28.5 C
Chennai
Friday, February 23, 2024

ராகு – கேது பெயர்ச்சி 2019: உங்களது ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது?

Date:

ராகு – கேது பெயர்ச்சி ஒன்றரை வருடங்களுக்கு ஒருமுறை நிகழக்கூடியதாகும். அதாவது 18 மாதங்கள் குறிப்பிட்ட ராசியில் இருந்து சுப மற்றும் அசுப பலன்களைத் தருவார்கள் இருவரும். இந்த வருடம் பிப்ரவரி 13 ஆம் தேதி ராகு – கேது பெயர்ச்சி நடைபெற இருக்கிறது. தற்போது கடக ராசியில் ராகுவும், மகர ராசியில் கேதுவும் அமர்ந்துள்ளனர். 13 ஆம் தேதி ராகு பகவான் கடகத்தில் இருந்து மிதுனத்திற்கும், கேது பகவான் மகரத்தில் இருந்து தனுசு ராசிக்கும் பெயர்ச்சி அடைகின்றனர். கோவையைச் சேர்ந்த பிரபல ஜோதிடர் திரு.ஹரிகிருஷ்ணன் அவர்கள் கணித்த ராகு – கேது பெயர்ச்சி பலன்களைக் கீழே காணலாம்.

மேஷம் (95/100)

மேஷ ராசியைப் பொறுத்தவரை ராசியிலிருந்து மூன்றாவது வீடான மிதுன ராசிக்கு ராகு பெயர்ச்சி ஆகிறார். இதுவரை வாழ்வில் இருந்து வந்த குழப்பங்கள், பயம், குற்றவுணர்ச்சி ஆகியவற்றிலிருந்து மெல்ல விலகி புத்துணர்வோடு புதுநடை போடும் காலம் வந்துவிட்டது. கடவுள் நம்பிக்கை அதிகரிக்கும். தத்துவார்த்த அறிவைப் பெருக்கிக் கொள்வீர்கள். இயற்கை மற்றும் சமுதாய சம்பந்தமாக இருந்த பல குழப்பங்கள் தீரும். ஆன்மீகச் சுற்றுலா செல்ல காலம் கூடிவரும். புதிய மற்றும் முக்கிய முடிவுகள் எடுக்கவேண்டி வரலாம். உங்களுடைய ராசிக்கு இந்த பெயர்ச்சி வளத்தினை அள்ளிக்கொடுப்பதாக இருக்கும்.

ரிஷபம் (70/100)

உங்களுடைய ராசியிலிருந்து 2 வது வீட்டிற்கு ராகு பெயர்ச்சி அடைகிறார். வாழ்வின் முக்கிய மாற்றங்கள் நடைபெறும் காலம் இது. அலுவலகத்தில் கூடுதல் பொறுப்பு கிடைக்கப் பெறலாம். அரசு மற்றும் வெளிநாட்டு வேலைகளுக்காக ஏங்கியவர்களுக்கு காலம் கைகொடுக்கும். பணவிரயம் அதிகமாக ஏற்படலாம். அதனால் சேமிப்பின் நன்மையை ஆரம்பத்திலேயே புரிந்துகொள்ளுதல் அவசியம். கேது உங்களுடைய ராசிக்கு எட்டாம் இடத்திற்குப் பெயர்ச்சி ஆவதால் குடும்ப உறுப்பினர்களிடையே சில சில வாக்குவாதங்களை உருவாக்கலாம். யாருக்காகவும் முன்ஜாமீன் கொடுக்கவேண்டாம். காலமறிந்து வாக்கு கொடுங்கள். சமயோசித புத்தி கொண்டு செயல்பட்டால் இந்த பெயர்ச்சி உங்களுடைய வாழ்வில் வளமான மாற்றங்களை ஏற்படுத்தும் என தாராளமாகச் சொல்லலாம்.

