இங்கிலாந்தில் இந்த வருடம் நடக்க இருக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. எம்.எஸ்.கே பிரசாத் (MSK Prasad) தலைமையில் மும்பையில் நடைபெற்ற அணித்தேர்வில் பல சுவாரஸ்ய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட் மற்றும் அம்பத்தி ராயுடுவிற்கு வாய்ப்பளிக்கப்பபடவில்லை.
உலகக்கோப்பைக்கான இந்திய அணி
Virat Kohli (C), Rohit Sharma (VC), Shikhar Dhawan, Vijay Shankar, KL Rahul, MS Dhoni, Kedar Jadhav, Dinesh Karthik, Yuzvendra Chahal, Kuldeep Yadav, Bhuvneshwar Kumar, Jasprit Bumrah, Hardik Pandya, Ravindra Jadeja, Mohammed Shami
தினேஷ் கார்த்திக்கு வாய்ப்பு
அணியில் நான்காவது இடத்தில் ஆடக்கூடிய ரஹானே கடந்த வருடத்தில் இருந்து அணியிலேயே இல்லை. மேலும் ராயுடு கடைசியாக ஆடிய ஆஸ்திரேலியா, நியூசிலாந்து தொடரில் சொதப்பவே அவருக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் கீப்பிங்கிற்கு தோனியைத் தவிர மற்றும் ஒரு வீரர் வேண்டும். ராகுல் இருந்தாலும் தினேஷ் கார்த்திக் சமீபகாலமாக நன்றாக விளையாடி வருவதால் அவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டிருப்பதாக பிரசாத் தெரிவித்தார்.
விஜய் சங்கர்
தமிழகத்தைச் சேர்ந்த விஜய் ஷங்கரும் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருக்கிறார். பந்துவீச்சு மற்றும் பேட்டிங் ஆகிய இரண்டிலும் விஜய் சிறப்பாக ஆடியதால் அவருக்கு இந்த வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.