21-ம் நூற்றாண்டின் மிக நீளமான சந்திர கிரகணம் வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 27) நிகழ இருக்கிறது. வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி சனிக்கிழமை அதிகாலை வரை நீடிக்கும் இந்த கிரகணம், முழுதாக 104 நிமிடங்கள் நிகழும். இந்த நிகழ்வின் போது, சிவப்பு நிலவு (Blood Moon) என்ற நிகழ்வும் நடைபெற உள்ளது.
சிவப்பு நிலவு என்றால் என்ன ?
சூரியனுக்கும், நிலவிற்கும் நடுவில் பூமி பயணிக்கும் போது பூமியின் நிழல் நிலவின் மீது விழுந்து, நிலவு ஆரஞ்சு அல்லது சிவப்பு நிறத்தில் தெரியும். இது தான் சிவப்பு நிலவு அல்லது ரத்தச்சிவப்பு நிலவு என்று அழைக்கப்படுகிறது.
இதே போல, இந்த வருடம் இரண்டு முறை நீல நிலவு தோன்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

சந்திர கிரகணம் தோன்றும் நேரம்
இந்திய நேரப்படி, சந்திர கிரகணம் சரியாக வெள்ளிக்கிழமை இரவு 11.44 மணிக்குப் பிறகு நிகழத் தொடங்கும். இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் வெறும் கண்களினாலேயே இதை நம்மால் காண முடியும். இருந்தாலும், பருவமழை காலம் என்பதால் வானில் மேகமூட்டம் இருந்தால் கிரகணத்தைப் பார்ப்பதில் சிரமங்கள் நேரலாம்.
ஒரு மணி வாக்கில் முழுக் கிரகண நிலையை அடைந்து 1.52 மணிக்கு நிலவு முழுவதும் மறைக்கப்பட்டுக் காரிருளாகத் தோன்றும். முழுக் கிரகணம் 2.43 மணி வரை நீடிக்கும். கொஞ்சம் கொஞ்சமாக விலகி 3.49மணிக்குக் கிரகணம் முடிந்துவிடும்.
சந்திர கிரகணம் – அறிவியலும் நம்பிக்கைகளும்
- கிரகண காலத்தில் நீர் அருந்தக் கூடாது, உணவு உண்ணக்கூடாது, கர்ப்பிணிகள் வெளியே செல்லக்கூடாது, மனநலம் பாதிக்கப்படும் என பல நம்பிக்கைகள் இருக்கின்றன. இன்னும் சிலர், கிரகணத்தைப் பார்ப்பதால் வாழ்வில் நன்மைகள் ஏற்படும், நல்லது நடக்கும் என்றும் சொல்வார்கள்.
- சந்திர கிரகணத்தைப் பொறுத்தவரை கதிர்வீச்சு ரீதியாக பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. கிரகண நேரத்தில் தண்ணீர் அருந்தினாலோ, சாப்பிட்டாலே உடல்ரீதியான பாதிப்புகள் வரும் என்பது நிரூபிக்கப்படவில்லை.
- இதை வெறும் கண்களால் பார்ப்பதால் எந்தப் பிரச்னையும் ஏற்படாது. சூரிய கிரகணத்தைப் பார்ப்பதுதான் தவறு. சந்திர கிரகணத்தைப் பார்க்கலாம்.
- கர்ப்பிணிகள் அந்த நேரத்தில் வெளியில் செல்லாமல் இருப்பது நல்லது. குறிப்பாக, உடல் மிகவும் சோர்வாக இருந்தால் வெளியில் வருவதையும், அந்நேரத்தில் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும்.
- கிரகணம் ஏற்படுத்தும் முக்கிய பாதிப்பு, மனநலம் சார்ந்தது. மனநல பாதிப்பு உள்ளவர்கள், கிரகண வேளையில் வெளியில் செல்வதால் பாதிப்பு அதிகரிக்ககூடும்.
மேலே இருப்பது, சந்திர கிரகணத்தின் போது நிலவில் இருந்து பார்த்தால் நமது பூமி எவ்வாறு இருக்கும் என்பது பற்றிய காணொளி
இதன் அளவைகள் பின்வருமாறு,
- L=0 : மிகவும் அடர்ந்த கிரகணம். நிலவு கிட்டத்தட்ட மறைந்திருக்கும், குறிப்பாக மத்தியில் முழுமையாக மறைந்திருக்கும்.
- L=1 : அடர்ந்த கிரகணம், சாம்பல் அல்லது பிரவுன் நிறத்தில் இருக்கும். விவரங்களை வேறுபடுத்துவது சிரமத்துடன் மட்டுமே இருக்கும்.
- L=2 : ஆழ்ந்த சிவப்பு அல்லது துரு நிற கிரகணம். மிகவும் அடர்ந்த மைய நிழல், அதே சமயம் நிலவின் வெளிப்புற முனை குறிப்பிடத்தக்களவில் பொலிவுடன் காணப்படும்.
- L=3 : செங்கல்-சிவப்பு கிரகணம்.கிரகண நிழல் பொதுவாக பொலிவுடன் அல்லது மஞ்சள் விளிம்புடன் இருக்கும்.
- L=4 : மிகவும் பொலிவான செம்பு-சிவப்பு அல்லது ஆரஞ்சு கிரகணம். கிரகண நிழல் நீல நிறமாகவும், மிகவும் பொலிவான விளிம்புடனும் இருக்கும்
எனவே, சந்திர கிரகணம் பற்றிய மூடநம்பிக்கைகளை புறம் தள்ளிவிட்டு, அறிவியல் ரீதியாக குழந்தைகளுக்கு அதனை பற்றி கற்பிக்கத் தொடங்குவோம்.