மிதுனம் (75/100)

மிதுன ராசிக்கு முதலிடத்தில் ராகு வருகிறார். புதிய பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்புகள் அமையும். புதிய மனிதர்களுடனான நட்பு ஏற்படும். பொருள் சேர்ப்பதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். வெளிநாட்டு வாழ் நண்பர்கள்/உறவினர்கள் மூலமாக புதிய வசதிகள் உங்களைத் தேடிவரும். சிறிய தவறுகளுக்கு மனமுடைந்து போகாமல் தொடர்ந்து செயல்படுங்கள். வீட்டில் இருப்பவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்தல் அவசியம். நீங்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு சில நேரம் ஆதாயம் கிடைக்காமல் போகலாம். அதன்காரணமாக அலுவலக பணியாளர்களிடம்/ பங்குதாரர்களிடம் கோபம் ஏற்படலாம். கவனத்துடன் வார்த்தைகளை கையாளுவது நல்லது. விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் வாழ்க்கை வளம்பெறும் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளும் காலமாக இனிவரும் மாதங்கள் இருக்கும்.

கடகம் (85/100)

கடக ராசியிலிருந்து 12 ஆம் வீடான மிதுனத்திற்கு ராகு பெயர்ச்சி அடைகிறார்.இது உங்களுடய சுய ஆற்றலை வெளிக்கொணரும். இதன் காரணமாக இழுபறியான பணிகள் முழுமையடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேருவார்கள். வரவேண்டிய பணம் கைக்கு வரும். வீட்டில் அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகள் நடக்கும். புதிய கடன்களை வாங்கினாலும் அது சுப விரயமாக மாற்றி பழைய கடன்களை அடைக்கலாம்.நோய், நொடி, போட்டி, பொறாமை ஒழியும். வீண் விரைய, வைத்திய செலவுகள் குறையும். நெஞ்சினை வாட்டிய பழைய கசப்பு உணர்ச்சிகள் நீங்கி வாழ்க்கை பற்றிய நேர்மறையான எண்ணங்கள் வளரும் காலம் வந்துவிட்டது உங்களுக்கு எனலாம்.

சிம்மம் (87/100)

ராகு பகவான் சிம்ம ராசியிலிருந்து 11 ஆம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இது உங்களுக்கு எதிர்பாராத யோகத்தையும் திடீர் பண வரவையும் தரும். போட்டி பொறாமைகளை ஒழிந்து, அடுத்தவர்களின் சூழ்ச்சியால் நீங்கள் மாட்டிய பிரச்சனைகள் இனி தானாகவே மறைந்து விடும். பாகப் பிரிவினை, சொத்து வழக்குகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக முடியும். குடும்பத்தில் அமைதி திரும்பும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். பிள்ளைகள் உயர்கல்வியில் வெற்றி பெறுவார்கள். பிள்ளைகளின் தனித் திறமைகளைக் கண்டுபிடித்து உற்சாகப்படுத்துவீர்கள். இந்த ராகு – கேது பெயர்ச்சி உங்களுக்கு எல்லா வகையிலும் உங்களுக்கு நற்பலனையே தர இருக்கிறது.

கன்னி (90/100)

ராகு 10 ஆம் இடத்திற்கும் கேது 4 ஆம் வீட்டிற்கும் இடப்பெயர்ச்சி ஆகின்றார்கள். கடந்த காலங்களில் மகிழ்ச்சியை கெடுத்து நிம்மதியை இழக்க செய்த ராகு கேது இப்பொழுது சூரியனை கண்டு பனி விலகுவதை போல ஒவ்வொரு முயற்சியும் காரியமும் வெற்றியை கொடுக்கும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். 10 ஆம் இடம் தொழில் ஸ்தானம், கீர்த்தி, செல்வாக்கு அந்தஸ்து ஸ்தானத்தில் ராகு வருவதால் தொழிலாளி முதலாளி ஆகலாம். நினைத்த மாதிரி வேலை வாய்ப்பு அமையலாம். நல்ல சம்பளம் வசதி வாய்ப்புகளை உருவாக்கித் தரலாம். உங்கள் ராசிக்கு 5 ஆம் வீட்டில் இதுவரையில் அமர்ந்திருந்த கேது, இப்போது ராசிக்கு 4 ஆம் வீட்டில் அமர்வதால் பக்குவப்பட வைப்பார். கனிவான பேச்சாலேயே காரியங்களைச் சாதிப்பீர்கள்.

