விண்வெளியில் பயணிக்க இருக்கும் டிராகன் – நாசா அதிரடி

Date:

சர்வதேச விமானநிலையத்திற்கு விண்வெளி வீரர்களையும், அவர்களுக்குத் தேவையான உணவு, உபகரணங்களை எடுத்துச் செல்லவும் மற்றும் அவர்களை பத்திரமாக பூமிக்குக் அழைத்து வருவதற்கும் விண்வெளிக் கலங்களை (Space shuttle) நாசா (NASA) பயன்படுத்தி  வந்தது. 2003 ஆம் ஆண்டில் ஏற்பட்ட கொலம்பியா விபத்தினாலும், விண்வெளிக் கலங்கள் அதிக செலவுகளை ஏற்படுத்தி வந்ததாலும் இத்திட்டம் (shuttle service) கைவிடப்பட்டது. ஆயினும் தற்போது வரை விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (International space station)  பயணிக்க ரஷ்யாவின் விண்கலமான “Soyuz” shuttle ஐ  அமெரிக்கா உட்பட 15 ( ISS உறுப்பினர்கள்)  நாடுகள் பயன்படுத்தி வருகின்றனர்.

space falcon 9
Credit: WPXI

அறிந்து தெளிக!

கொலம்பியா விண்கலமானது 1981 ஆம் ஆண்டு தொடங்கி 22 ஆண்டுகள் செயல்பாட்டில் இருந்து வந்தது. அதுவரை அது 27 வெற்றிகரமான தரையிரங்குதலைக் கண்டது.  கடைசியாக 16 நாட்கள் நடந்த விண்வெளி ஆய்வை முடித்துவிட்டு கொலம்பியா கலம் (பிப்ரவரி 1, 2003) காற்று மண்டலத்தில் நுழையும்போது கலத்தின் இடது இறக்கையில் ஏற்பட்ட துளையால் விண்கலம் விபத்துக்குள்ளானது. அதில் பயணித்த கல்பனா சாவ்லா உட்பட ஏழுபேர் மரணமடைந்தனர். 90 நொடிகளில் நடந்து முடிந்த இக்கோர விபத்தில் வெறும் சில உள்ளுறுப்புகளே மிஞ்சின.

இன்னும் ரஷ்யாவின் விண்கலத்தை பயன்படுத்துவதா ? என ரோஷம்  கொண்டிருந்த அமெரிக்கா  “சோயுஸ்” கலத்திற்கு மாற்றாக “டிராகன் 2” கன்டெய்னர்  (dragon 2 capsule ) எனும் புதிய கலத்தை ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) நிறுவனத்தோடு சேர்ந்து தயாரித்துள்ளது. சோதனை முயற்சியாக மார்ச் 2 ஆம் தேதி விண்ணில் இது ஏவப்பட உள்ளது.

falcon space x
Credit: Space

ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX)

ஸ்பேஸ் எக்ஸ் என்பது, 2002 ல் பொறியாளர் Elon musk என்பவரால் உருவாக்கப்பட்ட அரசு சாரா தனியார் நிறுவனம் ஆகும். நாசா உட்பட பிற நாட்டு மற்றும் தனியார் நிறுவனங்களின் செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ ராக்கெட் மற்றும் இதர விண்வெளி வாகனங்களை ஒப்பந்த அடிப்படையில்  தயாரிக்கும்/ மற்றும் ஏவும் நிறுவனம் ஆகும். பெரும்பாலும் நாசாவுக்கே அதிக ராக்கெட் தயாரிக்கும் இந்நிறுவனம் இதுவரை 33 வெற்றிகரமான ஏவுதலை நிகழ்த்தியுள்ளது (40 முயற்சிகளில்).

திரவ எரிபொருள் ராக்கெட் (Liquid Propellant Rocket), Propulsive Landing (Vertical Take Off, Vertical Landing), Dragon Spacecraft (சுய தேவைக்கு), Reusable rocket, சூரியனைச் சுற்றிவரும் தனியார் விண்கலம் (falcon heavy). இதில்தான் டெஸ்லா (Tesla) நிறுவனத்தின் புதிய ரக எலக்ட்ரிக் கார் ஒன்று டம்மி டிரைவருடன் சேர்த்து கடந்த ஆண்டு அனுப்பட்டது. (இந்த டெஸ்லா நிறுவனமும் எலன் மஸ்க் உடையது தான்.)

