கிரிக்கெட் விளையாட்டின் மிக முக்கிய நிகழ்வாகக் கொண்டாடப்படும் உலகக்கோப்பை நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது. கடந்த முறை உலககோப்பை போட்டியானது ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடத்தப்பட்டது. இந்தியா அரையிறுதியில் நியூசிலாந்து அணியிடம் தோற்று போட்டியை விட்டே வெளியேறியது. இறுதியில் ஆஸ்திரேலியா கோப்பையை தட்டிச் சென்றது. இந்நிலையில் இந்த ஆண்டு மே மாதம் இங்கிலாந்தில் உலகக்கோப்பை யுத்தம் தயாராக இருக்கிறது. பழைய கணக்கைத் தீர்க்க இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் காத்துக்கொண்டிருக்கின்றன. மே 30 அன்று துவங்கும் போட்டிகளுக்கான முழு அட்டவணையை ICC அறிவித்திருக்கிறது.

ரவுன்ட் ராபின்
பங்குபெறும் அணிகள் அனைத்தும் தங்களுக்குள் மோதிக்கொள்ளும் ராபின் ரவுண்ட் முறை இம்முறை பின்பற்றப்பட இருக்கிறது. லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். கடைசியாக 1992 ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியின்போதுதான் இந்த முறை பின்பற்றப்பட்டது.
பகல் ஆட்டங்கள்
இங்கிலாந்தில் போட்டிகள் நடைபெற இருப்பதால் பகலிரவு ஆட்டங்களை ஆசிய ரசிகர்கள் காண முடியாது என்பதால் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் ஆகிய அணிகள் மோதும் அனைத்து லீக் போட்டிகளும் பகல் ஆட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. அதன்படி போட்டிகள் பிற்பகல் 3 மணிக்குத் துவங்கும். மொத்தம் 10 நகரங்களில் உள்ள 11 மைதானங்களில் 48 ஆட்டங்கள் நடக்கின்றன. மே மாதம் 30 ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் இங்கிலாந்து தென்னப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.

எதிர்பார்ப்புகள்
கடந்த உலகக் கோப்பையில் நாக் அவுட் சுற்றில் வெளியேறிய இந்திய அணி தற்போது மிகுந்த பலத்துடன் இருப்பது இந்திய ரசிகர்களை வெறிகொள்ளச் செய்திருக்கிறது. கனல் பறக்கும் இந்தியா – பாகிஸ்தான் போட்டி ஜூன் 16–ந்தேதி நடைபெறுகிறது. அதேபோல் நடப்புச் சேம்பியன் ஆஸ்திரேலியாவை ஜூன் 9–ந்தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் இந்தியா சந்திக்கிறது. இறுதிப்போட்டி லண்டன் லார்ட்சில் ஜூலை 14–ந்தேதி நடக்கிறது. மழை போன்ற தடைகளால் போட்டி ரத்தானால் அடுத்த நாள் (ஜூலை 15–ந்தேதி) மறுபடி இறுதிப்போட்டி நடத்தப்படும்.

இந்தியாவின் போட்டிகள்
ஜூன்.5 தென்ஆப்பிரிக்கா – சவுதம்டன்
ஜூன்.9 ஆஸ்திரேலியா – தி ஓவல்
ஜூன்.13 நியூசிலாந்து – நாட்டிங்காம்
ஜூன்.16 பாகிஸ்தான் – மான்செஸ்டர்
ஜூன்.22 ஆப்கானிஸ்தான் – சவுதம்டன்
ஜூன்.27 வெஸ்ட் இண்டீஸ் – மான்செஸ்டர்
ஜூன்.30 இங்கிலாந்து – பர்மிங்காம்
ஜூலை.1 வங்காளதேசம் – பர்மிங்காம்
ஜூலை.6 இலங்கை – லீட்ஸ்
அட்டவணை
