நாசாவின் பெர்செவெரன்ஸ் ரோவர் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கும் இடமும் விளக்கமும்!

Date:

உலகெங்கிலும் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையங்கள் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பிய செயற்கை கோள்களில் 40 சதவீதம் மட்டுமே வெற்றி அடைந்துள்ளது. இந்நிலையில் வியாழக்கிழமை (18-02-2021) அன்று செவ்வாய் கிரகத்தில் நாசாவின் பெர்சேவேரன்ஸ் ரோவர், ஜெஸரோ பள்ளத்தில் (Jezero Crater) தரையிறங்க இருக்கிறது. பின்னர் செவ்வாய் கிரகத்தின்  கடந்த கால நிகழ்வு, வரலாறு குறித்த தேடும் பணியை துவங்கும். உலகில் உள்ள பெரும்பாலான விண்வெளி ஆர்வலர்கள் இந்நிகழ்வை ஆர்வத்துடன் எதிர்பார்த்திருக்கின்றார்கள்.

1
(Image credit: NASA/JPL-Caltech)

ஜெஸரோ பள்ளம், செவ்வாய் கிரகத்தின் கிழக்கு அரைக்கோளத்தில் பூமத்திய ரேகைக்கு வடக்கே, ஐசிடிஸ் பிளானிட்டியா (Isidis Planitia) என்று அழைக்கப்படும் இடத்தில் அமைந்துள்ளது. இந்த தட்டையான சமவெளி 750 மைல் அகலமுள்ள (1,200 கிலோமீட்டர்) ஒரு பகுதியில் அமைந்துள்ளது. இது 3 பில்லியன் முதல் 4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வால் மீன் அல்லது பெரிய சிறுகோள் செவ்வாய் கிரகத்தில் மோதியபோது உண்டான பள்ளத்தாக்கு இந்த சமவெளி. சில காலம் கழித்து ஒரு சிறிய விண்கல், இந்த படுகையில் விழுந்த போது ஜெஸரோவை உருவாக்கியது. நாசாவின் கூற்றுப்படி, ஒரு நதி ஜெஸரோவுக்குள் ஓடியதாக சான்றுகள் தெரிவிக்கின்றன. பெர்செவெரன்ஸ் ரோவர் தரையிறங்கும் இடத்தைப் கீழே பாருங்கள்.

2

பெர்செவெரன்ஸ் ரோவர் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கும் இடமும் இதுவரை இறங்கிய விண்கலங்களும். பீனிக்ஸ் எனப்படும் ரோபோ விண்கலம் மே 25, 2008 அன்று செவ்வாய் கிரகத்தின் ஒரு பகுதியில் தரையிறங்கி, நவம்பர் 2, 2008 வரை இயங்கியது. பூமியில் அட்சரேகை அடிப்படையில் அந்த இடம் அலாஸ்காவுக்கு சமமானதாகும். பின்னர், ஜூலை 20, 1976 இல், வைக்கிங் 1 செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய இரண்டாவது விண்கலமாகும். அதன் பணியை வெற்றிகரமாக முடித்த முதல் லேண்டர் இதுவாகும்.

10
(Image credit: NASA/MSSS/USGS)

ஜெஸரோ பள்ளம்: இங்கு புதைபடிவ நுண்ணுயிரிகள் பற்றி ஆராய இருக்கிறது பெர்செவெரன்ஸ் ரோவர். ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் மார்ஸ் எக்ஸ்பிரஸ் சுற்றுப்பாதையில் உள்ள உயர்திறன் கொண்ட ஸ்டீரியோ கேமராவால் படம் பிடிக்கப்பட்டது. 

8
(Image credit: NASA)

பெர்செவெரன்ஸ் ரோவர் இறங்கும் இடம் (வெள்ளை வட்டம்) படத்தில் காட்டப்பட்டுள்ளது.

3
(Image credit: NASA)

விஞ்ஞானிகள் இந்த இடத்தைத் தேர்ந்தெடுக்க காரணம், வண்டல், களிமண் மற்றும் கார்பனேட்டுகள் இருப்பதை கண்டறிந்தனர். நீர், வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களில் ஒன்றாக இருப்பதால், இந்த சமவெளி பகுதி தேர்வு செய்யப்பட்டது. ரோவர் இங்கு புதைபடிவ நுண்ணுயிரிகளைக் கண்டறியக்கூடும். இந்த படம் நாசாவின் செவ்வாய் கிரக மறுமதிப்பீட்டு ஆர்பிட்டரில் (NASA’s Mars Reconnaissance Orbiter) உள்ள கருவிகளால் எடுக்கப்பட்டது.

7
(Image credit: NASA/JPL-Caltech)

இந்த விளக்கப்படத்தில், ஜெஸரோ பள்ளம் நீரால் நிரப்பப்பட்டு பில்லியன் கணக்கான ஆண்டுகளாக இருந்திருக்கலாம் என்பதை விளக்குகிறது. ஏரியின் இருபுறமும் ஒரு நுழைவாயில் மற்றும் ஏரியின் வெளியில் செல்லும் வழி இருந்தது தெளிவாகிறது. ரோவர் தரையிறங்கியதும், கிரகத்தின் புவியியல் மற்றும் கடந்த காலநிலையைப் புரிந்துகொள்ள விஞ்ஞானிகளுக்கு பெர்செவெரன்ஸ் ரோவர் மாதிரிகள் எடுக்கும்.

எப்படி இறங்குகிறது என்பதை விளக்கும் படம் கீழே.

11
 (Image credit: NASA/JPL-Caltech)

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!