ந்த பின்னங்கால்கள், நீண்ட வலுவான வால் மற்றும் சிறிய...

புதன் கோள் (Mercury) பற்றி பலரும் அறிந்திடாத 10 சுவாரசிய தகவல்கள்!

புதன் கோள் நமது சூரிய குடும்பத்தில் உள்ள மிகச்சிறிய கோள். இது...

ஒட்டகம் (Camel) பற்றிய சுவாரஸ்யமான 8 தகவல்கள்!

ஒட்டகம் என்றவுடன் நம் நினைவிற்கு வருவது ஒட்டகங்கள் பாலைவனங்களில் வாழும் பெரிய...

வான்கோழி (Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...
error: Content is DMCA copyright protected!