ஆஸ்திரேலிய மண்ணில் சாதிக்குமா இந்தியா ?

Date:

ஆலன் பார்டர் –  கவாஸ்கர் கிரிக்கெட் தொடருக்காக இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றுள்ளது. 3 T20, 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ளது. ஆஸ்திரேலிய மண்ணில் இதுவரை டெஸ்ட் தொடரை இந்தியா வென்றதில்லை. அடுத்தடுத்து வெற்றிகளால் உற்சாகத்தில் இருக்கும் இந்திய அணி வரலாற்றை மாற்றி எழுதுமா? என கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வத்தில் உள்ளனர். இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரர்களான ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோர் அணியில் இல்லாதது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும். இத்தொடரின் முதல் T20 போட்டி வரும் 21 – ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

India-Tour-of-Australia-2018-19-India-to-play
Credit: Cricbuzz

தொடரும் சோதனை

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணி இதுவரை எந்த டெஸ்ட் தொடரையும் இதுவரை வென்றதில்லை. கடைசியாக கங்குலி தலைமையில் 2003-04 – ஆம் ஆண்டு பயணத்தின்போது 1-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை சமன் செய்தது இந்திய அணி. அதன் பின்னர் நடைபெற்ற எந்த  தொடரிலும் இந்திய அணி சோபிக்கவில்லை.

தென்னாப்பிரிக்கத் தொடரில் முழுவதும் தோல்வியைத் தழுவியிருக்கும் ஆஸ்திரேலிய அணி அனுபவமில்லாத வீரர்களால் தடுமாறி வருகிறது. வார்னர் மற்றும் ஸ்மித் ஆகியோரின் தடைக்காலம் இன்னும் முடிவடையாததால் ஆஸ்திரேலிய அணிக்கு இது மிகப்பெரும் பின்னடைவாக இருக்கும். இதுகுறித்து அந்த அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே, “ஆஸ்திரேலிய அணியின் வீரர்கள் நெருக்கடி சூழ்நிலையில் தவறான முடிவுகளை எடுக்கிறார்கள். இது அந்த அணியின் வெற்றியை பாதிக்கும். தற்போதைய இந்திய அணியில் மிகச்சிறந்த வீரர்கள் இருக்கிறார்கள். எனவே கோப்பையை இந்தியா நிச்சயம் வெல்லும்,”  என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

சாதிக்குமா இந்தியா ?

பேட்டிங் வரிசையில் இந்தியா வலுவான நிலையில் உள்ளது. ஓய்விற்குப் பின் களமிறங்கும் இந்தியாவின் ரன் மிஷின் கோலி ஆஸி. பௌலர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருப்பார். ஓவர்சீஸ் போட்டிகளில் தவான் சிறப்பாக விளையாடுவார் என்பது அனைவரும் அறிந்ததே. ஆஸ்திரேலியாவின் மைதானங்கள் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு கைகொடுக்கும். மேலும் ஆஸ்திரேலிய வீரர்களின் வேகப்பந்தை சமாளிக்கும் ரோஹித் ஷர்மாவிடம் இருந்து ருத்ர தாண்டவங்களை நிச்சயம் எதிர்பார்க்கலாம். மிடில் ஆர்டரில் ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், மனிஷ் பாண்டே ஆகியோர் சமீபத்திய போட்டிகளில் நன்றாக விளையாடியுள்ளது அவர்களுக்கு புத்துணர்வை அளிக்கும்.

India-Tour-of-Australia-2018-19-India-to-play test one day
Credit: India Fantasy

ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு இந்தியாவின் புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரிட் பும்ரா, உமேஷ் யாதவ், கலீல் அஹமது ஆகியோர் சவாலாக இருப்பார்கள். பவுன்சர், யார்க்கர், அவுட் ஸ்விங், இன் ஸ்விங் என அனைத்திலும் புகுந்து விளையாடும் புவனேஷ்வர் குமார், பும்ரா இந்தியாவிற்கு பெரும் பலம். ஆக பேட்டிங் பௌலிங் என அனைத்திலும் சொல்லி அடிக்கும் இந்திய அணி வரலாறு படைக்குமா? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய வீரர்களின் பட்டியல்

விராட் கோலி(கேப்டன்), ரோஹித் ஷர்மா, ஷிக்கர் தவான், லோகேஷ் ராகுல், ஸ்ரேஷ் ஐயர், மனிஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட், குல்தீப் யாதவ், உஸ்வேந்திர சஹால், வாஷிங்டன் சுந்தர், க்ருனால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரிட் பும்ரா, உமேஷ் யாதவ், கலீல் அஹமது.

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!