விண்வெளி ஆராய்ச்சியில் மிகப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தப்போகும் வகையிலான ஒரு கண்டுபிடிப்பு இது. செவ்வாய் கோளில் ஒரு பரந்த நீர்த்தேக்கம் உள்ளது என்று விஞ்ஞானிகள் சற்று முன்பு தெரிவித்துள்ளனர்.
செவ்வாய் கோளின் நிலத்தடியில் பனிக்கட்டிக்குள் மறைந்திருக்கும், 12 மைல் அகலமுள்ள நீர்த்தேக்கம் உள்ளதாக விஞ்ஞானிகள் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Credit: NASA/JPL/MSSS
ஏரி நேரடியாக காணப்படவில்லை; பனிபடர்ந்த நிலத்தின் அடியில் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இத்தகவல் உண்மையாக இருந்தால், அது செவ்வாய் கோளில் உயிரினங்கள் இருப்பதற்கான சூழலை கணிசமாக அதிகரிக்கும் என்றும் அறியப்படுகிறது.
மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஆர்பிட்டர் (Mars Express Orbitter) என்ற ஐரோப்பிய விண்கலம், கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் செவ்வாய் கோளைச் சுற்றி ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தது. செவ்வாய் கோளின் தென் துருவத்தில் பனி சூழ்ந்த பகுதியை ஸ்கேன் செய்தபோது, மார்சஸ் (MARSIS) என்றழைக்கப்படும் ரேடார் கருவி, சுமார் 12.4 மைல்கள் பரப்பளவில் மேற்பரப்புக்கு அடியில் ஒரு மைல் ஆழத்தில் இருப்பதை கண்டறிந்தது.
இந்த ஆராய்ச்சி முடிவு இன்று Science என்ற பெயரில் வெளிவரும் இதழான sciencemag.org என்ற தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இது பற்றிய முழுமையான தகவல்களை எழுத்தாணி உங்களுக்கு தொடர்ந்து வழங்கும். இந்த கண்டுபிடிப்பை முதலில் பதிவு செய்த தமிழ் ஊடகம் நமது எழுத்தாணி என்பதில் பெருமிதம் கொள்கிறோம்.
இனிமேல் வேற்றுலக வாசிகளை தேடி கண்டுபிடிக்க வேண்டியது மட்டுமே மிச்சம் இருக்கிறது!