துலாம் ( 96/100)

உங்களுடைய ராசியைப் பொறுத்தவரை ராகு ஒன்பதாம் வீட்டிற்கும், கேது 3 ஆம் வீட்டிற்கும் இடப்பெயர்ச்சி அடையப் போகின்றனர். ராகு கேதுவுக்கு 3, 6, 11 ஆகிய வீடுகளும் கேந்திர ஸ்தானமான 4, 7, 10,வீடுகளில் ராகு கேது வருவது நல்லது தான். புது பதவிகள் உங்களைத் தேடிவரும். ஆடை ஆபரணங்கள் பெருகும். குடும்பத்தில் இருந்துவந்த சிக்கல்கள் தீர்ந்து நெருக்கம் அதிகமாகும். கணவன் மனைவி மிகுந்த பாசப்பினைப்போடு இருப்பார்கள். குழந்தைகளின் எதிர்காலத்திற்காக புதிய முயற்சிகளில் இறங்கி வெற்றியும் காண்பீர்கள். இன்ப அதிர்ச்சிகள் ஏற்படும் காலமிது.

விருச்சிகம் (78/100)

இது வரை 3 ஆம் வீட்டில் இருந்த கேது இப்பொழுது 2 ஆம் இடத்திற்கும், 9 ஆம் வீட்டில் இருந்த ராகு 8 ஆம் வீட்டிற்கும் வருகிறார்கள். உடல்நலம் பற்றிய அக்கறைகள் அதிகமாகும். ராகு பகவான் எதிர்ப்பாராத பணம் பொன், பொருள் சேர்க்கை, வீடு வாசல் போன்ற வசதிகளைத் தருவார். பேச்சில் நயனம் இருக்கும். சிக்கலான சூழ்நிலைகளை சமாளிக்கக் கற்றுக்கொள்வீர்கள். பிள்ளைகளின் உயர்கல்விக்காக கடன்வாங்க நேரிடலாம். சிறிய சிறிய சங்கடங்கள் வந்தாலும், அவற்றை எல்லாம் மீறி உங்களது வெற்றிக்கொடியை பறக்கவிடும் வாய்ப்பை ராகு கேது உங்களுக்குத் தருவார்கள்.

தனுசு (87/100)

உங்களுடைய ராசிக்கு இதுவரை 2 ஆம் இடத்தில் இருக்கும் கேதுவும் 8 ஆம் இடத்தில் ராகு இருந்த நிலைமாறி ராசியில் கேதுவும் 7 ஆம் இடத்தில் ராகுவும் பெயர்ச்சியாகிறார்கள். வீண் விவாதங்கள், அலைச்சல்கள், கோபதாபங்கள் எல்லாம் குறையும். கணவன் மனைவி இருவரும் ஒருவருக் கொருவர் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. புண்ணிய தளங்களுக்கு சென்றுவர வாய்ப்பு கிட்டும். பிரச்சனைகளை நயம்பட பேசி சமாளிப்பீர்கள். நண்பர்களுக்கு பணம் குடுத்தலில் கவனம் தேவை. ஆதாயத்துடன் கூடிய அலைச்சல்கள் ஏற்படும்.

மகரம் (92/100)

7 ஆம் வீட்டில் இருந்த ராகு பகவான் 6 ஆம் வீட்டிற்கும், உங்கள் ராசியிலேயே இருந்த கேது 12 ஆம் வீட்டிற்கும் பெயர்கிறார்கள். தடங்கல்களினால் தள்ளிப்போன பல காரியங்களை இனிமேல் செய்துமுடிப்பீர்கள். மனைவி வழியாக உற்சாகம் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்கள் உங்களுடைய பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். சமூகத்தில் அந்தஸ்து அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் கிட்டும். புதுவாகனங்கள் மற்றும் புதுவீடு வாங்க வாய்ப்பு அமையும். சிற்சில கடன் தொல்லைகள் ஏற்பட்டாலும், சரியான காலத்தில் அவற்றை அடைப்பீர்கள். உடலில் இருந்துவந்த உபாதைகள் நீங்கும். வீட்டாருடன் மனதுவிட்டு பேசி மகிழ்ந்திடுவீர்.

