[IPL 2019]: கோலியின் ஆவேச பேட்டிங் – பெங்களுருவிற்கு இரண்டாவது வெற்றி!!

Date:

பெங்களுரு மற்றும் கொள்கைத்தா அணிகள் நேற்று ஈடன் கார்டன் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின. இந்த வருட தொடரில் தனது இரண்டாவது வெற்றியை பெங்களுரு அணி பதிவு செய்திருக்கிறது.

kohliடாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். கொல்கத்தா அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. பெங்களூரு அணியில் இரு மாற்றமாக காயமடைந்த டிவில்லியர்ஸ் இடம் பெறவில்லை. அவருக்கு பதிலாக ஹென்ரிச் கிளாசென் சேர்க்கப்பட்டார். இதே போல் ஸ்டெயின், 9 ஆண்டுக்கு பிறகு பெங்களூரு அணிக்கு திரும்பினார். உமேஷ் யாதவ் நீக்கப்பட்டார்.

தடுமாற்றம்

பெங்களுரு அணியின் துவக்க ஆட்டக்காரர்களான விராட் கோலியும், பார்த்திவ் படேலும் இன்னிங்க்ஸைத் துவங்கினர். 11 ரன்களில் படேல் தனது விக்கெட்டைப் பறிகொடுக்க, அடுத்துவந்த அக்‌ஷ்தீப் நாத் 13 ரன்னில் பெவிலியனுக்குள் தஞ்சம் புகுந்தார். 9 ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 60 ரன்களை மட்டுமே அந்த அணி எடுத்திருந்தது.

புயல் கூட்டணி

பரிதாபமாக இருந்த ஸ்கோரை மொயின் அலி – கோலி இணை கிடுகிடுவென உயர்த்தியது. அலி தனது அதிரடியைத் துவங்க சரியான ஓவரை எதிர்பார்த்துக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில் தான் குல்தீப் கைகளுக்கு பந்து போனது. கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என சகல திசைகளிலும் பந்தை பறக்கவிட்டார் அலி. அபாரமான பார்மில் ஆடிய மொயின் அலி 66 ரன்களில் அவுட் ஆனார். அடுத்த பேட்ஸ்மேனாக மார்க்கஸ் ஸ்டாய்னஸ் களமிறங்கினார்.

தூள் கிளப்பிய கோலி

மொயின் அலி அடிக்கும்போது சிங்கிள் எடுத்து அவருக்கு பேட்டிங் கொடுத்துக்கொண்டிருந்த கோலி, அலியின் அவுட்டிற்குப் பின்னால் அதிரடியைத் துவங்கினார். கவர் டிரைவ், ஸ்கொயர் டிரைவ், புல் என பேட்டிங்கிற்கு பாடம் நடத்திய கோலி 58 பந்துகளில் சதத்தைப் பூர்த்தி செய்தார். ஐ.பி.எல் வரலாற்றில் சதம் அடிக்கும் ஐந்தாவது வீரர் என்ற பெருமையை தட்டிச் சென்றார் கோலி. கடைசி பந்தில் கோலி அவுட் ஆக ஸ்கோர் 213 ஆக இருந்தது.

KKR-v-RCB-1024இமாலய இலக்கு

வெற்றிக்கு 214 ரன்கள் வேண்டும் என நினைப்பதே கஷ்டமான காரியம். ஆனால் ஐ.பி.எல் போட்டிகளில் எப்போது எது நடக்கும் என்பதை சொல்லிவிட முடியாது. ஏனெனில் இந்த இரு அணிகளும் கடைசியாக மோதிய போட்டியில் 205 ரன்களை கொல்கத்தால் சேஸ் செய்தது குறிப்பிடத்தக்கது. அதனைத்தான் கொல்கத்தா ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

கொல்கத்தா இன்னிங்க்ஸை கிறிஸ் லின்னும், சுனில் நரேனும் துவங்கினார்கள். ஸ்டெய்ன் வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே லின்னின் கேட்சை தவற விட்டார் ஸ்டாய்னஸ். ஆனால் அதே ஓவரின் கடைசி பந்தில் கோலியிடம் கேட்ச் கொடுத்தார் லின். அப்போது ஆரம்பித்த விக்கெட் சரிவு நிற்கவே இல்லை. சுனில் நரின் 18 ரன்னுடனும் மற்றும் சுப்மான் கில் 9 ரன்னுடனும், ராபின் உத்தப்பா 9 ரன்னுடனும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து வெளியேறினார்கள்.

காட்டடி ரஸ்ஸல்

5-வது விக்கெட்டுக்கு அதிரடி ஆட்டக்காரர் ரஸ்செல், நிதிஷ் ராணாவுடன் இணைந்தார். பெங்களூர் பந்து வீச்சாளர்கள் தடுமாறினர். எந்தப்பக்கம் போட்டாலும் சிக்ஸர் தான் என்று மிரட்டினார்கள் இருவரும். 25 பந்துகளை எதிர்கொண்ட ரஸ்ஸல் 66 ரன்களை குவித்தார். அதில் 9 சிக்சர் அடங்கும். கடைசி ஓவரில் 23 ரன்கள் எடுத்தால் வெற்றி என நிலையில் அந்த ஓவரின் முதல் பந்தில் ரன் எடுக்காத நிதிஷ் ராணா 2-வது பந்தில் ஒரு ரன் எடுத்தார். 3-வது பந்தை சிக்சருக்கு தூக்கிய ரஸ்செல் 4-வது பந்தில் ரன் எடுக்காததுடன், 5-வது பந்தில் ‘ரன்-அவுட்’ ஆனார். கடைசி பந்தை நிதிஷ் ராணா சிக்சருக்கு விரட்டினாலும் அது அணியின் வெற்றிக்கு உதவவில்லை. கடைசி ஓவரில் 13 ரன்கள் மட்டுமே வந்தது. 20 ஓவர்களில் கொல்கத்தா அணி 5 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் மட்டுமே எடுத்தது.

kkr-vs-kxip-ipl-2019-andre-russell-770x433
Credit: Moneycontrol

நிதிஷ் ராணா 46 பந்துகளில் 9 பவுண்டரி, 5 சிக்சருடன் 85 ரன்னும், கேப்டன் தினேஷ் கார்த்திக் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். சிறப்பாக விளையாடி சதம் கண்ட பெங்களூரு அணி கேப்டன் விராட்கோலி ஆட்டநாயகன் விருது பெற்றார்.

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!