Update at 9.45PM: பூமியில் இருந்து பார்க்கக்கூடிய பகுதியில் தண்ணீர் உள்ளது என நாசா தகவல் வெளியிட்டது. இந்த கண்டுபிடிப்பானது, ஒரு கன மீட்டர் நிலவு மண்ணில் கிட்டத்தட்ட 12 அவுன்ஸ் பாட்டில் தண்ணீர் அளவு தண்ணீர் உள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது. இதை கண்டுபிடிக்க SOFIA (Stratospheric Observatory for Infrared Astronomy) எனப்படும் உலகிலேயே மிகப்பெரிய பறக்கும் தொலைநோக்கி பயன்படுத்தப்பட்டது. இந்த கண்டுபிடிப்புகள் Nature Astronomy இதழில் இரண்டு ஆவணங்களாக வெளியிடப்பட்டுள்ளன.
Update at 9.40PM: நிலவில் தண்ணீர் இருப்பதை உறுதி செய்த நாசா | NASA confirmed water on the sunlit surface of the Moon for the 1st time using SOFIA (Stratospheric Observatory for Infrared Astronomy) | Credit: NASA
அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, நாம் நிலவைப் பற்றி முக்கியமான ஒரு தகவலை தெரிந்துகொள்ள வேண்டும் என முடிவு செய்துள்ளது. நிலவு ஆராய்ச்சி தொடர்பான ஒரு மர்மமான புதிய அறிவியல் முடிவைப் பற்றி நாசா இன்று (அக். 26) வெளியிட திட்டமிட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு, இந்திய நேரப்படி இன்று இரவு 9.30 மணிக்கு தொடங்கிய நீங்கள் இங்கே கீழே உள்ள வீடியோவில் NeoTamil தளத்தில் பார்க்க முடியும்.
நாசா இன்று “நிலாவைப் பற்றிய அற்புதமான புதிய கண்டுபிடிப்பு” ஒன்றை வெளியிடவுள்ளது. 2024 ஆம் ஆண்டில் சந்திரனின் தென் துருவத்தில் விண்வெளி வீரர்களை தரையிறக்க ஆர்ட்டெமிஸ் திட்டத்தை பற்றியும் அறிவிப்பு இருக்கும் என நாசாவின் ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாசா அகச்சிவப்பு வானியல் ஆய்வு ஆய்வு (Stratospheric Observatory for Infrared Astronomy- SOFIA) என்ற தொலைநோக்கியை பயன்படுத்தி இந்த கண்டுபிடிப்பு செய்யப்பட்டுள்ளது. இது ஒரு பறக்கும் தொலைநோக்கியாகும் (Flying Telescope). சோபியாவின் கருவிகள் அகச்சிவப்பு ஒளியில் கவனம் செலுத்துகின்றன. நமது சூரிய மண்டலத்திலும் பிற விண்மீன் திரள்களிலும் பலவற்றை படம் பிடிக்கின்றன. இந்த தொலைநோக்கி அடிப்படையில் ஒரு ஜெட் விமானமாகும்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மார்ச் நடுப்பகுதியில் சோஃபியயா தரையிறங்கியது. பின்னர் ஆகஸ்ட் நடுப்பகுதியில் மட்டுமே மீண்டும் பறக்கத் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
மறக்காமல் மேலே உள்ள வீடியோவில் நாசாவின் அறிவிப்பை காணுங்கள்!