நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள் நிலவுகளைக் கொண்டுள்ளன. பூமிக்கு ஒரு நிலவு மட்டுமே உள்ளது. கவிஞர்கள் கொண்டாடும் நிலவை சந்திரன் என்றும் கூறுவது உங்களுக்கு தெரியும். வாருங்கள் சந்திர கிரகணம் என்றால் என்ன உள்ளிட்ட சந்திர கிரகணம் பற்றிய பல தகவல்களை தெரிந்து கொள்வோம்.
சந்திர கிரகணம் என்றால் என்ன?
சந்திர கிரகணம் என்பது என்ன.. காண்போம் வாருங்கள்! சூரிய ஒளி புவியில் படுவதால் பூவியின் நிழல் விண்வெளியில் விழுகிறது. அப்படி விழும் புவியின் நிழலிற்குள் நிலவு கடந்து செல்லும் நிகழ்வே சந்திர கிரகணம் ஆகும். சந்திர கிரகணத்தின் போது, பூமி சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் வந்து, சூரிய ஒளி நிலவின் மீது படாமல் தடுக்கிறது. சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் சந்திக்கும் போது நிகழ்கின்ற அதிசய நிகழ்வு தான் சந்திர கிரகணம். பௌர்ணமி நாளில் மட்டுமே சந்திர கிரகணம் நிகழ்கிறது.
சந்திர கிரகணத்தின் போது நிலவு சிவப்பு நிறமாக ஏன் தோன்றுகிறது?
சந்திர கிரகணத்தின் போது, சந்திரன் சிவப்பு நிறத்தில் தோன்றும். ஏனென்றால், சந்திரனின் மேற்பரப்பில் இருந்து பார்த்தால், பூமியின் விளிம்புகளைச் சுற்றியிருக்கும் சூரிய ஒளி மட்டுமே சந்திரனை அடையும். நாம் எப்போதும் பூமியிலிருந்து சந்திரனின் ஒரே பக்கத்தைப் பார்க்கிறோம். மறுபக்கம் பார்க்க விண்வெளிக்குச் செல்ல வேண்டும்.
நமது சந்திரன் சமவெளி, மலை, பள்ளத்தாக்குகள் கொண்ட பாலைவனம் போன்றது. இது பல பள்ளங்களைக் கொண்டுள்ளது. விண்வெளிப் பாறைகள் அதி வேகத்தில் மேற்பரப்பைத் தாக்கும் போது உருவாக்கப்பட்ட துளைகள். ஓவல் வடிவ சுற்றுப்பாதையில் சந்திரன் பூமியைச் சுற்றி வருகிறது.
சந்திர கிரகணத்தின் வகைகள்?
இரண்டு வகையான கிரகணங்கள் உள்ளன. முழு சந்திர கிரகணம் (Total Lunar Eclipse) மற்றொன்று பகுதி சந்திர கிரகணம். (Total Lunar Eclipse)
முழு சந்திர கிரகணம் (Total Lunar Eclipse)

சந்திர கிரகணத்தின் போது, பூமியின் நிழல் சந்திரனை மறைக்கிறது. சூரிய கிரகணத்தின் போது, சந்திரன் சூரியனை பார்வையில் இருந்து தடுக்கிறது. சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையில் பூமி நேர்கோட்டில் சந்திக்கும் போது, பூமியின் நிழல் சந்திரனின் மேற்பரப்பில் விழுந்து, அதை மங்கச் செய்து, சில மணி நேரங்களில் சந்திரனின் மேற்பரப்பை சிவப்பு நிறமாக மாற்றும். ஒவ்வொரு சந்திர கிரகணமும் பூமியின் பாதியில் இருந்து தெரியும். கிரகணத்தின் போது பூமியின் வளிமண்டலத்தில் அதிக தூசி மற்றும் மேகங்கள் காரணமாக, சந்திரன் சிவப்பு நிறத்தில் தோன்றும். சந்திரனும் சூரியனும் பூமிக்கு எதிரெதிர் பக்கத்தில் இருக்கும்போது முழு சந்திர கிரகணம் ஏற்படுகிறது.
பகுதி சந்திர கிரகணம் (Partial lunar eclipse)

சூரியன், பூமி மற்றும் சந்திரனின் பகுதி நிகழ்வு. பூமிக் குடையின் ஒரு பகுதியை மட்டுமே சந்திரன் கடந்து செல்லும். நிழல் வளர்ந்து பின்னர் சந்திரனை முழுவதுமாக மறைக்காமல் பின்வாங்குகிறது. பூமியின் நிழலின் ஒரு பகுதி மட்டுமே சந்திரனை மறைக்கும் போது ஒரு பகுதி சந்திர கிரகணம் நிகழ்கிறது, மேலே படத்தில் காண்பது போல.
Also Read: நிலவு பற்றிய 12 தகவல்கள்!