என மேற்கூறியஅனைத்தையும் செய்த முதல் தனியார் நிறுவனமாகும். இதுதவிர Boeing, Blue orgin, Virgin galactic எனப் பல தனியார் நிறுவனங்கள்  அமெரிக்காவை மையமாகக் கொண்டு விண்வெளித் துறையில் செயலாற்றி வருகின்றன.

nasa-rocket-launch-high-quality-6
Credit: NASA

டிராகன் 2

2010 ல் நாசாவுடன் இணைந்து கூட்டு முயற்சியில் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் தற்போது தான் நிறைவுக் கட்டத்தை எட்டியுள்ளது. இதன் ஏவுதல் சோதனை முயற்சி பலமுறை தள்ளிப்போடப்பட்டு இறுதியாக மார்ச் 2 ல் நாள் குறித்தாகிவிட்டது. இந்த வரிசையில் டிராகன் 1 என்பது ஆளில்லா சரக்கு விமானம் போன்றதாகும். டிராகன் 2 சோதனை வெற்றியடைந்தால், சொந்த மண்ணில் இருந்து விண்வெளி வீரர்களை அமெரிக்காவால் விண்ணுக்கு அனுப்ப முடியும். அவ்வப்போது ரஷ்யாவை நம்பிக்கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. சோதனையின் போது கலம் வெறுமனே சென்று ISS உடன் இணைக்கப்பட்டு பின் தானியங்கி கரங்களில் இருந்து  விடுவித்துக்கொண்டு அமெரிக்கா திரும்பும். அதன் பின்னர் ஜூலை மாதத்தில் அதன்மூலம் இரண்டு விண்வெளி வீரர்களை ISS க்கு அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது.

அறிந்து தெளிக!

ISS ஆனது கனடா, ஜப்பான், ரஷ்ய கூட்டமைப்பு, அமெரிக்கா மற்றும் 11 யூரோப்பிய உறுப்பு நாடுகளைக் (பெல்ஜியம், இத்தாலி , ஜெர்மன், டென்மார்க், பிரான்ஸ், நெதர்லாந்து, நார்வே, ஸ்பெயின், ஸ்வீடன் மற்றும் யு.கே) கொண்டு 1998 ஆம் ஆண்டில் ஏவப்பட்டு விண்வெளியிலேயே ஒன்றினைக்கப்பட்டது.  பின்வந்த ஆண்டுகளில் பல்வேறு பாகங்கள் இணைக்கப்பட்டு தற்போது பிரம்மாண்டமாக உருவெடுத்துள்ளது.

Trump-Budget-NASA
Credit: NASA

வருங்காலத்தில் 5 புது விண்வெளி நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. சீனா 1,  அமெரிக்கத் தனியார் நிறுவனம் ஒன்றின் 2 நிலையங்கள் (Bigelow Aerospace), நிலைவைச் சுற்றிவரும் ரஷ்யாவின் நிலையம் ஒன்று, ரஷ்யாவும் அமெரிக்காவும் இணைந்த ஒன்று. மேலும் பல நிலையங்கள் தனியாக திட்டமிடப்பட்டு நிதிப்பற்றாக்குறை காரணமாக ISS உடன் இணைக்கப்பட்டுவிட்டன. அதில் சில அருங்காட்சியகத்தில் உறங்குகின்றன. மேலும் கடந்த ஆண்டு சீனாவின் Tiangong 1 விண்வெளி நிலையம் ஆயுள் முடிந்து  பூமியில் குதித்தபோது வாயமண்டலத்தால் எரியூட்டப்பட்டு  அஸ்தியானது. அது தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் கரைக்கப்பட்டுவிட்டது.

இப்படி விண்வெளி ஆராய்ச்சி வருங்காலத்தில் அடுத்த கட்ட நகர்வை சந்திக்க இருக்கின்றன. அதற்கான முதற்படிதான் எலான் மஸ்கின் இத்திட்டம்.

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!