உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா வரும் 30 ஆம் தேதி இங்கிலாந்தில் துவங்குகிறது. இந்த தொடரில் 10 அணிகள் களம் காண்கின்றன. சாம்பியன் பட்டத்தைப் பெறும் அணிக்கான பரிசுத்தொகை சமீபத்தில் ஐசிசி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. உலகக் கோப்பை வரலாற்றிலேயே இந்த அளவிற்கு பரிசுத்தொகை சார்பில் வழங்கப்பட்டது இல்லை. ஐசிசி உலகக்கோப்பை போட்டியின் ஒட்டுமொத்த பரிசுத் தொகையாக ஒரு கோடி அமெரிக்க டாலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. 70 கோடியே 12 லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகையானது இறுதிப்போட்டியில் மோதும் இரு அணிகளுக்கும் பங்கிட்டு அளிக்கப்படும்.

சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு 28 கோடியே 8 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகை (40 லட்சம் அமெரிக்க டாலர்கள்) வழங்கப்படும். இரண்டாவதாக வரும் அணி 14 கோடியே இரண்டு லட்சத்து 56 ஆயிரத்து 400 ரூபாய் (20 லட்சம் அமெரிக்க டாலர்கள்) வழங்கப்படும். அரையிறுதியில் தோல்வி பெறும் அணிகளுக்கு தலா 5 கோடியே 61 லட்சத்து 2 ஆயிரத்து 560 ரூபாய் (8 லட்சம் அமெரிக்க டாலர்கள்) கொடுக்கப்படும். லீக் போட்டிகளில் வெற்றி பெறும் ஒவ்வொரு போட்டிக்கும் அணிகள் ஒன்றுக்கு 28,05,128 ரூபாய் (40 ஆயிரம் டாலர்கள்) பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. லீக் சுற்றிக் கடந்த அணிகள் லட்சத்து 12 ஆயிரத்து 820 ரூபாய் பரிசு பெறும்.
வரும் 30 ஆம் தேதி முதல் ஜூலை 14 ஆம் தேதி வரை மொத்தம் 46 ஆட்டங்கள் நடக்கின்றன. உலக கோப்பை போட்டியின் மொத்த அட்டவணையும் சென்ற மாதமே அறிவிக்கப்பட்டது.
ஐ.சி.சி உலககோப்பை போட்டிகளின் முழு அட்டவணை

இதற்காக இங்கிலாந்திலுள்ள 11 மைதானங்கள் தயார் நிலையில் உள்ளன. ரவுண்ட் ராபின் என்னும் முறையின்படி ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். அதன்படி பட்டியலில் முதல் 4 இடத்திற்கு முன்னேறும் அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். இதனை காண உலகம் முழுவதிலுமிருந்து கிரிக்கெட் ரசிகர்கள் இங்கிலாந்தில் மையம் கொண்டுள்ளனர். உலக கோப்பையை கையில் ஏந்தப் போகும் கேப்டன் யார் என்பதே லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இறுதிப்போட்டியில் தெரியவரும். அப்படியே அந்த 40 லட்சம் டாலர்கள் பரிசுத்தொகையை வெல்லப்போகும் அணி எது என்பதும்.