இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ (ISRO), பிரேசில் நாட்டின் அமேசோனியா-1 உள்ளிட்ட 19 செயற்கைக்கோள்களுடன் PSLV C-51 ராக்கெட்டை இன்று விண்ணில் செலுத்தவுள்ளது.
PSLV ராக்கெட்டுகளின் வரிசையில் இன்று தனது 59 ஆவது ராக்கெட்டை இஸ்ரோ செலுத்த உள்ளது. ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து காலை 10.24 மணிக்கு PSLV C-51 விண்ணில் பாய்கிறது.
ராக்கெட்டை செலுத்துவதற்கான ‘கவுன்ட் டவுன்’ நேற்று காலை 8:54 மணிக்கு துவங்கியது. பிரேசில் நாட்டில், அமேசான் காடுகள் அழிக்கப்படுவதை தடுக்கும் வகையில், அவற்றை கண்காணிக்கவும் பன்முகப்படுத்தப்பட்ட விவசாயத்தை பகுப்பாய்வு செய்வதற்கும் ‘அமேசோனியா – 1’ செயற்கைக் கோள் ஏவப்படுகிறது. இதற்காக அமேசோனியா-1 செயற்கைகோள் பூமியில் இருந்து 637 கி.மீ தூரத்தில் புவிவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்படும். அமேசோனியா-1 செயற்கைகோளின் ஆயுட்காலம் 4 ஆண்டுகள் ஆகும்.
இதனுடன் இந்தியாவின் 5 செயற்கைக்கோள்களும் அமெரிக்காவுக்கு சொந்தமான 13 நானோ செயற்கைக்கோள்களும் விண்ணில் செலுத்தப்படுகின்றன.
நேரலையில் காண்பதற்கு இங்கே க்ளிக் செய்யவும்:
Watch Live Launch of PSLV-C51/Amazonia-1 today, February 28, 2021 from 09:50 hrs IST onwards
Also Read: குறைந்த செலவில் இணைய சேவையை வழங்கிட 4425 செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவும் நிறுவனம்
சீனா செயற்கையாக தயாரித்திருக்கும் நிலவு! – எதற்காக தெரியுமா?
நாசாவின் பெர்செவெரன்ஸ் ரோவர் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கும் இடமும் விளக்கமும்!