இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் போட்டி நாளை தொடக்கம் – ஆதிக்கத்தை நிலைநாட்டுமா இந்திய அணி ?

0
50
cricket

இந்தியா – மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நாளை முதல் தொடங்குகிறது. முதல் டெஸ்ட் ராஜ்கோட்டில் வரும் 4 – ஆம் தேதியும், இரண்டாவது டெஸ்ட் 12 – ஆம் தேதி ஹைதராபாத்திலும் நடைபெறவுள்ளது. ஆசியக் கோப்பை போட்டி ஓய்வுக்குப் பின் மீண்டும் அணியில் இணைந்துள்ளார் கேப்டன் விராட் கோலி.

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ்

இந்தியா 1948 – ஆம் ஆண்டு முதல் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்த இரு அணிகளுக்கு இடையே 94 போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் இந்தியா 18 போட்டிகளிலும் வெஸ்ட் இண்டீஸ் 30 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. 46 டெஸ்ட் போட்டிகள் சமனில் முடிந்துள்ளன.

மொத்தப் போட்டிகளில் 45 டெஸ்ட் போட்டிகள் இந்தியாவில் நடந்துள்ளன. அதிலும் 14 போட்டிகளை வெஸ்ட் இண்டீஸ் அணியும், 11 போட்டிகளை இந்தியாவும் வென்றுள்ளது. ஆனால், வெஸ்ட் இண்டீஸ் நிறைய வெற்றிகளைப் பெற்று இருந்தாலும், அதெல்லாம் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை தான். கடந்த 20 ஆண்டுகளில் இந்தியா தான் வெஸ்ட் இண்டீஸ் அணியை பெரும்பாலும் வீழ்த்தியுள்ளது.

20 ஆண்டுகளாக இந்தியாவின் ஆதிக்கம்

கார்ல் ஹூப்பர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியை, சொந்த மண்ணில் 24 ஆண்டுகளுக்குப் பின் வீழ்த்தியது கங்குலி தலைமையிலான இந்திய இளம் படை. அதன் பின்பு ராகுல் டிராவிட் தலைமையிலான அணி 2004 இல் வெற்றி பெற்றது. அடுத்தடுத்து தோனி தலைமையிலான அணி 2011 மற்றும் 2013 ஆம் ஆண்டில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது. கடைசியாக 2016 ஆம் ஆண்டு விராட் கோலி தலைமையிலான அணியும் வெஸ்ட் இண்டீசை வெற்றிக் கண்டது.

india - west indies cricketஇந்த 16 ஆண்டுகளில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 6 தொடர்களை இந்தியா கைப்பற்றியுள்ளது. மேலும் 2002 இல் இருந்து இந்தியா 19 போட்டிகளில் வெஸ்ட் இண்டீசை எதிர் கொண்டு 10 வெற்றிகளைப் பெற்றுள்ளது. இதில் ஒரு தோல்வியைக் கூட இந்தியா பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நாளைய போட்டிக்கான இந்திய அணி

இந்நிலையில் நாளை விளையாடவுள்ள இந்திய அணியின் 12 பேர் கொண்ட பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தொடக்க வீரர்களாக ராகுலும், பிருத்வி ஷாவும் விளையாடவுள்ளார்கள். பிருத்வி ஷா டெஸ்ட் வீரராக அறிமுகமாகவுள்ளார். அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ் என மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் விளையாட அதிக வாய்ப்புள்ளது. இதனால் ஷர்துல் தாகூர் நாளை விளையாட வாய்ப்பில்லை எனத் தெரிகிறது.

cricketஒருவேளை இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களே போதும் என கோலி முடிவெடுத்தால், ஷர்துல் தாகூர் நாளைய டெஸ்டில் விளையாட வாய்ப்புண்டு. மேலும், இங்கிலாந்தில் விளையாடிய விஹாரி, அணியில் இடம்பெறவில்லை.

முதல் போட்டிக்கான இந்திய அணி

ப்ரிதீவ் ஷா, கே.எல் ராகுல், புஜாரா, விராட் கோஹ்லி (கேப்டன்), ரஹானே (துணை கேப்டன்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, உமேஷ் யாதவ், முகமது ஷமி, ஷர்துல் தாகூர்.