IPL 2019 – லீக் போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு

Date:

இந்தியாவில் ஐ.பி.எல் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தைக்கொண்ட இந்தப் போட்டி கடந்த 11 வருடங்களாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டிற்கான ஐ.பி.எல்  தொடருக்கான அட்டவணை நேற்று வெளியிடப்பட்டுள்ளது. மார்ச் 23 ஆம் தேதி துவங்கும் முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கோலி தலைமையிலான பெங்களுரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் களம் காண்கின்றன. சென்னையின் சொந்த மைதானமான சேப்பாக்கம் மைதானத்தில் இந்தப்போட்டி நடக்க இருப்பதால் ரசிகர்கள் உற்சாக ஊற்றில் நனைந்திருக்கிரார்கள்.

ipl-2019-rcb-vs-csk
Credit: Hindustan Times

வெளிவந்திருக்கும் அட்டவணையின்படி ஏப்ரல் 5 வரை நடைபெறும் ஆட்டங்கள், இடம், நேரம் ஆகியவை அறிவிக்கப்பட்டிருக்கின்றன. அதன்படி டெல்லி, பெங்களுரு அணிகள் தலா ஐந்து போட்டிகளிலும், மற்ற அணிகள் நான்கு போட்டிகளிலும் மோத இருக்கின்றன.

ஏலம்

12-வது ஐ.பி.எல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் கடந்த 20-ம் தேதி (20.12.18) ஜெய்ப்பூரில் நடந்தது. அதிகபட்சமாக, தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி ரூ.8.40 கோடிக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார். அதேவிலைக்கு, ஜெய்தேவ் உனத்கட்டை ராஜஸ்தான் அணி ஏலத்தில் எடுத்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக, மொஹித் சர்மா ரூ.5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். எனினும் போட்டிகள் நடைபெறும் இடம் குறித்து எந்தவித தகவல்களும் அப்போது தெரிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் நேற்று இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல் போட்டிகளின் அட்டவணை வெளியிடப்பட்டது. முதல் 17 போட்டிகளுக்கு மட்டுமே தற்போது திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்தியாவில் நாடளுமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால் இந்த அட்டவணையில் மாற்றங்களும் வரக்கூடும் என அறிவித்திருக்கிறது பி.சி.சி.ஐ.

8 அணிகள்

இந்த ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ், டெல்லி கேபிடல்ஸ். மும்பை இந்தியன்ஸ், கிங்ஸ்லெவன்பஞ்சாப், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. டெல்லி டேர்டெவில்ஸ் அணி இந்த ஆண்டு தனது பெயரை டெல்லி கேபிடல்ஸ் என்று மாற்றியுள்ளது. இந்த புதுப்பெயர் எப்படி உதவும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

Schedule-for-IPL-tournament-The-tournament-starts-on-March

போர்

ஒவ்வொரு அணியைச் சேர்ந்த ரசிகர்களும் ட்விட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் மற்ற அணியினரை கிண்டலடிப்பதெல்லாம் சகஜமாகிவிட்டது. முதல் போட்டியில் சென்னையும், பெங்களுருவும் மோதும் என அறிவிக்கப்பட்ட உடனையே இரு அணி ரசிகர்களும் சமூக வலைதளங்களில் மீம் போட ஆரம்பித்துவிட்டார்கள். சென்னை அணியில் இருக்கும் இம்ரான் தாகிர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்த வருடம் “இந்த காளியோட ஆட்டத்த பாக்கப் போறீங்க” என பதிவிட்டிருக்கிறார். வாழும் வள்ளுவரான ஹர்பஜனும் தமிழில் பதிவு செய்வதால் சென்னை ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!