சூரியக் குடும்பத்தில் 9-வது கோள் இருப்பதற்கான சாத்தியக் கூறுகளைக் குறித்து விண்வெளி விஞ்ஞானிகள் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சூரியக் குடும்பத்தில் தலைவன்
சூரியக் குடும்பத்தின் தலைவன் சூரியன். சூரியனைச் சுற்றியே மற்ற கிரகங்கள் வலம் வந்து கொண்டு இருக்கின்றன. சூரியனுக்கு அருகே பாறைகளாலான கோள்களாக புதன், வெள்ளி, பூமி, செவ்வாய் ஆகியன இருக்கின்றன. வியாழன் மற்றும் சனி வாயுக் கோள்களாக அறியப்படுகின்றன.
புளூட்டோ மற்றும் நெப்டியூன்
16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நிகோலஸ் கோப்பர் நிகஸ் (Nicolaus Copernicus) சூரிய மையக் கோட்பாட்டை வெளியிட்டார். இதன் பின்னரே சூரியனை மையமாகக் கொண்டு கோள்கள் நீள் வட்டப் பாதையில் வலம் வருகின்றன என்பதை ஏற்றுக்கொள்ளும் கருத்துக்கள் வலுப் பெற தொடங்கின.
சீரிஸ் என்னும் குறுங்கோள்
1801-ஆம் ஆண்டில் சீரிஸ் எனும் குறுங்கோள் கண்டுபிடிக்கப்பட்டது. இது செவ்வாய்க்கும் வியாழனுக்கும் இடையில் சூரியனைச் சுற்றிக் கொண்டிருக்கின்றது. சீரிஸ் போன்று நிறைய குறுங்கோள்கள் (Asteroids) சூரியனைச் சுற்றி வருகின்றன.
புளுட்டோ
புளுட்டோ 1930 களில் கண்டுபிடிக்கப்பட்டது. சூரியனைச் சுற்றும் 9-வது கோளாக இது பிரகடனப்படுத்தப் பட்டது. புளூட்டோ புதனை விட சிறியது. துணைக்கோள்களை விடவும் சிறியது. ஆனால், புளூட்டோ சற்று விசித்திரமானது.
பிறகு வானியலாளர்கள், புளூட்டோ போன்றே சில வான்பொருட்கள் சூரியனை கைபர் பட்டைப் பகுதியில் சுற்றி வருவதைக் கண்டுபிடித்தனர். மேலும், ஆயிரக்கணக்கான கைபர் பட்டைப் பொருட்களினால் ஆனது புளூட்டோ என்று கண்டுபிடித்தனர். இதனால் புளூட்டோவை ஒரு மிகப்பெரிய கைபர் பெல்ட் ஆப்ஜெக்ட் (KBO) என்று அழைக்கலாம் எனக் கருதினர். ஒரு கோளுக்கு உண்டான தகுதி புளூட்டோவிடம் இல்லை எனக் கூறி அறிவியலாளர்கள், 2007-ல் புளூட்டோ தன் கோள் எனும் தகுதியை இழக்கிறது என்றும் இனி சூரியக் குடும்பத்தில் 8 கோள்கள் தான் எனவும் அறிவித்தனர்.
சர்வதேச வானியல் கழகம் (IAU) கோள்களின் பிரச்னைக்கு ஒரு தீர்வை கண்டுபிடித்தது. 2006-ம் ஆண்டு குறுங்கோள்களை வகைப்படுத்தியது. பிறகு எரிஸ் (Eris), சீரிஸ் (Ceres), புளூட்டோ மற்றும் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட , மக்கேமக்கே (MakeMake) ஆகியவை குறுங்கோள்கள் என்று அறிவிக்கப்பட்டன .
2. போதுமானளவு திணிவைக் கொணடிருப்பதன் மூலம் கோளமான வடிவத்தை பெற்றிருக்க வேண்டும்.
3. தனக்கென தனியாக சுற்று வட்டப் பாதையைக் கொண்டிருக்க வேண்டும்.
இதில் இந்த மூன்றாவது விதிக்கு ஒத்துவராமல் இருந்ததால் புளுட்டோ குறுங்கோள் பட்டியலில் சேர்ந்தது.
9-வது கோள் கண்டுபிடிப்பு
இந்நிலையில் சூரிய குடும்பத்தில் 9-வது கோள் இருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இதற்கான ஆதாரங்களையும் தெரிவித்துள்ளனர். கலிபோர்னியா தொழில் நுட்ப நிறுவனத்தின் விண்ணில் ஆய்வாளர்கள் இருவர் புதிதாக ஒன்தாவது கோளை கண்டுபிடித்துள்ளனர்.
நெப்டியுனிற்கும் அப்பால் சூரியனைச் சுற்றி வரும் 6-க்கும் மேற்பட்ட விண் பொருட்களை ஆய்வு செய்ததில், அவற்றின் பயணப்பாதையில் ஒரு முரண்பாடு தெரிவதை விஞ்ஞானிகள் கவனித்தனர். இந்த ஆறு விண்கற்களும், விண் பொருட்களும் சூரியனை ஒரு குறித்த பக்கத்தில் சுற்றுகின்றன. ஆகவே, இந்த முரணான சுற்றுப் பாதைக்கு வேறு ஒரு காரணம் இருக்கலாம் என்று இவர்கள் கருதுகின்றனர். அந்தக் காரணம் 9-வது கோளாகவும் இருக்கலாம்.
பூமியைப் போல 10 மடங்கு
9-வது கோள் தனது ஈர்ப்பு விசையினால் இந்த சிறிய விண் பொருட்களின் பாதையைத் தனது ஆதிக்கத்தில் வைத்துள்ளது என்பது ஆய்வாளர்களின் கருத்து, நீண்ட காலக் கண்காணிப்பு மற்றும் கணினி மாதிரி அமைப்புகளின் படி நிச்சயம் ஒரு கோள் இருக்க வேண்டும் என்று அவர்கள் நம்புகின்றனர்.
தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள 9-வது கோள் சுமாராக பூமியின் அளவைப் போல பத்து மடங்கு அளவைக் கொண்டிருக்க வேண்டும்.
இந்தப் புதிய கோள் சூரியனில் இருந்து 32 பில்லியன் கி.மீ தொலைவில் சுற்றிவர வேண்டும். அதுவும் நீள்வட்டப்பதையில் சூரியனுக்கு அருகில் இருக்கும் போது தான், அது சூரியனுக்கு தொலைவில் செல்லும் போது சூரியனில் இருந்து 160 பில்லியன் கி.மீ தொலைவில் இருக்கும். மேலும் ஒரு முறை சூரியனை சுற்றிவர 10000-20000 ஆண்டுகள் வரை எடுக்கும் என்று கணக்கிட்டுள்ளனர்.