Home அறிவியல் உலகமே ஆர்வத்துடன் காத்திருக்கும் அந்த 6 நிமிடங்கள் - இன்று செவ்வாய் கிரகத்தில் என்ன நடக்கப்போகிறது...

உலகமே ஆர்வத்துடன் காத்திருக்கும் அந்த 6 நிமிடங்கள் – இன்று செவ்வாய் கிரகத்தில் என்ன நடக்கப்போகிறது தெரியுமா ?

செவ்வாய் கோளில் InSight தரையிறங்கும்

கௌண்ட்-டௌன்(Countdown)

[wpcdt-countdown id=”10212″]
27 நவம்பர் 2018,  12.30 AM முதல்  1.30 AM வரை நேரலையாக இந்நிகழ்வை  எழுத்தாணியில் காணலாம்.

தகிக்கும் வெப்பம், சுற்றிச் சுழலும் புழுதிப்புயல், கருணை என்பது துளியும் இல்லாத நிலம். செவ்வாய் கிரகத்தை இப்படித்தான் உருவகப்படுத்த முடியும்.

உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகள் செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்பும் ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகின்றன. ஆனால் மொத்த முயற்சியில் 40% சதவிகிதம் மட்டுமே வெற்றி பெறுவதாக அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான NASA குறிப்பிட்டிருக்கிறது. இருப்பினும் இன்று வரை ஆராய்ச்சிகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. அந்த வகையில் NASA தனது செவ்வாய் கிரகத்தின் ஆராய்ச்சியை மேம்படுத்தும் விதமாக இன்று Insight எனப்படும் தரயிறங்கு கலத்தினை செவ்வாயின் பரப்பில் நிலை பெற வைக்க இருக்கிறது.

mars-landing-curiosity
Credit: Earth sky

பூமிக்கும் செவ்வாய்க்கு இடைப்பட்ட தூரம் காரணமாக இந்த இரு கிரகங்களுக்கு இடையேயான தகவல் பரிமாற்றத்தில் கால தாமதம் ஏற்படும். உதாரணமாக விண்கலம் தரையிறங்கியவுடன் பூமிக்கு செய்தி அனுப்பும். ஆனால் 6 நிமிடங்கள் கழித்தே அத்தகவலை நாம் பெறமுடியும் என்பதால்  கலத்தின் நிலை குறித்துத் தெரிந்துகொள்ள 6 நிமிடங்கள் காத்திருக்கவேண்டும் . ஆங்கிலத்தில் 6 minutes of terror என்று அழைக்கப்படுகிறது. செவ்வாய் கிரகம் என்பதனால் விஞ்ஞானிகள் அனைவருமே நகத்தைக் கடித்துக்கொண்டு இந்தத் தரையிறங்குதலுக்காக காத்திருக்கிறார்கள்.

InSight தரையிறங்கப்போகும் அனிமேஷன் காட்சி

செவ்வாய் கிரகமும் விபத்துகளும்

செவ்வாயின் வட கோளத்தில் புயல்கள் அதிகம் இருக்கும் இடத்திலேயே பெரும்பான்மையான விண்கலங்கள் தரையை அடைகின்றன. தரையை அடையும் பொது வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் பல விண்கலங்கள் தரையில் மோதி சிதறியிருக்கும் பல வரலாறுகள் செவ்வாய்க்கு உண்டு.

தரையிறங்குதலில் சில படிநிலைகளே அதன் வெற்றியைத் தீர்மானிக்கிறது. செவ்வாயின் வளி மண்டலத்திற்குள் விண்கலம் நுழைந்த உடனே அதன் பின்புறம் பொருத்தப்பட்டிருக்கும் வெப்ப உமிழ் கலன் வெளிப்படும். அவை தொடர்ந்து நெருப்பு ஜூவாலைகளை வெளிவிடுவதன் மூலமாக விண்கலனின் வேகமானது குறைக்கப்படும். அதன்பின்னர் தரையிலிருந்து விண்கலம் 10 மைல் தொலைவில் இருக்கும்போது பாராசூட் திறக்கப்பட்டு அதன் துணையுடன் தரையில் வந்து சேரும்.

அறிந்து தெளிக !!
ஐரோப்பாவின் சார்பில் செவ்வாய்க்கோளை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட Schiaparelli விண்கலம் தரைப்பரப்பின் மீது மோதி விபத்துக்குள்ளானது. பின்புறம் இருந்த நெருப்பு உமிழ் கலம் இயங்காமல் போகவே எரிபொருள் அளவுக்கு அதிகமாக இருந்ததனால் விண்கலம் வெடித்துச் சிதறியது குறிப்பிடத்தக்கது.

கடைசி 2 கிலோமீட்டர் தூரத்தின் போது பாராசூட் தாங்கிய பின்பாகமும் கழட்டி விடப்படும். விண்கலத்தின் உள்ளே இருக்கும் பேட்டரியால் இயங்கும் என்ஜின் விண்கலம் தரையினை அடைந்தவுடன் தனது இயக்கத்தை நிறுத்திக்கொள்ளும். வினாடிக்கு 5.5 கிலோமீட்டர் வேகத்தில் இந்த விண்கலம் செவ்வாயின் வளிமண்டலத்தை அடையும் என கணிக்கப்பட்டிருக்கிறது.

mars surface landing
Credit: BGR

Insight விண்கலம் தரையிறங்குவதை உலகம் முழுவதும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். செவ்வாயின் வெளிவராத பல மர்மப்பக்கங்களை NASA வெளிக்கொண்டுவருமா என்பது இன்னும் சில மணிநேரங்களில் தெரிந்துவிடும். விண்கலம் தரையிறங்குவதை நேரடியாக பார்க்க எழுத்தாணி தளத்தில் வசதி செய்யப்பட்டுள்ளது.

- Advertisment -

Must Read

இயற்கை பாதுகாப்பு புகைப்பட விருதுகள் 2019: விருதுகள் வென்ற சிறந்த பிரமிப்பூட்டும் புகைப்படங்கள்

0
புகைப்படம் எடுப்பதில் உங்களுக்கு ஆர்வம் இருந்தால் NeoTamil -ன் புகைப்படங்களுக்கான தனிப்பக்கத்தை அவ்வப்போது பார்க்க மறக்காதீர்கள். நாங்கள் அடிக்கடி பதிவிடும் புகைப்படங்கள் உங்களுக்கு நிச்சயம் புகைப்படக்கலையில் வேறு கோணத்தை காட்டும்...