இந்த நேரலை இந்திய நேரப்படி 30 ஜூலை 2020, மாலை 4:30 மணிக்கு தொடங்கும்.
நமது பிரபஞ்சத்தில் பல விதமான விண்வெளி ஆய்வுகள் பற்றி உலக நாடுகள் அதிக கவனம் செலுத்தி வருகின்றன. இருப்பினும் இதில் செவ்வாய் கிரகத்தில் அதிகமான ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது. இதற்கு காரணம் செவ்வாய் கோள் மனிதன் வாழ ஏற்றதாக இருப்பது என்று கூறுகின்றன. இதனால் ஒவ்வொரு நாடும் செவ்வாய் கிரகத்தின் ஆராய்ச்சியில் தனது வெற்றியை நிலைநாட்ட வேண்டும் என்று போராடி வருகின்றன. இதில் நாசா தனது Perseverance Rover ஆராய்ச்சியில் ரோவர் ஒன்றை அனுப்பி ஆராய்ச்சி செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்கு மார்ஸ் 2020 (Mars 2020) என்று பெயரிட்டு ஜூலை 30 ல் விண்ணில் ஏவப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.
Also Read: செவ்வாய் கிரகத்தில் நாசா கட்டப்போகும் வீடுகளின் புகைப்படங்கள் வெளியீடு!!
Mars 2020 திட்டத்தில் தனது ரோவரை நாசா பலவேறு நோக்கங்களுக்காக பயன்படுத்த உள்ளது. நாசா தெரிவித்த அந்த நோக்கங்களை தெளிவாக அறிவோம் வாருங்கள்.
Perseverance Rover என்ன செய்யவுள்ளது?
எதிர்காலத்தில் மனிதன் செவ்வாய் கிரகத்தில் தரை இறங்க முக்கியமான தரவுகளை சேகரிக்கவும், மனிதன் கால்பதிக்க தேவையான தொழில்நுட்பங்களை அறியவும், பிறகு மனிதனுக்கு தேவையான சுற்றுச்சூழல் நிலைமைகளை வகைப்படுத்துவதும் இதன் நோக்கங்கள் ஆகும்.

இது மட்டுமில்லாமல் இன்னும் பலவற்றை ஆராய உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அதையும் நாம் இதில் தெளிவாக அறியலாம். அதாவது, கடந்த கால நுண்ணுயிர் வாழ்வின் அறிகுறிகளை அறிந்து கொண்டு இதன் அடுத்த கட்ட முயற்சியை தொடரவுள்ளது.
செவ்வாய் கிரகத்தின் பாறைகள் மற்றும் மண்ணினுடைய முக்கிய மாதிரிகளை சேகரித்து அதை ரோவர் மூலம் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பிலே தனியாக குவித்து வைக்கும். பிறகு அங்கு குவித்து வைத்த அந்த மண்மாதிரிகளை பூமிக்கு எடுத்து வந்து எதிர்கால மனிதன் பயண ஆராய்ச்சிக்கு ஆய்வு செய்வதாகவும் நாசா தெரிவித்துள்ளது. இதில் முக்கியமாக செவ்வாய் கிரகத்திலேயே ஆக்ஸிஜன் உற்பத்தியை சோதிக்க உள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
Also Read: செவ்வாய் கிரகத்தில் பறவையா? – நாசா வெளியிட்ட மர்ம புகைப்படம்!!

நாசாவின் Mars 2020 செவ்வாய் கிரகத்தில் தரையிரங்குவதற்கு ஜூலை மாதத்தில் பூமியும், செவ்வாய் கிரகமும் ஒன்றுக்கொன்று நல்ல நிலையில் இருப்பதாகவும், இதை ஏவுவதற்கு ஒரு வாய்ப்பாகவும் கருதி விண்ணில் பாயத்தயாராக உள்ளது. அது மட்டுமில்லாமல் இந்த காலகட்டத்தில் விண்ணில் ஏவினால் மட்டுமே செவ்வாய் கிரகத்தை குறுகியகாலத்தில் அடையலாம். மேலும், குறைந்த சக்தியில் வெற்றிகரமாக தன் இலக்கை அடைய முடியும் என்றும் தெரியவருகிறது.
Also Read:செவ்வாய் கோளில் இருந்து கேட்கும் சத்தங்கள் – நாசா வீடியோ வெளியிட்டது!!
மார்ஸ் 2020 விண்கலத்தை புளோரிடாவில் உள்ள கேப்கனாவெரல் விமானப்படை தளத்திலிருந்து (Cape Canaveral Air Force Station, Florida) Atlas V என்ற ராக்கெட் மூலம் செவ்வாய் கிரகத்திற்கு ஜூலை 30 ல் புறப்படத் தயாராக உள்ளது. இது பிப்ரவரி 18, 2021 ல் செவ்வாய் கிரகத்தில் Jezero crater என்ற இடத்தில் தரையிறங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல விண்வெளி செய்திகளுக்கு நியோதமிழின் விண்வெளி பக்கத்தை எட்டிப்பாருங்கள்!