விண்வெளியின் Interstellar மண்டலத்தை அடைந்தது வாயேஜர் விண்கலம்!!

Date:

வாயேஜர் 2 நாசாவால் 1977 ம் ஆண்டு விண்ணில் வீசப்பட்டது. அதாவது இதன் சகோதரன் வாயேஜர் 1 ஐ ஏவிய 16 நாட்களுக்கு முன் இந்த விண்கலமானது ஏவப்பட்டது. முதலில் இது  நெப்டியூனைப் பற்றி அறியவே ஏவப்பட்டாலும் தற்போது சூரியக் குடும்பத்தைத் தாண்டி பயணித்து வருகிறது. தொடர்ந்து 41 ஆண்டுகள் 3 மாதங்கள் 22 நாட்களுக்குப் பிறகும் தற்போது வரை வாயேஜர் 2 நாசாவுடன் தொடர்பு கொண்டுள்ளது. தற்போது இது “ஹீலியோபாஸ்” எனப்படும் சூரியகாந்த மற்றும் சூடான சூரியக் காற்று நிறைந்த பகுதிக்குள் நுழைந்துள்ளது. இது பொதுவாக Interstellar Medium என அழைக்கப்படுகிறது.

VOYEGER 2
Credit: Space

இதுவரை..

வாயேஜர் 2 இதுவரை மிகப்பெரிய கோள்களான வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூனைக் கடந்து அவற்றின் 16 நிலவுகளையும் தாண்டிச் சென்றிருக்கிறது. அதோடு நெப்டியூன் கிரகத்தில் இருக்கும் இருள் பிரதேசத்தின் மர்மத்தை விளக்கியதும் இந்த விண்கலம் தான். நாசாவின் மிக அதிக காலம் நீடித்த திட்டம் வாயேஜர் 2 ஆகும்.

அறிந்து தெளிக!!
இன்டர்ஸ்டெல்லர் பிளாஸ்மா என்பது விண்வெளியில் பல மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் நட்சத்திர கூட்டங்களுக்கு நடுவில் இருக்கும் அடர்ந்த சூரிய ஆற்றல் கொண்ட கதிர்வீச்சுகளை வெளியிடும் ஒரு ஊடகம் ஆகும்.

நட்சத்திரங்கள் மற்றும் மில்கி வே கேலக்ஸிக்கும் இடையே பயணிக்கும் வாயேஜர் 2  Interstellar Plasma மற்றும் அதன் அடர்த்தி பற்றி  மேலும் பல முக்கியத் தகவல்களை அனுப்பக்கூடும் என நாசா விஞ்ஞானி Edstone தெரிவித்துள்ளார்.

voyager
Credit: Astronomy Now

சாதனை

வினாடிக்கு 15.341 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் இந்த விண்கலம் இதுவரை பூமியிலிருந்து 18 பில்லியன் கிலோமீட்டர் தொலைவைக் கடந்துள்ளது. வாயேஜர் 2 ஆனது மூன்று Multi Hundred Watt Radioisotope Thermo Electric Generator – ஆல் இயங்குகிறது. ஒவ்வொரு ஜெனரேட்டரும் மிகுந்த அழுத்தத்தில் உள்ள  புளூட்டோனியம் ஆக்ஸைடு கோளத்தை கொண்டது. 2025 ஆண்டு வரை வாயேஜர் 2 விற்கு தேவையான வெப்ப ஆற்றலை இது கொடுக்கவல்லது. அதன்பிறகு ஆற்றல் மூலம் குறைந்து தன் செயல்பாட்டை நிறுத்திக்கொள்ளும். அத்தோடு அதன் நீண்ட பயணமும் முடிவிற்கு வரும். சந்தேகமே இல்லாமல் மனிதர்களின் மகத்தான சாதனைகளுள் இந்த வாயேஜர் விண்கலமும் ஒன்று.

Intersteller Space க்குள் வாயேஜர் 2 பயணிக்கும் காட்சி!!

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!