கும்பம் ( 96/100)

உங்களுடைய ராசிக்கு 5 ஆம் இடத்திற்கு ராகுவும், 11 ஆம் இடத்திற்கு கேதுவும் வர இருக்கிறார்கள். வீட்டிலும் வெளியிலும் உள்ள அனைவரிடமும் நல்லுறவு ஏற்படும். நீங்கள் ஊக வணிகத்திலும் வர்த்தகத்திலும் வெற்றி அடையமுடியும். சொந்த பந்தங்களிடையே இருந்து வந்த மனக்கசப்பு விலகும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும். திடீர்ப் பயணங்கள் அமையும். இதுவரை தடைபட்ட காரியத்தை செவ்வனே செய்து முடிப்பீர்கள். இது வரை திருமணம் ஆகி புத்திரபாக்கியம் தடைப்பட்ட தம்பதியினருக்கு புத்திர பாக்கியமும் குடும்பத்தில் அமைதியும் நிலவும். 18 வருஷத்துக்கு பிறகு 5 ஆம் இடத்திற்கு ராகு வருவதால் முன்னோர் வகையில் உள்ள தோஷம் நீங்கி சுகம் பெறலாம்.

மீனம் (94/100)

மீன ராசிக்கு 4 ல் ராகுவும் 10 ல் கேதுவும் மாறுகிறார்கள். இதுவரை உங்களை வாட்டிவந்த குடும்ப பிரச்சினைகள் முடிவிற்கு வரும். கணவன் மனைவி அதிக நெருக்கம் பெறுவார்கள். தாயாருக்கு  உடல்நலத் தொந்தரவுகள் காணப்படும் என்பதால் உங்கள் தாயாரின் ஆரோக்கியதில் அக்கறை தேவை. நீண்ட தூர பயணங்கள் ஏற்படும். செலவுகள் அதிகமாகலாம். சிக்கனமாக செயல்படுவது நல்லது. வாய்ப்புகளை உருவாக்க அதிக முயற்சிகள் எடுக்க வேண்டியிருக்கும். வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் தேடி வரும். மூத்த சகோதரருடன் இருந்த கருத்துமோதல்கள் விலகும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். அவர்கள் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். ஆன்மீக பயணங்களுக்கு வாய்ப்பு அமைந்தால் சென்றுவரவும். அலுவலக வேலைகளைப் பற்றி வீட்டிலும், வீட்டைப்பற்றி வெளியிலும் பேசவேண்டாம். முடிந்தவரை இயல்பான மனநிலையில் இருப்பது சிறந்தது.

Share post:

Popular

More like this
Related

கங்காரு (Kangaroo) பற்றி பலரும் அறிந்திடாத 10 சுவாரசியமான தகவல்கள்!

கங்காரு கங்காருக்கள் சக்திவாய்ந்த பின்னங்கால்கள், நீண்ட வலுவான வால் மற்றும் சிறிய...

புதன் கோள் (Mercury) பற்றி பலரும் அறிந்திடாத 10 சுவாரசிய தகவல்கள்!

புதன் கோள் நமது சூரிய குடும்பத்தில் உள்ள மிகச்சிறிய கோள். இது...

ஒட்டகம் (Camel) பற்றிய சுவாரஸ்யமான 8 தகவல்கள்!

ஒட்டகம் என்றவுடன் நம் நினைவிற்கு வருவது ஒட்டகங்கள் பாலைவனங்களில் வாழும் பெரிய...

வான்கோழி (Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...
error: Content is DMCA copyright protected!